யானைகள் காப்போம்

 வணக்கம் நண்பர்களே,


சமீப காலமாக தமிழகத்திலும் மற்றும் இன்ன பிற நாடுகளிலும் காட்டு யானைகள் பரிதாபமாக ரயிலில் அடிபட்டு இறப்பதும்.

மின் வேலிகளில் அடிபட்டு இறப்பதும் வாடிக்கையான நிகழ்வு போல் மாறிப்போனது.


யானைகளின் இறப்பு செய்தி பெரும்பாலும் ஓர் சிறு பெட்டி செய்தியாக அதாவது 6'4, என்ற அளவில் பத்திரிகையின் ஓரத்தில் தான் வருகிறது.

அதே சமயம் கோவில் யானை நோய் பட்டு இறந்து போனால் தலைப்பு செய்தியாக நாளிதழின் முன் பக்கத்தில் இடம்பெறுகின்றன.

அதற்காக உள்ளூர் அரசியல்வாதி முதல் சமூக ஆர்வலர் சிலர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.


காட்டு யானை கொம்பன் ஊருக்குள் புகுந்தது என்றும் பெரிய அளவில் செய்திகள் எழுதப்படுகின்றன



யானைகளை பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

யானை தன்னுடைய வழிதடத்தை மாற்றுவதே இல்லை.


இதனை யானை வலசை என்று கூறுவர்.

அதாவது ஓவ்வொரு மனிதனுக்கும் எப்படி ஓர் வரலாறு இருக்கிறதோ.

அதைப்போலவே யானை கூட்டங்களும் தனக்கான பாதையில் தான் வழி செல்கிறது. பல நெடும் ஆண்டுகளாக அவை செல்லும் பாதையில் வளர்ச்சி என்ற பெயரில் காடுகளில் நடுவே வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு, அவை செல்லும் வழிகளில் மின்வேலி அமைத்து.

யானைகளின் வழியை மறைப்பதோடு மட்டுமல்லாமல்.வலியையும் அல்லவா செய்கிறோம்.


அப்படி அதன் வழித்தடம் தடுக்கப்படும் போது, அந்த யானை கூட்டம் தனக்கான புதிய வழித்தடத்தை தேடி நகர்கின்றன.


அந்த சமயத்தில் தான் யானை மனிதன் இடையூறு ஏற்படுகின்றன.


யானைகள் தான் காட்டின் அரசன். பன்னெடுங்காலமாக சிங்கம் தான் காட்டுக்கு ராஜா என்று புனையப்பட்ட கதைகளை நாம் நம்பியது அறியாமை.


சிங்கத்தின் கர்ஜனை பெரியது, ஆனால் யானைகள் தனது உணவுகளுக்காக செய்யும் செயல்களே காட்டில் சமநிலையை ஏற்படுத்துகிறது.


நண்பர்களே நம்மால் நமது முன்னோர்களைப போல் யானை கட்டி போர் அடித்த விவசாயம்.


அவ்வளவு எண்ணிக்கையில் அதிகமாக இருந்த யானைகள் இன்று காடுகளில் மட்டுமே சுதந்திரமாக சுற்றி வருகிறது.


யானைகளையும் அதன் வழிதடங்களையும் பாதுகாப்பதே நாம் நமது அடுத்த தலைமுறை இயற்கையுடன் முரணபடால் வாழ வழிகாட்டும்.

நண்பர்களே இந்த கட்டுரையை உங்களால் முடிந்த வரை பிறருக்கும் பகிருங்கள்.

யானைகளை பற்றிய புரிதலும் அக்கறையும் தான் இன்றைய காலகட்டத்தில் யானைகளை காப்பாற்ற தனி மனிதர்களாக நாம் இயற்கைக்கு செய்யும் மாபெரும் உதவியாக இருக்கும்.



இந்த கட்டுரையில் ஏதாவது பிழை இருப்பின் தயங்காமல் கூறுங்கள் நண்பர்களே..ஏன்னனெனில் என்னை விடவும் யானைகளை பற்றிய அதிக தகவல்கள் உங்களிடம் இருந்தால் அதை உங்களுடன் கைகோர்த்து உலகுக்கு சொல்ல காத்திருக்கிறேன்.


நன்றி

ராமன் ஷங்கர்


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...