நாளைய விஞ்ஞானிகள்

 


நிலவை தொட்ட செய்தி நிலத்தையும் தொட்டு ஆரவார கோஷத்தை அள்ளிச் செல்கிறது..

உழைத்தவரின் முகத்தில் இன்பக் கீற்று தரையிறங்கும்

வரையிலும் வியர்வை முத்துக்கள் முகத்தில் பரவிக் கிடந்தது..

அப்பா பாருப்பா நாளைக்கு நானும் இந்த மாதிரி வருவேன் என்றே அதீத மகிழ்ச்சியில்

தன் குடும்ப பொருளாதாரத்தை அறியாமல் தொடையை தட்டி

சந்தோஷமாக சிரிக்கும் மகனை இன்னொரு அப்துல் கலாமாக கற்பனை செய்து மகிழும் உழைக்கும் தந்தை 

சில நிமிடங்களுக்கு முன்னர் இரண்டாவது தடவை காப்பி எதுக்கு 

என்றவளை பார்த்து காலரை தூக்கி விடுகிறார் அவரின் முகத்திலும் கற்பனை மின்னல்கள் என்மகன்டீ

நாளைக்கு நிச்சயமாக சாதிப்பான்..

யாரோ எங்கோ வென்ற வெற்றி செய்தி பலரின் வீடுகளிலும் ஓங்கியே ஓலிக்கிறது

பல பெற்றவரின் மனதில் உருவாகின்றனர்

பாரதத்தின் சிற்பிகளாக

நாளைய விஞ்ஞானிகள்.

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...