எது பெண் விடுதலை

இன்றும் கூட எல்லா வீட்டிலும் 

எங்க அப்பா ஓர் அப்பாவி மனுஷன் 

என்னோட புருஷனுக்கு சாமர்த்தியம் காணாது

என் புள்ள சரியான சோம்பேறி அவங்க அப்பன் போலவே என்றறு பேசும் பெண்கள்

எங்க அம்மா ரொம்பவே பாசமா இருப்பாங்க எ

ன்னோட பொண்டாட்டி தைரியசாலி

என் பொண்ணு பயங்கரமான சுட்டி

என்று பேசும் ஆண்கள்.


இப்படி சந்தோஷமாக உடனிருக்கும் ஆணாமகனை அடிமையாக நடத்திய நடத்தும் பெண்கள்.

எந்த வேலைக்கும் போகாமல்,

தனக்கு தெரியாத ஓர் விஷயத்தை தெரிந்தது போல் காட்டிக்கொண்டு வீட்டில் இருந்த படியே கேள்விகளால் தகப்பனை ...கணவனை..மகனை.... வார்த்தை என்னும் சாட்டையால் சுளுக்கு எடுக்கும் பெண்கள் தானே சுதந்திரமானவர்கள்.

அவர்களின் முகத்தில் சிறு கவலை ரேகை வந்து விடக்கூடாது என்று நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உடலாலும் மனதாலும் கஷ்டப்படும் ஆண்மகனை பாராட்ட இங்கே யார் இருக்கிறார்கள்.

இது போது என்று பல வருசத்துக்கு ஓர் முறை, தங்கையை பாசத்தில் பார்க்க வருவதாக சொல்லிக்கொண்டே வீட்டில் வந்து தங்கி.. அத்தான், உங்களால தான் எனக்கு அந்த காரியத்தை செய்து தர முடியும்.ஆனா சொந்தகாரங்களுக்கு தெரிஞ்சா அசிங்கமா தப்பா பேசுவாங்க.. நீங்க தான் பேச வேண்டியவங்க எல்லோரிடமும் பக்குவமா பேசி முடிஞ்சு தரணும்.உங்களை தான் மலை போல நம்பி வந்திருக்கேன் என்று தனிமையில் அவரின் காலில் விழாத குறையாக பேசியவன்.

கல்யாண பந்தியில் ஓரே ஓர் இடத்தை பிடித்து கொடுத்து விட்டு, அக்கா உன் மாப்பிள்ளைக்கு சாப்பாட்டு பந்தியில் கூட இடம் பிடிக்க தெரியலை எப்படித்தான் அவர் கூட நீ காலம் கடத்துறீயோ என்று திரியை கொளுத்தி விட்டு போகிறான்.

இப்படி அவன் பலர் அறிய பேசிய பிறகும் அவனுக்காக உதவியை செய்து கொடுத்து விட்டு, அன்று முதல்.உங்க அப்பனுக்கு சாப்பாட்டு பந்தியில் கூட இடம் பிடிக்க தெரியலை என்னால் என்னோட தம்பி மாதிரி திறமைசாலியா இருக்க முடியுமா என்கிறாள் அவனின் மனைவி

அவள் விருப்ப ஆடையை வாங கொடுப்பதும், இருசக்கஙவாகனத்தில்  உடலை உரசியபடி கடற்கரை சாலையில் வேகமாக சென்று அவளை காதல் என்ற மொழியில் விபத்தில் சிக்க வைப்பது அல்ல காதல். அது அல்ல பெண்ணியம் பெண் விடுதலை.

அவள் இருக்கும் இடத்தில் அவளை அவளாக அவளின் விருப்ப படி வாழ விடுவதே பெண் சுதந்திரம்.

தனக்கு தானே ஓர் எல்லை வட்டத்தை போட்டுக்கொண்டு, அதில் பாதுகாப்பாக நிம்மதியாக வாழும் சுதந்திரமான பெண் உங்களின் அரிதாரம் பூசிய வியாபார உலகிற்காக, வார்த்தை ஜோடனையில், குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆட்களை சேர்க்க வேண்டி பெண் விடுதலை பேசுவதை விட்டு விடுங்கள்.

ஏன்னென்றால் பெண் விடுதலை பெண்ணியம் பேசும் தலைவர்கள் நடத்தும கட்சி கூட்டத்திலும், வியாபார நிறுவனத்திலும் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான சம்பளம் தான் கொடுக்கப்படுகிறது.

