கேசவன் பட்டாபி என்ற இரண்டு நண்பர்கள் இருந்தார்.அதில் கொஞ்சம் ஏழ்மையாக இருந்த பட்டாபி அடிக்கடி கேட்பான். எங்கே போனாலும் என்னை மறந்துற மாட்டீயே கேகசவா
ஏன்னா நீங்க எல்லாம் பணக்காரங்க என்னை மாதிரி ஏழைகளை எல்லாம் நீ நினைச்சு கூட பார்க்க மாடீங்க.
உங்களுக்கு எல்லாம் பணத்தை தான் நல்லா சம்பாதிக்க தெரியும்.
ஆனா எங்களுக்கு பாசத்தை மட்டும் தான் சம்பாதிக்க தெரியும் கவலையோடு சொன்ன பட்டாபி
அட பட்டாபி, நீ ஏன் இப்படி பேசுற நான் வருங்காலத்தில் பணக்காரனா வருவேன் என்றெல்லாம் தெரியாது.பணம் இன்று ஓருத்தர் கையில் இருக்கும் மறுநாள் இன்னொருவர் கையில் இருக்கும் ஆனா நம்ம நட்பு என்றுமே மாறாது.
நீ என்னை எப்போ வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம் என்ற கேசவன்.
அப்போ நீ எங்க வீட்டுக்கு எல்லோம் வரவே மாட்டேன் அப்படிதானே.
பட்டாபியின் மனம் கஷ்டப்படக்கூடாதே என்று அவனின் இல்லம் சென்று ஓர் நாள் முழுவதும் அவனை போலவே தானும் வாழ்ந்தான்.
காலங்கள் ஓடியது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று கேசவனின் தந்தை சொல்லி வற்புறுத்திய பொழுது எல்லாம் அவனுக்கு பட்டாபி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
விளைவு தந்தை எதிர்த்து பேசினான் பாசம் தான் பெருசு என அடிக்கடி புலம்ப ஆரம்பித்தான்.
தன் தங்கையை பட்டாபிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமா அம்மா அவனை போல ஓர் சிறந்த மனிதன் உலகத்துல இல்லை என்றான்
கேசவனின் தங்கை சொன்னாள், அண்ணா சொல்லுறே என்று தப்பா நினைக்காதே. உனக்கு வேணா அவன் பெரிய நண்பனா இருக்கலாம்.பாசத்தை தான் பெருசு என்று சொல்லலாம்.
ஆனா ஓர் நாள் உனக்கு உண்மை தெரிய வரும் போது புரிந்து கொள்வாய்.
இந்த உலகத்துல பணத்தை சம்பாதிக்க ஓவ்வொரு மனுஷனும் ஓவ்வொரு வழியை தேர்வு செய்கிறான்.
இங்கே சில பேர் காதல் என்ற பெயரில் பணத்தை நிறைய சேர்த்து வைச்சிருக்கிறவனோட பொண்ணைத்தான காதலிக்கிறாங்க
தயவுசெய்து சீதா இதுக்கு மேல என் நண்பனை பத்தி பேசுன நான் உன்னை அடிச்சாலும் அடிச்சுடுவேன். ஹாலில் அமர்ந்திருந்த அப்பா ஆவேசமாக எழுந்து வந்து கத்தினார்
ஏன்டா அவ்வளவு திமிரா உனக்கு, நான் செல்லமா வளர்த்த பொண்ணை உன்னை மாதிரியே ஊதாரியா சுத்துறவனுக்கு கொடுக்க சொல்லுறீயா.
அப்பாவின் மீது காட்ட முடியாத கோபத்தை சீதா மீது காட்டினான்.
அம்மா நான் வெளியே போயிட்டு வர்றேன்.போகும் போது அவளை வேகமாக தோள் பட்டையில் இடித்து தன் கோபத்தை காட்டினான்
அம்மா, இவன் எதுக்கு என் மேல இவ்வளவு கோபத்தை காட்டுறான்.
