சிக்கன் பிரியாணி

 


.
.
தேர்தல்
பரப்புரையென்றே
பல நாட்களுக்கு
வீட்டில் தங்காமல்
இரவு பகலாக
ஊர்சுற்றி
யாரோ ஒருவரை
ஜெயிக்க வைக்க
உழைத்து விட்டு வந்தவன்
சட்டைப்பையில்
உழைப்புக்கு
கிடைத்த கூலியாக
சில காகிதங்கள்
ஏய் புள்ள இந்தா
"சம்பாதிக்க ....." என்றாயே
கொண்டு வந்த
பிரியாணி பொட்டலத்தை
ஆசையுடன் பிரித்து
கிழிந்த கட்டிலில்
கிடந்த அன்பு மகனுக்கு
தந்தான்.... புன்னகையுடன்
சிறுவன் மழலை
மாறாமல் கேட்டான்...
அப்பா அடுத்த வாரமும்
நீ ஊர்சுத்த போவியா...
ஏன்டா கண்ணா....
அப்போ தானே நீ
வாங்கிட்டு வாரே
சிக்கன் பிரியாணி

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...