முதல் காதலின் ரணங்கள் ஆறுவதற்கு முன்னரே மயிலிறாக வந்தவள்.
அவனின் காதல் காயங்களை நன்கு உணர்ந்த காரணத்தால் அபரிமிதமான தன் காதலை பாறையாக இருந்தவனின் மனதில் மலரச்செய்தாள்.
அன்பெனும் பாசத்தை மழை தூவானமாக தெளித்து..
பேசினால் தான் காதல் வளரும் என்று காசை வாங்கிட்டு கேமரா முன்னால் மட்டும் ஹீரோ கட்டி புடிச்சு காதல் வசனம் பேசி ஆடி விட்டு..
அந்த ஹீரோ ஷெடில் இல்லாத போது...
இவன் எல்லாம் ஓர் மனுஷனா, அவனும் அவன் மூஞ்சியும் என்ன செய்யுறது இந்த பீல்டுக்கு வந்தாச்சு.
நாய் வேஷம் போட்டா குலைச்சு தானே ஆகணும் என்று உண்மையை கூட பேச இயலாத நடிகை போல் முகத்தில் ஒன்றும் முதுகில் ஒன்றும் பேசும் திரைப்பட காதலி போல் அல்லவே அவள்.
நீங்க என் கூட இருந்தாலே போதுமென்று வாழ்வில் வசந்தமாக வந்தவள்.. உனக்கு தருவதற்கு எதுவுமே இல்லையடி என்னிடமென்றே அவளை தள்ளி விட்டேன்
காதல் என்பது எதிர்பார்த்து வருவதில்லை. காதல் பதிலுக்கு காதலை மட்டுமே எதிர்ப்பார்க்கும் என்று தத்துவம் மழை பொழிந்தாள்.
என்னை கட்டிகிட்டு வாழ்வதும், கழுதையை கட்டிட்டு வாழ்வதும் ஒண்ணுதான்...
எங்களுக்கு கோபம் வந்தா ஊரே அதிரும் படி கத்துவதை தவிர வேறு எதுவுமே தெரியாது என்றேன்.
தான் அணிந்த பகட்டான ஆடைகளை வியர்வை அழுக்கு என்று தள்ளி வைக்கும் மனிதர் நீங்களும் கழுதையும் அல்லவே..
நீ சொல்வது எனக்கு எதுவுமே புரியவில்லை
ஆனால் நீங்க சொல்லாதது கூட எனக்கு புரிஞ்ச காரணத்தால் பேசுறேன்.
எத்தனையோ மனிதரின் வியர்வை நாற்றமும் அசிங்கமான ஆடைகளையும் எந்த வித முககோணலும் இல்லாமல் சுமந்து செல்வது கழுதை தானே என்றாள்.
உனக்கு என்மேலே ஏதோ கிறுக்கு பிடிச்சு இருக்கு, அதான் இப்படி பேசுறே.அல்லது யாராவது ஓருத்தன் உன்னை காதலிச்ச ஏமாத்தி இருக்கணும்.
அதான் தத்துவ ஞானி மாதிரி பேசுறே.நானே இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோட இருப்பேன்னு தெரியலை.
ஏன் இப்படி விரக்தியா பேசுறீங்க
ஏன்னா தினமும் நியூஸ் பார்க்கிறேன் தானே, நல்லா குடிச்சு வண்டி ஓட்டிக்கொண்டு பைபாஸ்ல போறாங்க தன் ஆயுள் முழுவதும் சாராய கடை பக்கமே போகாத ஓருத்தன் மேல தானே வண்டி போய் ஆக்சிடென்ட் பண்ணுது
தயவுசெய்து நம்பிக்கையா ஏதாவது பேசுங்க
அப்படியா, நல்லாகேட்டுக்கோ என்னை விட ரொம்ப நல்லங்க எத்தனையோ பேர் இருக்காங்க, நீ அவங்கிட்ட போய் உன் மனப்பாடம் பண்ணின இந்த காதல் வசனத்தை பேசு.
உனக்கும் ஓருத்தன் கிடைப்பான், அவனை கல்யாணம் கட்டிகிட்டு பார்க் பீச்சு சினிமா தியேட்டர் ஷாப்பிங் மால் சொந்தகாரங்க கல்யாண வீடு என்று நீ சந்தோஷமா வாழு.
ஏன் நான் உங்களை கட்டிக்க கூடாதா...
ஏன்டீ நீ என்ன லூசூ. எனக்கு மத்தவங்க மாதிரி காதல் வசனம் பேச தெரியாது.
முன்பின் தெரியாத யாராவது ஓர் பொம்பள வந்து உதவி கேட்டா கூட செய்வேன்.. அவங்க பெயர் முகவரி கேட்காம உதவி செய்வேன். அதுக்காக டீ வடைன்னு காசு செலவழிக்க மாட்டேன்.
