படித்ததில் பிடித்தது விதையின் கதை

 ஓர் சிறந்த மரத்தில் இருந்து கீழே விழும் போது பழம் கவலைபட்டதாம்.அப்படி கீழே விழும் போது அதற்கு பலமாக அடிபட்டதால் வலிதாங்காமல்  மெளனமாக அழுதது.

அதன் அழுகையின் அந்த பழம் கனிவான நிலையில் இருந்த போதும் உண்ணாமல்.அந்த பழம் எவ்வளவு அழகாக இருக்கு பாரூ.கடவுளோட கருணையே கருணை.ச்சே கடவுள் எப்படியெல்லாம் உலகத்தை ரசித்து ரசித்து செய்து இருக்கான்.ஆனா மனுஷனங்க பாரு.இந்த இயற்கையை ரசிக்க தெரியாம இயந்திரதனமா வாழுறாங்க என்று பேசிக்கொண்டன இரு அணில்கள் வருத்தப்பட்டன.

அந்த பழமோ,ஆண்டவனே நான் யாருக்கும் எந்த தீங்கும் மனசு அறிந்து செய்யலையே. பிறகு ஏன் இப்படி என்னை விழ வைக்கிறாய் என்று கதறியது.


அப்படியே கதறியே படி கீழே விழந்தது, தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு மாடுகளை அனைத்தும் ஓடி வந்து அந்த கனிந்த பழத்தை சாப்பிட்டு விட்டு மீதமிருந்த பழத்தின் விதையை தனது காலால் எட்டி உதைத்தது.


அப்போது மீண்டும் அந்த பழம், மன்னிக்கவும். சில நிமிடங்கள் முன்பு வரை தான் அது பழம் இப்போதோ எதற்கு பயன்படாத பொருள் என்பதால் உதாசீனமாக அனாதையாக கிடக்கும் விதை.


ஆம் இதைப் போலவே தான் பல இடங்களில் மனிதர்கள், அவர்களின் தேவை முடிந்தவுடன் தூக்கி வீசப்படும் குப்பைகளை போல் நடத்தப்படுகின்றனர்.

அப்படி உதாசீனமாக நடத்தப்பட மனிதர்களின் மனநிலை மற்றும் மனதின் வலிகள் என்னவென்பதை கதையின் முடிவில் பார்ப்போம். 

அதுவரையில் நீங்க எல்லோரும் கொஞ்சம் பொறுமையா கதையை மேற்கொண்டு படியுங்க நண்பர்களே.


அப்படி தேவையும், பசியும் முடிந்தவுடன் தனித்த விடப்பட்ட விதை, கவனிப்பாரர் அற்று கிடந்தது.

அப்போது தங்களின் கஷடத்தையெல்லாம் அந்த கடவுளை போய் பார்த்தவுடன் சரியானது என சத்தமாக பேசி அந்த வழிபாட்டு இடத்திற்கு சுற்றி இருக்கும் தன்னம்பிக்கையற்ற மனிதரை மூளை சலவை செய்த போலி பக்தர்கள்.

கடவுளின் நாமமத்தை கூவி கூவி விற்று கல்லா பல ஊரில் இருந்தும், நாடுகளில் இருந்து பணத்தை வரவழைத்து தங்களின் சுகபோக வாழ்க்கை தரத்தை உயரத்தவே அப்படி பேசுகின்றனர் என்பதை அந்த போலி வேடதாரிகளை நம்பி ஏமாந்த சிலருக்கு தெரியும்.

ஆனாலும் அந்த ஏமாளிகள் யாரிடமும், தாங்கள் ஏமாந்து விட்டதாக சொல்லவில்லை.

ஏன் போலீஸ் ஸ்டேஷனில் போய் கடவுள், கடவுள் பெயரை சொல்லி காசு பிடிங்கியவர்களையும் காட்டிக் கொடுக்கவில்லை.

அதனால் அவர்களுக்கு மேலும் தைரியம் வந்தது, கடவுளே தன் பக்கம் என்பது போல் கொகரித்தனர்.


ஏமாந்தவரின் கூட்டத்தில் இந்த விதையும் சேரத்தது.

ஆம் அந்த கடவுளை வேண்டினால் எல்லாம் நடக்கும் என்ற வார்த்தையை அந்த அனாதை விதை முழுமையாக நம்பியது.

ஓவ்வொரு நாளும் கண்ணீர் விட்டு அழுதது.ஆண்டவனே இந்த ஜென்மத்தில், நான் யாருக்கும் எந்த விதமான தீங்கு செய்தது இல்லையே. ஓர் வேளை பூர்வ ஜென்மத்தில் ஏதாவது தவறு செய்து இருந்தால் என்னை மன்னித்து எனக்கு அருள் செய் என அழுது புலம்பியது.


அப்படி அழுது புலம்பிய சமயத்தில் அந்த கடவுளின் தூதுவர் போல் தன்னை பிரகடனப்படுத்தி வாழும் போலியான மனிதரை காண வந்தனர் பலர்.

காசை கொடுத்தால் பாவம் போய்விடும், கடவுளிடம் நான் உங்களுக்காக வேண்டுகிறேன் என்பவரை நம்பி பல ஆயிரத்தை வாரியிறைத்தனர்.


எனக்கு கடவுளுக்கு செய்ய ஆசை தான் ஆனா கையில் காசு இல்லையே என்று அழுது புலம்பிய படி, நன்றாக படித்து பட்டம் வாங்கியும். பொய் பேச தெரியாமல் உண்மையை மாத்திரம் பேச நினைத்து பல இடங்களில் அடித்து துரத்தப்பட்ட ஓர் ஏழை விவசாயி மகனும் அதில் இருந்தான்.


அவனின் கண்ணில் இந்த விதை பட்டது, ஏனோ அதனருகில் வந்தவன்,அதை கைகளில் எடுத்துப் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்.

இந்த விதையை பார்த்தால் நல்ல தரமான விதையாக இருக்கிறது. ஆனால் இந்த இடத்துக்கு எப்படி வந்தது என்று யோசித்தாலும் அவனுக்கு விடை தெரியவில்லை.

பலரின் கைகளிலும் காலிலும் மிதிபட்டு தான் பிறந்த இடத்தில் இருந்து பல தூரம் பயணித்து, கடைசியாக அந்த போலி வேடதாரியின் வழிபாட்டு நிலையம் அருகே வந்நு கிடந்தது.

கடவுளே உனக்கு கொடுக்க காசில்லையே என்றே சில நிமிடங்களுக்கு முன்பு அழுது புலம்பியவனின் மனதில் ஓர் எண்ணம் வந்தது.

நம்மால இப்போ காசு கொடுக்க இயலவில்லை என்பது உண்மை.ஆனா இந்ந விதையை ஊன்றி வைத்தால்..

எந்த விதமான சரியான உபகரணமும் இல்லாமல் தன்னால் முடிந்தவரை கையாலும் சிறு கற்களை கொண்டும் குழி தோண்டி அதில் அந்த விதையை இட்டு,சிறு வேலி அமைத்து விட்டு, நிறைவான மனநிலையில் வீட்டிற்கு சென்று நிம்மதியாக தூங்கினான்


அடுத்த நடந்த திருப்பகளை காண தொடர்ந்து படியுங்கள் மீதி கதை விரைவில் 


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...