எனக்கு இவனை விட்டா வேற யாரும்மா சொந்தம்ன்னு இருக்கா. அவன் இஷ்டப்பட்டா.. அவன் மனசு சந்தோஷமா இருந்தா அது எனக்கு போதும்மா நான் வேணா அந்த பட்டாபிய கண்டிக்கிறேன்.
பாவம், தன் இருசக்கர வாகனத்தை எடுத்து வேகமாக வெளியேறிய கேசவன் காதுகளில் சீதாவின் சொற்கள் விழுந்திருக்க நியாயமில்லை.
உண்டு, உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. உங்க அண்ணனுக்காக அந்த பட்டாபிய கட்டிக்கிறேன்னு சொல்லுறே.இதுக்காகவா நாங்க உன்னை கஷ்டபட்டு டாக்டருக்கு படிக்க வைச்சோம்.
உனக்கு நல்ல இடத்துல வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருக்கோம்.
அம்மா, நீ ஒண்ணு புரிஞ்சுகோ பணத்தை விட பாசம் தான் முக்கியம்.ஆனா முகம் தெரியாத யாரோ ஓருத்தருக்கா வாழ்வதை விட என் அண்ணன் சந்தோஷமாக இருந்தா அதை விட பெரிய சுகம் உலகத்துல வேற என்னம்மா இருக்கு.
உங்க அண்ணன் பைத்தியம் உனக்கும் புடிச்சிருக்கு. ஓர் வேளை கல்யாணத்துக்கு பிறகு பட்டாபி குணம் மாறுனா என்னடீ பண்ணுவே...
என்னோட தலையெழுத்து அப்படி இருந்தா அதை சிரிச்சுகிட்டே எத்துப்பேன். ஏன்னா எனக்கு என்னோட கல்யாணத்துக்கு பிறகும் அண்ணன் என் கூட பேசிட்டு இருந்தா அதுவே ஓர் பெரிய சொத்து தான்.
ஏனோ ராணி பேசாமல் மெளனமாகி நின்றாள். கேசவனின் அப்பா கைலாஷ் சொன்னார் .
பார்த்தீயாடீ என் பெண்ணோட மனசை உன் தம்பியும் அவன் பொண்டாட்டியும் எவ்வளவு தூரம் காயப்படுத்தி வைச்சிருக்காங்க.அவனுங்க எல்லாம் ஜென்மத்துக்கும் மேற்கொண்டு அவரை பேச விடாமல் அவரின் வாயை தன் கைகளால் பொத்தினாள் சீதா.
வேண்டாம்ப்பா, நீங்க எதுவும் சொல்லிடாதீங்க.ஓர் வேளை உங்க சொல் பலிச்சுட்டா, பிறகு அம்மா மனசு எப்படி வேதனைபடும்.
அவளின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தார்.உன் நல்ல மனசுக்கு நீ ரொம்ப நல்லா இருப்பே செல்லம்.
வருடம் உருண்டது, சீதா வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா போனாள்.
கேசவன் பாசம் தான் பெருசு என்று புலம்பி புலம்பியே. அப்பா வழியில் மிகவும் கஷ்டபட்ட அவரின் சித்தி மகள் தங்கை வழியில் ஓர் பெண்ணை மணந்து கொண்டான்.
என் சொல் கேட்டாம போனாது கூட பரவாயில்லை, ஏதோ என் தங்கை வழி சொந்தம் நல்ல படியா நிலைச்சு போச்சு. அடிக்கடி தன் மருமகளிடம் சொல்லி சந்தோஷம் கண்ட கைலாஷ்
என்னங்க நீ மாமாகிட்ட ஓர் நாளாவது அன்பா பேசுங்க அவர் எவ்வளவு மனசு கஷ்டபடுறார் தெரியுமா.