தம்பி இந்த மூட்டை தூக்கி தலை வையு..இந்த பஸ் எங்க போகுது.இப்படி சின்ன சின்ன உதவிதான் செய்வேன்..
பத்து பைசா கூட யாருக்கும் அனாவசியமாக செலவழிக்க மாட்டேன்.. ஏன்னா உதவி செய்ய மனசு இருந்தாலும் நூறு ரூபாய் காசை கூட பட்ஜெட் போட்டு வாழுற சாதாரண மத்திய வர்க்கம் தானே
அதுவுமில்லாம ஓருத்தங்க கிட்ட பேசுனா தான் உறவு வளரும் அப்படின்னு சொல்லுறாங்க.
எனக்கு யாரிடமும் பேசவே பிடிக்காது அதிக பட்சமாக இரண்டு வார்த்தை அதுக்கு மேல பேச எனக்கே எரிச்சலா இருக்கும்.
எங்கேயாவது காடு மலை அப்படின்னு தனியா போய் உட்கார்ந்து கிட்டு, வானத்தை வெறிச்சு பார்த்துவிட்டு இந்த மேகங்களை போலத்தானே மனுஷ வாழ்க்கை.
இந்த 80 வருட வாழ்க்கையில் எப்படி எப்படி எல்லாம் பொய் சொல்லி மனுஷன் பொழைக்கிறான்.. தன் கீழே இருப்பவர் பொய் சொல்ல கூடாது என்று நினைப்பவன் ஏனோ அதிகமா பொய் சொல்லுறான்.
சம்பளம் கூடுதலா கேட்டா கம்பெனியே நஷ்டத்துல தான் ஓடுது நீ வேற கம்பெனி வேணா போ என்கிறார் முதலாளி.
இந்த மாதிரி உலகத்தில் பிறந்தது தப்புன்னு நினைச்சு சிரிக்கிற ஆளூ நான்..
எனக்கு எல்லாம் குடும்பம் குழந்தை என்று வாழ்வும் தெரியாது.. அப்படி ஓர் ஆசையும் என் மனசுல இல்லே.. வயசான அப்பா அம்மா இருக்கிற வரை இருப்பேன்.
அதுக்கு அப்புறம் நீங்க என்ன பண்ணுவீங்க..
எங்கேயாவது மனம் போன போக்கில் போக வேண்டியது தானே
உங்களுக்கு ஓர் வாழ்க்கை வேண்டாமா..அப்போ உங்க பூர்வீக சொத்து.
அட நீ வேற அவங்க சேர்த்து வைச்ச சொத்தை அவங்களே கொண்டு போக முடியலை. அதை நான் ஏன் தூக்கிட்டு சுமக்கணும். என்னோட சொத்தை ஆட்டைய போட என்னோட சொந்த்காரங்களே இருக்காங்க.
அவங்களுக்கு தெரியாதே, என் சொத்தை ஏமாத்தி வாங்க பார்க்கிறாங்க.
தேவைன்னு கேட்டா நானே தூக்கி கொடுத்துவேன்.ஏன்னா பாசத்தை விட சொத்து எனக்கு பெரிசுல்ல.
ஆனா அவங்களுக்கு என்னோட சொத்து மட்டுமே தான் பெருசா தெரியுது.என்னோட பாசத்தை புரிஞ்சுக்க யாராலும் முடியாது.
ஏனோ சொல்லும் போது அவனின் கண்களில் கண்ணீர் திரண்டது.
தள்ளி நின்று ரோட்டை வெறித்து பார்த்த படி...
உங்க அன்பு எனக்கு புரியுது, நான் உங்களை கட்டிகிட்டு ரொம்ப சந்தோஷமா வாழ வைப்பேன் என்றபடி அவனின் தோளில் சாய்ந்தாள்.
முதன்முறையாக ஓர் பெண்ணின் ஸ்பரிசம், எத்தனையோ நாட்கள் எதிர்பாராமல் அவளின் உடல் அவனை உரசி சென்ற நாட்கள் உண்டு.. அந்த நாட்களில் எல்லாம் எரிந்து விழுந்தான்
ஏன் இப்படி உரசிட்டு போறே, உனக்கு அறிவு இல்லையா
இரண்டு அடி தள்ளிப்போ..என்ற போதும் நான் உங்களை கடத்திட்டு போயிடல அவசரத்துல ஏதோ தெரியாம பட்டுவிட்டது.
இதோட நாலாவது தடவை நீ என் மேல உரசுறது, எனக்கு யாரும் என் கிட்ட வந்தாலே பிடிக்காது.
பிறகு கோபத்துல எதாவது சொல்லிட்டா கண்ணீர் விட்டு அழுவே தயவுசெய்து என பக்கதுலே ஏன் வர்றே என்று பேசியவனின் தோளில் அவள்.
ஏனோ எதிர்த்து பேச மனமில்லாமல் அமைதியான்.
ம்ம்ம் ஏதாவது பேசுங்க என்றாள்.. என்ன பேசுறது என்றவனிடம் ஏதாவது இப்போ உங்க மனசுல உள்ளதை பேசுங்க என்றாள்.
