கடவுளின் சந்தோஷம் .

 


.
மழையின்
துவானம்
வெறித்து சற்றே
மேகங்கள் விலகி
ஆதவனின் ஓளி
பூமியை தொட்டது
அலுவலகம் செல்ல
கிளம்பும் போது
அம்மாவின் சொல்லை
மறுத்து குடையை
வீட்டின் கதவில்
தவிக்க விட்டே வந்தேன்
சனிக்கிழமை என்றே
அலுவலகத்தில் அரைநாள்
வேலையை முடித்து
வெளியே வந்த போது
இருண்டு கொண்டு
கருமேகங்கள் வானில்
சூழந்தன சில நிமிடங்களில்
சாரல் மழை அடைமழையாய்
பொழிந்தது மழைக்கு
பயந்து ஓர் டீகடையின்
வாசலில் அடைக்கலமாக
நின்றேன்... சிறுவர்கள்
இருவர் மழையில்
நனைந்தே ஓடிவந்தனர்
பாதி நனைந்து
புத்தகப்பையும்
மழையில் ....
இன்னிக்கு ஏன்
சாயங்காலம் மழை
பெய்யுது தெரியுமாடா....
மற்றவன் விடையின்றி
விழித்தான்....
டேய் மச்சான் நமக்கு
பள்ளி கூடம்
திறந்தது பார்த்து
கடவுளுக்கு சந்தோஷமாயிட்டாரூ
அதான் மாலை மழை

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...