ஏய் புவனா நீ சும்மா இரு.அவருக்கு என்னவாம் அதான் அவர் இஷ்ட படிதானே எல்லாம் நடந்துச்சு. அவர் பொண்ணுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தெரியுமா உனக்கு.
தன் நண்பன் பட்டாபிக்கு தங்கையை திருமணம் செய்து வைக்காத அப்பாவிடம் பேச்சை மெல்ல மெல்லமாக குறைத்து பேசுவதையே விட்டு விட்டான்.
வயதான காலத்தில் தன் அப்பாவின் வியாபாரத்தை கவனிக்காமல் இரவு நேர காய்கறி மார்க்கெடில் வரவு செலவு கணக்கு பார்க்கும் வேலையில் சேர்ந்தான்
பல வருடங்களுக்கு பிறகு கோவிலில் தன் பழைய நண்பன் பட்டாபியை பார்த்தான். பாசம் தான் பெருசு என்றவன் மிகப்பெரிய பணக்கார தோரணையில் வந்திருந்தான். அவனருகில் ஓர் அழகிய இளம் பெண் அவளும் கூட ஓர் பெரிய பணக்கர வீட்டு பெண் போலவே காணப்பட்டாள்.
மிகுந்த அன்புடன் வேகமாக அவனருகில் சென்று அவனின் கைகளை பற்றி டேய் பட்டாபி, எப்படிடா இருக்கே என்று விசாரித்தான்.
அப்போது தான் பட்டாபி தன் சுயரூபத்தை காட்டினான்.ஏய் ச்சீய் தள்ளிப்போ. அழுக்கு வேட்டி கையோட என்னை வந்து தொடுறீயே உனக்கு கொஞ்சம் கூட இங்கிதமில்லையா...
அவனின் சொல்லை கேட்ட கேசவனின் கண்கள் கலங்கியது.டேய் பட்டாபி நான் உன் நண்பன் கேசவன் டா. நீ கூட அடிக்கடி சொல்லுவீயே பணத்தை விட பாசம் தான் பெருசுன்னு..
ஏய் நீ முதல்ல தள்ளி நின்னு பேசு.உன் மூஞ்சியும் முகரையும்.. பணக்காரங்கிட்ட எப்படி பழகணும் என்று உனக்கு தெரியாதா கேலியாகவும் கோபத்துடன் சொன்னான்.
அனைவரும் தன்னையே பார்ப்பதை உணரந்த கேசவன் விலகிச் சென்றான்..
யாருங்க அது உங்க நண்பரா உடன் வந்த பெண் அவனிடம் கேட்பது அவனின் காதுகளிலும் விழுந்தது.
இங்க பாரு நீ என்கிட்ட நிறைய கேள்வி கேட்காதே. உங்க அப்பா உன்னை நல்லாபார்த்துக்க சொல்லி இருக்காரூ..நீ யாராவது ஓர் ஏழையை பார்த்தாலும் உடனே கண் கலங்கி அழுதிடுவீயாமே.அதனால் தான் உனக்கு உங்க அப்பா சொத்தை தர மறுக்கிறார்.
நமக்கு அடுத்த மாதம் கல்யாணம் ஆனால் தான் அந்த சொத்து நமக்கு கிடைக்கும் புரியுதா என்றான்.
அவர்கள் பேசுவதை சுற்றி நின்ற அனைவரின் காதுகளில் விழுந்தது.
பட்டாபியின் சொற்களை நினைக்க நினைக்க அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது..
பாசம் தான் பெருசுன்னு சொன்ன நீயா இப்படி மாறிட்டே.. அல்லது உன்னோட இயல்பான குணமே இது தானா தன்னை தானே கேட்டுக் கொண்டே அந்த பெரிய சிவாலயத்தில் ஜன நடமாட்டம் இல்லாத மரத்தடி விநாயகர் எதிரே போய் அமர்ந்தான்.
