வேட்டை நாய்

ஏய் கிழவி
நீ இப்போ
சுனான்னுட்டு
இருக்க மாட்ட
இன்னும் ஒரு
மாசந்தே.... வெளியூர்
போன உன்னய
எரிச்சலாக
சொன்ன
வார்த்தைகள்...
ஏலே இந்தா
கம்பங்கஞ்சி
உடம்புக்கு
நல்லதுலே குடி...
குச்சி ஒன்றே
நம்பிக்கையாக
வைத்து இருக்கும்
அப்பத்தா.... போக
இருந்தவளை
இழுத்து திண்ணையில்
உட்கார வைத்தேன்
மடியில் தலை வைத்தேன்...
அம்மாவின் நினைவில்...
ஏலே சுட்டி நீ நல்லா
இருப்படா... நம்ம
குல சாமி
ஜக்கம்மா நீ என்னய
விட்டு போக மாட்டேன்
சொன்னாளே....
இப்போவாவது
நம்புடா.... சாமி
இருக்குடா...
ராசா உனக்கு
அவள் நிச்சயம்
துணையிருப்பாடா...
வாசலில் எதையோ
பார்த்து குலைத்தது
வேட்டை நாய்........

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...