கோவில்... யதார்த்தம்...

கோவிலுக்கு

வரும் மனிதர்
பலர் அவர்களுள்
அன்பை தேடி.... சிலர்
பாசம் தேடி... சிலர்
பணத்தை வேண்டி
இறைவனை கேட்கும் சிலர்...
சொத்து தகராறு
தீர்வு தேடி சிலர்...
கல்யாணம் வேண்டி
தோஷம் கழிக்க சிலர்...
கோர்ட் கேஸில் நல்ல
தீர்ப்புக்காக சிலர்....
உண்டியல் பணம்
போட்டு பல லட்சம்
வேண்டுதல்
அதனால் கடவுளுக்கும்
கவலை பிறந்தது...
தன்னை தேடி
ஞானம் வேண்டி
இறை நிலை அடைய
வருபவர் ஓரு சிலரே....
பிரச்சினை தீர்க்க சொல்லி
மட்டுமே இறைவனின்
இருப்பிடம் வருகிறது
வியாபார மாந்தர் கூட்டம்..
அர்ச்சகர் தட்டில்
பத்து ரூபாய் நோட்டு..
கேட்பதோ பல மதிப்பு
வேடிக்கையாக
சிரிக்கும் கோவில்
வாசல் ஞானி..
விதியை நம்புவதில்லை..
பாமர மக்கள்..
தேவியோ சிரித்தாள்...
இன்னுமா உங்களுக்கு
உலகம் புரியவில்லை...
எதிர்பார்ப்பு கொண்டதே
யதார்த்த உலகம்...

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...