இதயத்தை தேடி

மஞ்சள் நிற சுடிதாரில்
சாதாரணமாக வந்தவள்...
சாமானியரும் கேட்க நினையாத
அவளின் தேடுதலே கேள்வியாய்..
இதயமற்று திரிந்தவனிடம்
இதமாக பேசி கேள்வியென்னும்
கணை தொடுத்து... விடையில்லா
கேள்வியால் சிந்தனையை 
தொட்டவள்...இறைவனை
தேடுவதாக சொல்லி விட்டு
இல்லறத்தின் தேவையை
நன்றாகவே உணர்த்தியபடி
உடன் நடந்து வந்தாள்...
நிழல் கூட மேலே படவில்லை
சில நிமிட சந்திப்பில்
சிரிக்கவும் இல்லை..
சிலாகிக்கவும் இல்லை
கைகளையும் கோர்க்கவில்லை...
முகவரியும் கேட்கவில்லை
எப்படித்தான் நுழைந்தாளோ...
இதயத்தின் உள்ளே...
துணை ஏதுமின்றி திரிந்தவன்..
ஏகாந்தமே இனிமை என்று
கழித்த நாட்களை நொடியில்
கிழித்துப் போட்டாள்....
ஏகாந்தம் எரிச்சலானது...
அதுவரையிலும் சுற்றிய
மலையும் காடுகளும்
அருவிக்கரையும்
ஆற்றின் கரைகளும்...
அவளேயே யோசிக்க வைத்தது..
அவளை சந்தித்த இடத்தை
கடந்து செல்லும் ஓவ்வொரு
தருணத்திலும் தேடுகிறேன்.. 
உடலின் ஓர் பாகமல்ல நெஞ்சம்
உயிர்வாழ்வதே அதனால் தான்
உணர்த்தி விட்டாள்... 
துடிக்கும் இதயங்கள் எதிர்பார்ப்பது
அவளின் நட்பை மட்டுமல்ல
அவள் மனதில் வரைந்து சென்ற
கள்ளம் கபடமற்ற குழந்தைதனமான
இதயத்தை தேடி...

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...