உன்னை விட இந்த உலகத்துல எதுவும் சொந்தமில்ல.

நான் கருப்பா சிவப்பாக குள்ளமான நெட்டையா ஊனமா நல்லவனா குற்றவாளியா தேசபக்தனா தீவிரவாதியா ஏழையா பணக்காரனா அன்பானவனா அனபற்றவனா.

சாந்தமானவனா கோபக்காரனா என்று எதுவுமே தெரியாமல்

அன்பும் ஆசையும் மனதில் மறைத்து வைத்து

பத்து மாதம் பட்டினியும் பரிதவிப்பும் கலந்தே வயிற்றில் சுமந்தவள்.

பல லட்சக்களை சம்பாதிக்கும் என் வயது நண்பர்களில் இருந்து மாறுபட்டு.. ..ஏன்னா என்னை படைத்தவள் தான் எனக்கு பிரம்மா கடவுள் எல்லாமே..

அம்மா-வ  பாரத்துக்கோடா என்று நோயுற்ற போதும் தனக்கு பிறகு அவளை நல்லபடியா தன்னை மாதிரியே பாரத்துகிடணும் என்ற நினைப்பில் பேசிய வாரத்தைகளில் உஷ்ணம் வைத்து உள்ளத்தில் மலரை விட மெல்லிய காதலை தாங்கி வாழந்த கோபக்கார அப்பா..

எது பேசினாலும் எதிர்த்து பேசினேன்..இன்றோ அவரைப் போலவே வாழ்கிறேன்..அப்பனையும் அதிகமாக நேசித்த காரணமாகவே இன்றும் கூட ...நீ எதுக்கு அடிக்கடி என் மேல கோபமா பேசுறே என்றே கேள்விகளால் அவளை குடைந்து எடுக்கிறேன்.

அவளுக்கு எப்படி புரியவைப்பேன் 15 வருஷமா நோயுடன் போராடிய தகப்பனை கண்ணும் கருத்துமா பார்த்தகிட்டவளை..சில வருஷமா தானே பார்த்துக்கிறேன்.அதுவும் அவளின் தேவையை என்னவென்று தெரியாமல் எனக்கு தெரிஞ்சதை செய்கிறேன்....

..அவளுக்கு எப்படி புரியவைப்பேன்..

இந்த உலகத்துல டைர்வர்ஸ் வாங்க முடியாத ஓரே உறவுமுறை அம்மாவும் அப்பாவும்..உடன் பிறந்தவங்களோ மாமன் மச்சானோ பிடிக்கலை என்றால் பேசாம விலகிப்போயிடலாம்.மனசும் அவங்களை தேடாது..ஆனா அம்மா அப்பா எதிர்பார்ப்பே இல்லாம வாழந்த வாழுற ஜீவன்.அவங்களை விட பெரிய சாமி உலகத்துல ஏதவுமே இல்லை...

உன்னோட அன்பே போதும் உன்னை விட இந்த உலகத்துல எதுவும் சொந்தமில்ல.

ஏன்னா அம்மாவின் வலியை யாராலும் புரிஞ்சுக்க முடியாது..நானே இன்னும் புரிஞ்சுக்கலையே....

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...