அன்பு தங்கைகே...
அண்ணை பார்க்க வேண்டும்..அண்ணனிடம் பேச வேண்டும் என்று ஆசை தங்கையாக பிறந்த அனைவருக்கும் உண்டு.
பாதி நாள் அம்மா வீட்டுக்கு நீ வந்து போவதால்..
அம்மாவும் அப்பாவும் சந்தோஷமாக இருப்பது போல், தங்களை காட்டிக் கொள்கிறார்கள்..
நீ வீட்டுக்கு போனவுடன்.. நம்ம மாப்பிள்ளை அவளை ரொம்ப கொடுமைப்படுத்துறார் போல அதான் அடிக்கடி அவளுக்கு நம்மை தேடுது என்று அப்பா சொல்லும் போது அவரின் கண்கள் கலங்கியதை நீ பார்த்திருக்க நியாயமில்லை
ஓவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நீ வந்து போன பிறகு தனிமையில் ஈஸி சேரில் அப்பா ஆகாயத்தை பார்த்த படி ஏதோ புலம்புவது உனக்கு தெரிய நியாயமில்லை தான்.
எங்களுக்கும் கூட நீ நம்முடன் இருந்த காலத்தில் நீ காட்டிய பாசத்தை நினைத்து நினைத்து பார்த்து ரசிக்கிறோம்.
ஏன் தெரியுமா கள்ளமில்லா குழந்தையாக நீ வாழ்ந்த காலத்தை இன்று நீ வாழும் காலத்துடன் ஒப்பிட்டு ரசிக்கிறோம்.
நேற்று கூட நீ
வீட்டுக்கு கிளம்பும் போது அப்பா உன் கையில் திணித்த 500 ரூபாய் பணம் .
இந்தாம்மா பஸ் செலவுக்கு வச்சுக்கோ என தந்த போது நீ மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாயே.
வீட்டில் நானும் அம்மாவும் அப்பாவும் அண்ணியும் தனித்தனியாக யாருக்கும் தரியாதது போல உனக்கு பணத்தை கொடுக்கிறோம்
அண்ணே எனக்கு எதுக்கு அண்ணே பணம் அதான் உன் மச்சான் என்னை நல்லா பார்த்துக்கிறாரே..நீ சொல்லிய வார்த்தைகள் காதில் ரீங்காரமிடுகிறது.. ஆனால் உன் கைகளோ பணத்நை வாங்கி எண்ணியதை பார்த்து உள்ளம் அழுகிறதடீ.
நீ ரொம்பவே மாறித்தான் போயிட்டே..
நீ வேணா மறந்து போயிருக்கலாம்.. ஆனால் நான் இன்னும் மறைக்கலையே எனது அன்பு தங்கையே...
ஃபுட்பால் விளையாட்டு விட்டு வந்து ஸ்பெஷல் க்ளாஸ் நடந்துச்சு என்று சொன்ன போது..
யப்பா நம்பாதேப்பா.அண்ணே கிரவுண்ட்-ல விளையாடுவதை நான் பார்த்தேன்
. பக்கத்து தெரு சூர்யாவ தள்ளி விட்டு அவன் கையில் சிராய்ப்பு வரவே நம்ம அண்ணன் தாம்ப்பா காரணம்..
ஏன்டா சின்ன வயசுலேயே ஆயிரம் பொய் பேசுறீயே . அப்பாவின் பெல்டால் முதுகை முத்தமிட்டது..
அம்மா விளையாட போனதா சொன்னா அப்பா அடிக்கும்ன்னு தானே பொய் சொன்னேன் எதுக்ம்மா இந்த குட்டி நாயீக்கு என் மேல இவ்வளவு கோபம்.
அன்று அம்மா சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவு இருக்கு.
அட நீ வருத்தப்படாதே கண்ணா.. நாளைக்கு அவ புருஷன் வீட்டுக்கு போன பிறகு அடிக்கடி நம்ம வீட்டுல வந்து,அவ பொய் சொல்லும் போது நீ காட்டிக்கொடுக்காதே அது தான் நீ அவளுக்கு தரும் தண்டனை
அம்மாவுக்கு இருக்கும் சமயோசித புத்தியும் அன்பான மனசும் யாருக்கும் வராது..
உன்னிடம் நேரடியாக சொல்லும் தைரியம் எனக்கு இருந்தும் சொல்ல முடியாமல் தவிக்கிறேனே...