உங்களுக்கு குறைந்த சம்பளத்தையும் பெற்று கொண்டு உடலாலும் மனதாலும் அவள் படும் வேதனை அடுத்தவர்களுக்கு புரியாதே.

அவளை கண்ணும் கருத்துமாக பேணி வளர்த்த அப்பனுக்கும் அவளை கண்ணியமாக காதலிக்கும் கணவனுக்கும், நாள் முழுவதும் அவள் கன்னத்தில் தரும் சின்னச்சிறு  மகனுக்கும் 

அவளை தவிர எதுவுமே அறியாமல் காமத்தின் கலப்பின்றி, அவளின் முந்தானையை பிடித்துக்கொண்டு சுற்றி சுற்றி வந்து, அவளுக்கு உதவியாக அவளைப் போலவே சம்பளம் வாங்காமல் அவள் சொன்ன சின்ன சின்ன வேலைகளையெல்லாம் செய்து விட்டு அம்மா உனக்கு கை வலிக்குதா என்று அவளின் கைகளை வருடிக்கொடுத்து..


நான் பெரியவன் ஆனதும் உன்னை எந்த வேலையும் செய்ய விடாம மகாராணி மாதிரி பாத்துக்கிறேன் என்று சொல்லும் சிறுவனின் அன்பு


இதை எல்லாம் விட பெரியதல்ல, போகுமிடமெல்லாம் காசு வாங்கி விட்டு பெண் விடுதலை என்று மைக் செட்டில் புலம்புவது.

சுதந்திர இந்தியாவில் இந்திய அரசியலமைப்பு சட்டம் பெண் விடுதலை என்பதை தெளிவாக வரையறை செய்த பிறகும் ஏதோ தான் அந்த ஓருவர் தான் பெண் விடுதலை வாங்கி தந்ததாக இன்னும் மேடை பேச்சு பேசாதீர்கள்.

ஏன்னென்றால் புளித்து போனது பெண் விடுதலை என்ற போலி முழக்கம்

இனியாவது யாரோ ஒருவர் மேடையில் மேம்போக்காக தனது வருமானத்திற்காக மட்டும் காசு வாங்கி விட்டு போலியாக சில மணித்துளி பேசும் பெண்ணியம் என்ற கருத்தை ஆழந்து அறிவோம்

வீட்டில் இருக்கும் ஓவ்வொரு ஆண்மகனும், தனது பெண்டு பிள்ளைகளுக்கு தரும் பெண் சுதந்திரத்தை போற்றுவோம் 

தினமும் கொஞ்சி விளையாடிய அன்பு மகளை கூட வருடத்திற்கு ஓர் முறை சென்று பார்க்கும் பாசக்கார அப்பா

சில நிமிடங்களில அவருக்கு நன்றாக புரிகிறது, அவள் இன்று அடுத்தவரின் காதல் மனைவி..கள்ளமில்லாமல் வளர்த்த மகள், அப்பா வந்திருக்கிறார் என்பதை கூட சொல்ல முடியாமல்.அவர் வீட்டிற்கு வந்த பிறகு சொல்லுவோம் என்று பேசும் போது அவர் சொல்லி கொடுத்த வார்த்தைகளை நினைத்து பார்க்கிறாள்.


தன் வீட்டில் இன்னும் இருக்கிறது  பெண் சுதந்திரம்.ஏனோ மருமகனின் அலுவலக அறையில் போட்டோவில் இருந்த படி  சிரிக்கிறார் போகுமிடமெல்லாம் காசு வாங்கி அவர் பேசிய பெண் சுதந்திரம்...


தன் வீட்டில் இருக்கும் பரந்தாமனை நினைத்து வணங்கினார்..யப்பா பெருமாளே நீயே எங்களுக்கு எல்லாம் சுதந்திரமா வாழ வையு...

பெண் சுதந்திரம் மேடை பேச்சு இல்லப்பா அது ஓர் வாழ்வில் சார்ந்த விஷயம் என்றே புலம்பிய படி நடையை கட்டினார் தனது வீட்டிற்கு

 அவரின் மனதில் மீண்டும் மீண்டும் ஓரே ஓர் கேள்வி தான் எழுகிறது

எது பெண் சுதந்திரம் எது பெண்ணியம்..


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...