என்றுமே அழகு....


ஓவியங்களில்
அழகு....வண்ணத்தால்
மிளிர்கின்றது
அதனை படைத்தவரின்
கைவண்ணத்தில்
படைப்புகள் பல...
எல்லாமும் சிறப்பு
என்று பொய் சொல்ல
மனது வரவில்லை...
ஏனென்றால்
எனக்கு ஓவியத்தை
ரசிக்க கூட தெரியாமல்
விழிக்கின்றேன்...
என்னருகில் அவள் வந்து
ஓவ்வொரு படைப்பையும்
விளக்கிச்சொன்னாள்....
பன்னிரெண்டு கலர்தாண்டி
எத்தனையோ விஷயங்கள்
அதில் பொதிந்து கிடந்தது....
உனக்கு எதை பிடித்தது
கேட்டாள்..... வெட்கம்
பிடுங்கி தின்றது...
கையில் ஏதோ கோப்பையுடன்
ஒவ்வொன்றையும்
ரசிக்கும் மனிதர் போல்
என்னால் ரசிக்க முடியவில்லை
என்பதே யதார்த்தம்...
தனியாக பேச வேண்டும்...
தனிமையில் வந்தாள்...
இப்போ சொல்லு "எது சூப்பர்"...
நீ கூப்பிட்டதால் வந்தேன்...
அந்த வாசல் அருகே இருக்கும்
படைப்பு தான் நல்லா இருக்கு.. என்றேன்...
எதனால் அப்படி வினவினாள்....
முதன்முதலில் அதை தானே பார்த்தேன்
ஏதோ வித்தியாசமாக இருந்தது
உள்ளே வந்தால் அனைத்தும்
ஓரே மாதிரி இருக்கு... சொல்லிவிட்டு
எதாவது தப்பா இருந்தால் மன்னித்து விடு...
எனக்கு உன்னை போல ரசிக்க தெரியாது..
ஏனோ பொய் சொல்லி உன்னை சிரிக்க வைக்க எனக்கு தெரியாது..
உண்மையான உருவம் தெரிந்தாலும் உன்னால் சிரித்து பேச முடியும்...
எனக்கு அப்படி கூட பேசத்தெரியவில்லை.....
சில நொடி இருவருக்கும் இடையே மெளனம்...
அருகே நெருங்கி வந்தவளின் பெர்ஃப்யூம்...
வாசனை ஆளை மயங்கியது சட்டென இறுக்கி அணைத்து முத்தமிட்டாள், கட்டியணைத்தபடி..
பல வருடங்களுக்கு பழகியவள்
முதன்முறையாக கொடுத்த இன்ப அதிர்ச்சி....
மீளமுடியாமல்... மிரட்சியுடன் இன்பத்தை
தாங்க முடியாமல் வியர்த்து கொட்டியது..
வெளியே ஆட்கள் என்றவனின் உதட்டை விரல்களால் கைது செய்தாள்... இங்கே யாரும் வர மாட்டாங்க...வேறு ஏதாவது சொல்ல இருக்குதா உங்ககிட்ட...இல்லை என்பதுபோல
சைகை செய்தேன்... உங்களுக்கு உண்மை
தெரியவில்லை அதான் இப்படி பேசுறீங்க...
இங்கே வந்தவர்களில் பாதிக்கு மேல்...
சொல்ல தொடங்கியவள் பேச்சை
நிறுத்தினாள்...விம்மி விம்மி பேச முடியாமல் தவித்தவளின் கண்ணீர் துளிகள் எனது மார்ப்பில் எதோ சொல்வது போல இருந்தது....
இப்போது சொல்லவா எது அழகு...
"ம்ம்ம் சொல்லுங்க"... தலைசாய்த்து முகம் பார்த்து கண்ணீர் விழிதாண்டி புன்னகைத்தாள்....
காதோர முடியை  வருடிவிட்டு சொன்னேன்...
மறுகையால் அவளின் துப்பட்டாவை அளந்து
உன் சுடிதார் கலர் மட்டுமே மிகவும் அழகு...
என் நாடியை உதடுகளால் வருடியபடி கேட்டாள்
முதுகில் விரல்களால் கோலமிட்டாள்..
இப்போது சொல்லுங்கள்....
"உன் சுடிதார் கலர் மட்டுமே மிகவும் அழகு"...
வெகுமதியாக மேலும் இறுக்கமாக கட்டினாள்..
ஊருக்கு பெரிய மனுஷியாக காட்டிக் கொண்டாலும் குழந்தையின் ஏக்கம்...
உண்மையை மட்டுமே தேடும் குணம்
அத்தனையும் மேலாக மனதில் அடக்கி வைத்த.
அவளின் அன்பு தான் என்றுமே அழகு....

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...