கொரோனா...

பேசப்படாத கொரோனா விளைவுகள்.
.
.
.
.
எல்லா ஊடகங்களும் கொரானா ஏற்படுத்தும் மரணங்கள் குறித்து செய்தி சொல்கிறது..
இங்கே சொல்லப்படாத விஷயம் நடந்து கொண்டு இருக்கிறது.அதை ஏனோ ஊடகங்கள் நினைவு கொள்ளவில்லை போல...
.
நான் ஊடகத்தில் வேலை பார்க்கவில்லை எனவே தைரியமாக சில கருத்துக்களை முன் வைக்கிறேன்..
இதனை படித்து விட்டு ஏதாவது ஓர் நிருபர் இந்த தகவலை முன்னெடுத்து சென்றால் அதுவே சிறப்பான வெற்றி.
.
.

முதல் இரண்டு உலகப் போரில் ஆயுதங்கள் பயன்படுத்தபட்டது...இப்போ நடப்பதும் உலகம் போர் தான் கொரோனாவிற்கு எதிரான உலகளாவிய போர்.
இது என்று முடிவுக்கு வரும் என்பதில் இன்னும் தெளிவான பதில் இல்லை..
எல்லா நாடுகளிலும் மருத்துவர்களும் அரசு பணியாளர்களும் தன்னார்வ தொண்டு அமைப்புகளும் போராடிக்கொண்டிருக்கும் வேளை இது.
.
சாதாரணமாக யாரும் மயானத்திற்கு அடிக்கடி போவது இல்லை... ஆனால் நான் கடந்து போகும் சாலை அருகே தான் மயானம்.

என் மனதில் பட்ட வலிகளை எழுதுகிறேன்...ஏனவே தான் இதனை சொல்லுகிறேன்....
.
எல்லாரும் பல ஆண்டுகள் வாழப்போவதாக நினைத்து தான் படித்து வேலையில் சேர்ந்து திருமணம் என்னும் பந்தம் கொண்டு வாழ்க்கை வாழ்கிறோம்...
.
ஊரில் வாழும் பாதி பேர் தான் பார்க்கும் வேலையை நம்பித்தான் காலம் தள்ளுகிறோம்.
அதில் ஏற்படும் சிற்சில மாற்றங்கள் கூட பலரின் வாழ்வை திருப்பி போடுகிறது...
அப்படிப்பட்ட ஓர் சூழ்நிலை இன்று பலரின் வாழ்வை கேள்வி குறியாக மாற்றி விட்டது....
.
.
ஓர் மாத வருமானம் பெறும் தனி மனிதனின் மரணம் என்பது அவர் சார்ந்துள்ள குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சி மீதான தாக்குதலுக்கு வழி செய்துவிடும்..
.
.
மயானத்திற்கு மாதத்தில் என்றாவது ஓர் சில நாட்கள் தான் வேலை.. ஆனால் கடந்த சில மாதங்களாக அங்கு புதைக்கப்பட்ட உடல் எத்தனை என்பது சரியான புள்ளி விவரங்கள் அரசாங்கம் மட்டுமே அறிந்த விஷயம்..

நான் அதை பற்றி பேசவில்லை, ஆனால் புதைக்கப்பட்ட மனிதரின் குடும்ப பொருளாதாரத்தை யாரால் சரி செய்ய முடியும் என்பதே கேள்வி...
.
இறந்த மனிதர் இல்லை என்பதும் அவர் விட்டுச்சென்ற வலிகளும் ஏராளம்.
.
இன்று நம் சமுதாயம் கொரானா வந்தவர்களின் குடும்பத்தை நடத்தும் விதம் மிகவும் மனதில் ரணம் தருகிறது.
அவர்களின் வீட்டிற்கு யாரும் சென்று துக்கம் கேட்பதில்லை....ஓரு பத்து நாட்கள் கழிச்சு போகலாம் என்று உரக்கவே பேசுகின்றனர்...
அறிவியல் பூர்வமாக அது சரியாக இருக்கலாம்... போன் மூலமாக பேசினால் என்ன குறை வந்து விடும்...
.
.
வயதான மனித மரணம் என்பதை மனம் ஓரளவு ஏற்றுக்கொள்ள பழகிவிட்டது.ஆனால் நடுத்ஙவயதிலும். ஏனோ எழுதுவதில் கூட மனம் சஞ்சலபடுகிறது..
.
நல்ல இதயங்களுக்கு என் வேதனை புரியும்...
அந்த வீட்டில் மரணித்தவர் ஏற்கனவே வேலை இன்றி சில மாதங்களில் கையிருப்பு காசு செலவு முடிந்தது...
.
. வங்கிகள் கடன் வசூல் செய்வதில் நெருக்கடி காட்டவில்லை... ஆனாலும் அவர் வாங்கி வைத்த கடன் யாரால் கட்டம முடியும்.. வீட்டின் ஓரே வருமானம் அது அவர் தந்தது தான்.. அவர் போய்விட்டார்... ஆயினும் அவர் தன் குடும்பத்திற்காக வாங்கிய வீட்டு லோன், கார் லோன் மற்றும் சிற்சில தவணை கடன்...இதை எப்படி சரி செய்யப் போகிறோம்..
.
.
சென்ற தலைமுறை கூட்டுக்குடும்பம் வாழ்வில் பல இடைஞ்சல் இல்லாமல் இல்லை.
ஆனால் ஓருவர் இறந்து விட்டால் அந்த வீட்டின் மற்ற பெரியவர்கள் பொருளாதாரத்தை சரிசெய்ய முடிந்தது.
இன்றோ எல்லோரும் தனித்தனியாக வாழ்கிறோம்....
.
நண்பர்களே யோசியுங்கள்... எல்லோரும் L.I.C பாலிசி எடுக்க வில்லை என்பதே நிதர்சனமான உண்மை...
.
பணத்தை விட மேலாக கொரோனாவால் உறவுகள் இழந்து தவிப்பவர்களுக்கு தேவையானது. சொந்தங்களின் அன்பும் அரவணைப்பும்.. பொருளாதாரம் மெல்ல மெல்லத் தான் மீண்டு எழும்... அதுவரை பொறுமையாக இருப்பது தவிர வேறுவழியில்லை...

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...