ஆமாம் ஓர் நாள் உன்னிடம் முகத்துக்கு நேராக பேச காந்த் இருக்கிறேன் என்னவென்று தெரியுமா....உன் புருஷன் கம்மியா தான் சம்பாதிக்கிறான் ஆனா அவனால தன் தகுதியை மீறி சம்பாதிப்பது அவனுக்கு உன் மீது உள்ள காதலும் பாசமும்.. அதை நீ எப்போ புரிச்சுக்க போறே என்று தெரியவில்லை..
உன்னை கல்யாணம் செய்வதற்கு முன்னால்.. அவன் வீட்டுல ஓர் கிளாஸ் தண்ணீர் எடுத்து கூட குடிக்க மாட்டான்.
அது எல்லாம் உனக்கு எப்படி தெரியும்.உன்னை நாங்க எப்படி செல்லமா வளர்த்தோமோ, அதைப் போலத்தானே அவங்க அம்மாவும் அப்பாவும் அவனையும் வளரத்தாங்க..
நீ அடிக்கடி எங்களை நினைச்சு மனசுல சந்தோஷபடுறதும், எங்களை உயர்வா நினைப்பதும் நல்லா தான் இருக்கு.
ஆனா எங்களை விடவும் உன் கணவன் உன்னை எவ்வளவு நல்லா வைத்து கொள்ள சிரம படுறான் என்பதை நினைச்சு பார்த்தாலே. உனக்கு அடிக்கடி அம்மா வீட்டுக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது...
நீ அதிகமாக நம்ம வீட்டுக்கு வருவதை எதிர்க்கவும் முடியாமல்..என்ன இன்னிக்கும் உன் தங்கச்சி வீட்டுக்கு வந்தாளா என்று கேலியாக கேட்ட பக்கத்து வீட்டு பாட்டியிடம் பதில் சொல்ல இயலாமல் தவித்த அம்மாவின் வலியை உணர்த்தும் வெளியே சிரித்து படி இருந்த உனது அன்பு அண்ணன்.
மேற்கண்ட விஷயத்தை எல்லாம் உன்னிடம் சொல்ல பிரியப் பட்டாலும்.. ஓர் வேளை சொல்லிவிட்டால் உன் மனது கஷ்டப்படுமே என்று உன்னிடம் நேரடியாக சொல்ல பயந்து யாருக்கும் தெரியாமல் எழுதி பீரோவில் மறைத்து வைக்கிறேன்..
அப்பாவை போலவே உன்னிடமிருந்து மீது அதிக பாசத்தை பெற்று அதை திரும்பி செலுத்த இயலாமல் தவிக்கும் ஓர் சகோதரன்..
உன் கணவன் மீதான பாசத்தை நீ புரிச்சுக்கோ இனிமே அடிக்கடி அம்மா வீட்டுக்கு வராதே..
ஏன்னா அடிக்கடி என் பொண்டாட்டி கேட்கும் கேள்வி..
ஏங்க உங்க தங்கச்சி வீட்டில் எதாவது பிரச்சனையா, ஓவ்வொரு முறை கேட்கும் போது அவளிடம் எறிந்து விழுகிறேன்..
ஏன்டீ உன்னை மாதிரி ஆசாபாசமால்லாத குடும்பம் எங்களோடது இல்லை..அவளை நாங்க எவ்வளவு பாசமா வளர்த்தோம்.
அதில் லட்சத்துல ஓர் பங்கு கூட உங்க உதவாகர அப்பன், உங்களை வளர்க்கலையே... உதடுகளில் அவளின் மனதை காயப்படுத்தி விட்டாலும் எனது மாமனார் வரும் ஓவ்வொரு முறையும் மனதிற்குள் புழுங்குகிறேன்..
ஓர் நல்ல மனுஷனை எவ்வளவு கேவலமான பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கி விட்டாயே தங்கச்சி..
தயவுசெய்து செல்லக்குட்டி
உன் குடும்பத்தை நீ நல்லா பார்த்துக்கோ செல்லம்மா.. உன் புருஷன் கொஞ்சமில்லை நிறையவே சோம்பேறி தான்..ஆனா அவனுக்கு நீ மட்டும் தானே உலகமே...உங்க தங்கச்சி ரொம்ப நல்ல திறமையானவ என்ற ஓரே ஓர் வார்த்தை காதுகளில் கேட்டா கூட போதுமே அதை விட பெரிய சொத்து சுகம் உலகத்துல என்ன வேண்டி கிடக்கு..
இப்போதும் கூட இந்த கடிதம் உன் கையில் கிடைத்து விடக்கூடாது என்று மறைத்து வைக்கிறேன்..
என் அன்பு தங்கச்சியின் மனதை புண்படுத்த விரும்பாத உனது அன்பு அண்ணன்..
No comments:
Post a Comment