பக்கத்து வீட்டு பாட்டி பாத்ரூம்ல கீழே விழுந்ததுடுச்சு.. அவங்க மகனும் மகளும் பாரின்-ல இருக்காங்க பாவம் பாட்டி தனியா கஷ்ட படுது
ஏன் நீங்க போயி உதவ வேண்டி தானே.
எனக்கு போயி உதவ ஆசை தான், ஆனா அந்த பாட்டியோட மகள்.அம்மா நீ யாரையும் இந்த காலத்துல நம்பாதே.எல்லோரும் நம்ம கிட்ட இருக்கிற பணத்தை புடுங்க தான் பேசுறாங்க அப்டின்னு சொல்லிட்டு போயிட்டாங்களா.
அதனால் உன் உதவி தேவையில்லை தம்பின்னு சொல்லுச்சு
சின்ன விஷயத்துக்கு வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பீங்களே.அந்த நேரத்தில் உங்களுக்கு கோபமே வரலையா
எதுக்கு அவங்க உண்மையை தானே சொல்லுறாங்க.
அப்போ நீங்க அவங்க சொத்துக்காக தான் போயி பேசுனீங்களா..
அவளின் கேள்வியில் பக்குவம் இருந்தது. இதுவரை அவன் கண்ட கோணங்களை மாற்றி யோசிக்க வைத்தது.
மெளனமாகவே மாறினான்.
ம்ம் பதில் சொல்லுங்க..
ப்ளீஸ் எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை..
நீ சொல்வது கூட சரியா இருக்கலாம்...
நான் ஓர் விஷயம் கேட்டா பொய் சொல்லாம பதில் சொல்லுவீங்களா..
ம்ம் கேளூ... எனக்கு தெரிஞ்சா பதில் சொல்லுறேன்..
நீங்க யாரையாவது இதுக்கு முன்னாடி லவ் பண்ணி இருக்கீங்களா..
நீ இன்னிக்கு கட்டி இருக்கிற பூப்போட்ட சேலை ரொம்பவே அழகா இருக்கு, ஏதாவது பங்ஷன் வீடா..
இதை பல நாள் கட்டிகிட்டு ஆபிஸ் வந்திருக்கேன், ஓர் நாள் கூட உங்களுக்கு தெரியலையா..இப்போ தான் உங்க கண்ணுக்கு புதுசாதெரியுதா..
சில நிமிஷமா இந்த உலகமே எனக்கு ஏதோ புதுசா இருக்கிற மாதிரி தான் தோணுது.நீ முதல் நாளில் இந்த சேலை கட்டிக்கொண்டு முல்லையும் கனகாம்பரமும் சேர்த்து கட்டிகிட்டு வந்த போதே. நீ இன்று பார்க்கிறது தேவதை மாதிரி இருக்கேன்னு சொல்லணுங போல தோணுச்சு.
பிறகு ஏன் சொல்லவில்லை, ஏன்னா அப்போ உரிமை இல்லை..
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, வேற ஏதோ பேசுறீங்க.
நான் உன்கிட்ட பொய் சொல்ல விரும்பலை. அதேபோல உண்மையை சொல்லி உன் மனசை காயப்படுத்தவும் விரும்பலை, எனக்கு தர்மசங்கடமான நிலையை உண்டு பண்ணாதே..
அன்னிக்கு உரிமை இல்லை என்றீங்க இன்னிக்கு என்னவாம் அதையாவது சொல்லுங்க
இப்போ ரொம்ப உரிமையும் இருக்கு,அதே சமயத்தில் உன் கேலியான பேச்சை ரசிக்கிற பொறுமையும் இருக்கு.. எனக்கு என்னை வித்தியாசம் பார்க்க தோணுது..
ஏன் அப்படி...
எனக்கு எதுவுமே சொல்ல தெரியலை..ஆனா ஏதோ மனசு அமைதியா இருக்கிற மாதிரி இருக்கு.
நீங்க கோப படமாட்டீங்கன்னா சொல்லுவேன், அப்புறம் நீங்க என்னை திட்ட கூடாது சரியா..
அவளின் நெற்றியில் விழுந்த ஓர் சிறு தூசியை தனது கைக்குட்டையால் துடைத்தான்.
ம்ம்ம் சொல்லு பார்க்கலாம்.
ஏன்னா இது கழுதையின் காதல் என்று அவனின் முகத்தை பார்த்தாள்.
அவனோ சிரித்தபடி சொன்னான்..இரு கழுதைகள்.
உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா.
அவனோ மேற்கொண்டு பேசாமல் அவளின் தோளை பற்றினான்.
சாலையில் மறுபுறத்தில் இரு கழுதைகள் செல்வதை பார்த்து இருவரும் சிரித்த படி சொன்னார்கள்
இரு கழுதைகள்
No comments:
Post a Comment