அப்பனும் ஆத்தாளும்

சென்ற மாதம் திருமணமாகி

வந்த முன்பின் தெரியாத

அவனும் அவளும்..

மார்கழி குளிரில்

மனைவியின் மடியில் அவன்

கணவனின் கதகதப்பில்

கிறங்கிப் போய் கிடக்கிறாள் அவள் 

பெற்ற அப்பனும் ஆத்தாளும்

பட்ட கஷ்டத்தை யெல்லாம் மறந்தே 

மாயையில் மயங்கியே 

பஞ்சணையில் இருந்து

எழுந்துவிட எண்ணமில்லாத

இறுமாப்புடன் இருவரும் 

இருவருமே மிதக்கின்றன 

சில நொடிகளில் கலைந்து விடும்

சொர்க்கலோக பளபளப்பில் 

கதகதப்பு தேடி காமத்தில்

திளைப்பது அல்ல காதல்....

படிப்பறிவு இல்லாவிட்டாலும் 

குடும்பத்திற்காக உழைத்து

 தேய்ந்த அப்பழுக்கற்ற

அப்பன் ஆத்தாளும்..

வீட்டின் திண்ணையில்

இருமல் சத்தம் இடியாக

இருவரின் காதிலும்.

யம்மா..காலையிலேயே

ஆரம்பிச்சுடாத உன்னோட

புலம்பலை மனைவியை

அணைத்த படி ஆரவாரித்தான்

நாளைக்கு நாம எங்கடீ போகலாம்...

போட்டோவில் பூமாலைக்குள்

சிரித்த படி அவளின் அப்பா...

உங்க பேரனும் உங்கள மாதிரியே...

உன்னைய சீக்கிரமா சொல்ல

வந்தவரின் வாயில்

மாத்திரையிட்டாள்... 

நானும் போயிட்டா ..

உனக்குன்னு யாருயிருக்கா...

நாலு மகனை தாண்டி பிறந்த

மாசற்ற மகள்...நீ யாரையாவது

விரும்புறீயா.. கேட்கும்போதே

குரல் உடைந்து கண்ணீர்

தழுதழுத்து..அப்பா நான்

உங்க பொண்ணு ... உங்க அண்ணன் அண்ணிய நீ எந்த காலத்திலும்

நம்பிடாதே ஏனோ அவர் 

பேசமுடியாமல் குழறினாள்.

எதுக்கு இப்போ இந்த பேச்சு

அவருக்கு கடிவாடமிட்டாள் மனைவி..

நான் கேட்டதுக்கு பதில் சொல்லு தாயீ

அப்பாவின் கேள்விககு விரக்கியாக

சொன்னாள் அப்படி யாருமில்லைப்பா...

எங்களுக்கு பிறகு யாரூடி

உன்னைபார்ப்பா என்ற அம்மாவின்

சீற்றத்தை தன் விரல் காட்டி

சுவற்றின் திசை திருப்பினாள்

அங்கே சிரித்தபடி உபதேசம்

செய்கிறான் மாயவன் கண்ணன்

என்னை இவன் நல்லா பார்த்துப்பான்..

மூவரின் உணர்ச்சியும் கொந்தளித்த

நேரத்தில் தூரத்தில் கிராமத்து

கோவில் ரேடியோ செட் அலறியது...

கீதையென்னும் தேரில் ஏறி

கண்ணன் வந்தான்.. கேட்டவருக்கு

கேட்டபடி கண்ணன் வந்தான்..

குருடர்களை காண வைக்கும் பிருந்தாவனம்... அவளின் வாயில்

உதிர்ந்தன வார்த்தைகள்..

கண்ணா எனக்கு எல்லாமே இந்த 

அப்பனும் ஆத்தாளும்...

மற்றொரு சுவரில் சிரிக்கிறான

முருகன் யாமிருக்க பயமேன் 






No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...