பெற்றவருக்கு பெருமை.....


தான் பெற்ற பரிசுகளும் பட்டங்களும் தந்த இன்பத்தை விட அதிகமாக தனது குழந்தைகளின் வெற்றி தரும் சந்தோஷம் வார்த்தைகளில் விவரிப்பது இயலாத காரியம்.... தாயும் தந்தையும் பட்ட பல சிரமங்களை மறந்து முகத்திலும் மனதிலும் அவை ஏற்படுத்தும் அமைதியும் சந்தோஷமும் எண்ணிலடங்கா....

அவர்கள் மேடை ஏறி பரிசுகள் வாங்கும் போது

தன்னையறியாமல் உணர்ச்சியின் வேகத்தில் சிறு துளிகள் கண்களில் எட்டிப் பார்ப்பதுண்டு..

அன்று அவை ஏற்படும் எண்ணங்கள் வலிமையானது

இன்னும் இன்னும் இவர்களுக்காக 

உழைக்க வேண்டும் என்று உயர்ந்த சிந்தனை தந்து....

பெற்றவர்களையும் மேன்மையின் பாதைக்கு இட்டுச் செல்கின்றது.... பிள்ளைகளின் வெற்றியால் பெற்றவருக்கு பெருமை...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...