யாரிடம் சென்று சொல்வது இதை மனைவிடம் சொன்னாள். அல்லது தங்கையிடம் சொன்னாள் அல்லது அப்பாவிடம் சொன்னாள் சிந்திக்க சிந்திக்க ஏனோ அவர்கள் எல்லாம் கைகொண்டி சிரிப்பது போல் இருந்தது..
மனதிற்குள் எரிமலை வெடிப்பது போல் இருந்தது.. எதிரில் இருந்த விநாயகர் சிலையிடம் முறையிட்டான்
ஏன் பிள்ளையாரப்பா, பணத்தை விட பாசம் தான் பெருசுன்னு அடிக்கடி சொன்னவன் இன்னிக்கு எப்படி பேசுறான் பார்த்தீயா..இவனை நல்லன்னு நம்பி தங்கச்சிய இவனுக்கு கட்டி வைக்க நினைச்சோமே நல்லவேளே என் தங்கச்சி.
அவளுக்கு என்னை விடவும் குழந்தை மாதிரி மனசு உனக்கு தெரியுமா.சிறுவயது முதல் அவர்களின் ஓவ்வொரு செயலையும் அந்த கடவுளிடம் சொல்லி அழுதான்.
அவ கல்யாணம் ஆகி அமெரிக்கா போயி நாலு வருஷமாச்சு தினமும் போன் போட்டு பேசுவாளாம் அண்ணனை என்கிட்ட பேச சொல்லுங்க என்று கெஞ்சுவாளாமே..கேவி கேவி அழுதான்.
அவனின் அழுகை சத்தம் மண்டபத்திலும் பட்டு எதிரொலித்தது.
ஆண்டவா, இந்த நிமிஷம் சீதாவ பார்க்கணும் போல இருக்கு..ஏன்னா என் தங்கச்சி ரொம்ப நல்லவ தெரியுமா
சில நிமிடங்களுக்கு பிறகு அவனின் மனம் அமைதியானது.
கோவிலை விட்டு வெளியே வந்தவனின் கண்களில் மீண்டும் பட்டாபி.ஆனால் இந்த முறை கேசவன் சுதாரித்து கொண்டான்.
ச்சே இதுக்கு தான் நான் கோவிலுக்கே வருவது கிடையாது. கார் வாங்க காசில்லாத நாய் பசங்க. பணம் சம்பாதிக்க துப்பில்ல ஆனா ஓர் பணக்காரன் வண்டிய வெளியே எடுக்க முடியாத படி பைக்கை நிப்பாட்டி விட்டு போறானுங்க..
பட்டாபியின் பேச்சு கேட்டது.. கடவுளின் விளையாட்டு அலாதியானது. பட்டாபியின் குணத்தை மீண்டும் மீண்டும் காட்டி சிரித்த கடவுள்.
நேராக சென்று அவனின் பைக்கை எடுத்தான் அந்த நேரத்தில் இன்னும் சிலர் வந்து தங்களின் பைக்கை எடுத்து சென்றனர்.
இப்போது பட்டாபி கார் செல்ல வழி ஏற்பட்டது ஆனால் பட்டாபி ஏற்படுத்திய வலி போக மறுத்தது.
வேண்டுமென்றே பட்டாபி அவனின் காதுகளில் விழும் படி பேசினான். பிச்சைக்கார நாயீ. அப்பன் காசுல வாழுறாங்க.
திரும்பி அவனை பார்க்கவும் குற்ற உணர்வில் தலை குனிந்த பட்டாபி. முன் சீட்டில் இருந்த பெண் சொன்னாள் ஏங்க அவரை பார்த்தா ரொம்ப நல்லவரா தெரியது அவர் மனசை ஏன் காயப்படுத்துறீங்க.
அப்போ நீ வேணா அவனை கட்டிக்கோ, அவளின் மதையும் கீறினான்.
அவளின் கண்ணும் கலங்கியது.
