புகைப்பட கலைஞன்..

 


.
.
போர் சூழலில்
துப்பாக்கிகளில்
தோட்டாக்களை
நிரப்பிவிட்டு
அதிகாரத்தில்
அனைத்தையும்
அடக்கி விட துடிக்கும்
மனிதர் போல் அல்லாமல்
துப்பாக்கியை விட
கனமான கேமிராக்களை
தோளில் சுமந்து
வனாந்திர காடுகளில்
சுற்றித் திரிந்து
கொடிய விலங்குகளையும்
அனைவரும் ரசிக்கும்
வகையில் அழகான
ஓவியம் போலவே
கேமிராவின் கண்களால்
சுட்டுத் தள்ளுகிறான் ‌‌
வண்ணமயமான
புகைப்படங்களாக....
வனவிலங்குகளும் கூட
பூனை குட்டிகள் போலவே
சமத்தாக அவனின்
கேமிரா கண்களில்...
மனிதர்கள் யாருக்கும் ஏன்
வனவிலங்கிற்கும் கூட
தீங்கு நினைக்காத
உன்னத தொழில் செய்யும்
எனது அருமை நண்பன் ஓர்
புகைப்பட கலைஞன்..

 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...