காரை நோக்கி காரி துப்புவதற்காக திரும்பிய கேசவனின் கண்ணில் அவளின் முகம் தெரிந்தது.ச்சே நாம கோபத்தில் ஏதோ ஓண்ணு செஞ்சா அது இந்த பொண்ணோட மனசையும் தானே காயப்படுத்தும் என்று நினைத்தவன்.
நீ நல்லா இரு என்பது போல சைகை செய்து விட்டு விலகி போனான்..
சாலையின் சற்று தொலைவில் பனங்கிழங்கு விற்பனை செய்து கொண்டிருந்தாள் ஓர் கிழவி.
பனங்கிழங்கு சீதா ரொம்ப விரும்பி சாப்பிடுவா.ஏதோ நினைவு வந்து அருகில் போய் விலை கேட்டான்.
சாதா கிழங்கு 15 ரூ அவிச்ச கிழங்கு 30 ரூ என்ற கிழவியிடம் இரண்டு வாங்கி வண்டியின் பெட்டியில் வைத்தான்.
மனதில் ஓர் எண்ணம் எழுந்தது,ஆண்டவா சீதா இந்நேரம் வீட்டுக்கு வந்தா. இதை அவளுக்கு கொடுக்கலாம் எவ்வளவு ஆசையா சாப்பிடுவா.. மனம் வெறுமையாக சிரித்தது.
பட்டாபிக்காக தன் சொந்தளை வெறுத்து பேசிய பேச்சுக்கள் மனதில் நிழலாடியது.. ம்ம் சரி இதை பாலாஜிகிட்ட கொடுத்த உங்க அத்தைக்கு இது தான்டா பிடிக்கும் என்றால் போதும் அவன் ஓண்ணு கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவான்
சிந்தையில் பல்வேறு சிந்தனைகள் ஓடியது..
வண்டியை நிறுத்திய போது வீட்டின் உள்ளே சிலர் பேசும் சத்தம் கேட்டது.
இப்போ யார் வந்திருப்பா.. சீதாவின் சத்தம் தான் அது.. உடன் அவளின் மாப்பிள்ளையும் வந்திருப்பது தெரிந்தது.
குற்ற உணர்ச்சியில் தனது வீட்டிற்குள் செல்லவும் சங்கோஜமாக இருந்தது.
சீதா மாப்பிள்ளை சத்தமாகவே பேசிக்கொண்டு இருந்தாள்.
உங்க பொண்ணு மாசத்துல இரண்டு தடவையாவது பட்டாபி என்ற பெயரை சொல்லாம இருக்க மாட்டா. ஏன்னா அவங்க அண்ணோட நண்பனாமே..
அடிக்கடி சொல்லுவா.. நீங்க என்னை நல்லா பார்த்துக்குறீங்க ஓர் வேளை அந்த பட்டாபியை கட்டியிருந்தா.. அவன் பெயரை கேட்டவுடன் வேகமாக உள்ளே நுழைந்தான்.
அவனை கண்டவுடன் வீட்டில் இருந்த அப்பா அம்மாவை தவிர அனைவரும் எழுந்து நின்றனர்.
முதன் முறையாக நாலு ஆண்டுகளுக்கு பிறகு அவளிடம் பேசினான்.
வா..சீதா இப்போ தான் வந்தீயா..நீ நல்லா இருக்கீயா..
அவனின் வார்த்தை கேட்ட அனைவரும் ஆச்சரியத்தில் வியந்தனர்.
சீதாவோ ஓர் படி மேலே போய் அண்ணா என்று அலறிய படி ஓடிச்சென்று அவனை ஆரத்தழுவினாள்.
அவளின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்து சிலர் வந்தனர்.
சீதா நீ எப்போ வந்தே என்றவர்களின் வார்த்தைகள் அவளின் காதுகளில் விழவேஇல்லே...
ஏன்னா நீ இவ்வளவு நாளாக என்கிட்ட பேசவே யில்லை.
சிறு குழந்தை போல் கேட்டவளின் கைகளில் வாங்கி வந்த பனக்கிழங்கை கொடுத்தான்.
நாங்க வருவதை யாரிடமும் சொல்லவே இல்லையே உனக்கு எப்படி தெரிஞ்சுது என்றவளின் கன்னத்தை சிறு குழந்தை போல் கிள்ளினான்.என் செல்ல தங்கச்சி வருவதை மனசு சொல்லுங்சு என்றே சிறுவயதில் அவர்கள் பேசும் தொனியில் பேசினான்.
சந்தோஷ மிகுதியில் தன் கழுத்தில் கணவன் வாங்கி தந்த இருபது பவுன் சங்கிலியை அவனுக்கு அணிவித்து மகிழ்ந்தாள்.
உங்க மச்சான் உனக்குத்தான் ஆசையா வாங்கினார் தெரியுமா.
ஏனோ சிவா அமைதியாக இருந்தான்.அவளுக்காக இரண்டு வருட தேடலுக்கு பிறகு வாங்கிய தங்க சங்கிலி அது..
மனசுக்கு பிடிச்சவங்க தப்பு செஞ்சா அது ஓர் பெரிய தப்பாவே தெரியாது அவனின் அப்பா சொன்ன வசனங்கள் நினைவு வந்தது.
சீதா கேசவனின் மனைவி அம்மா அனைவரும் சமையலறைக்குள் சென்று சமையலை தொடங்கினர்.
அப்பா நான் மாமா கூட பஜார் போயிட்டு வரவா பாலாஜி கேட்டான்..
ம்ம் போயிட்டு வா.. மாமாகிட்ட எதுவும் அதிகமாக கேட்டு அவங்களுக்கு செலவு வைச்சுடாதே.
நான் உங்க புள்ளைப்பா எனக்கு தெரியாதா பணத்தை விட பாசம் தான் பெருசுன்னு.. மழலையின் மொழி அவனின் மனசுக்கு கசையடி கொடுத்தது.
இனிமே இந்த வசனத்தை நீ யாரிடமும் சொல்லக்கூடாது புரியுதா.. மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டிய பாலாஜி
அவர்கள் கிளம்பி கடைக்கு சென்றனர்.
அவனை அதிசயமாக பார்த்தபடி ஈஸி சேரில் இருந்த அப்பாவின் அருகில் சென்று அவரின் கைகளை பிடித்து கொண்டு சொன்னான்
சிரிப்பு, நான் உங்க எல்லோர் மனசையும் நிறையவே புண்படுத்தி விட்டேன்.நான் இனி நம்ம கடையை மட்டும் தான் பார்க்க போறேன் லாபமோ நஷ்டமோ நம்ம கடையை நல்லநிலமைக்கு கொண்டு வருவேன் அப்பா
பட்டாபிய பார்த்தீயா அவரின் கேள்வி அவனை துளைத்தது தலை குனிந்தவனின் கண்ணீர் துளி தரையில் விழுவதை கண்ட கைலாஷ் சொன்னார்.
அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கேடா.. அவரின் பதில் அவனை உலுக்கியது.
ஆமாண்டா என் வாழ்வில் கூட ஓர் பட்டாபி உண்டு
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த இருவருக்கும் சுடச்சுட தான் செய்த ரவா லட்டு இருந்த தட்டை நீட்டினாள் சீதா
அதை வாங்கி கேசவனுக்கு ஊட்டினார் அந்த ரவா லட்டை அதில் தன் மகனை இனி யாராலும் ஏமாற்ற முடியாது என்ற தன்னம்பிக்கை இருந்தது.
சீதா கேட்டாள் அண்ணா நான் உன் மடியில் தலை வைச்சு படுக்கலாமா... தயக்கத்துடன் கேட்டவளை சிரித்த படி சொன்னான்.
நீ என்னோட செல்ல தங்கச்சி
No comments:
Post a Comment