நம்பிக்கை குறைவதில்லை...


.
.
எத்தனை பேருக்கு இந்த நாள் மறக்க முடியாத நாள், என்பது உணர்ந்த உணர்ச்சியில் வேதனைகளை மறந்தவருக்கே தெரியும் நன்றாகவே புரியும்.
கடவுள் நேரில் வருவதில்லையாம், எங்கோ இருந்து கொண்டு யார் மூலமோ நம்பிக்கை வார்த்தைகளை விதைப்பானாம்.
சிறு வயதில் நாம் அனைவரும் ஏதோ ஓர் விதத்தில் அனைவரையும் கண்மூடித்தனமாக நம்புகிறோம்.
அந்த நம்பிக்கை நட்பாக, காதலாக, சொந்தமாக, வியாபார கூட்டாளியாக, உடன் வேலை பார்த்த நபராக அல்லது உயரதிகாரியாக, ஏதோவொரு நம்பிக்கை.
நாம் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இவரால் மாறி விடும் என்றே நம்பி ஏமாந்த பிறகே உணருகிறோம்.
ஏமாந்த பிறகே புத்தி வேலை செய்கிறது, அவரை அதீதமான நம்பியது எத்தனை பெரிய முட்டாள்தனம்.
ஆம் எத்தனையோ முறை எச்சரிக்கை மணி அடித்தனர்.அவனை நம்பாதே, தன் சுயலாபத்திற்காக உன்னை ஏமாற்றும் அந்த கயவன்.
ஆனால் அவன் மீது கொண்ட அபரிமிதமான அன்பால் ஏமாந்தது யார்....
ஏமாந்த பிறகே யோசனை, ஏமாந்தது தவறா...ஏமாற்றியவன் தவறா...இது விதியா அல்லது சதியா...பூர்வ ஜென்ம வினையா...
ஜாதகத்தில் கிரகங்களின் கோளாறா....
எது எப்படியோ ஆனால் இனி எந்த ஓர் மனிதரையும் நம்பி ஏமாற கூடாது, என்ற வேதனையின் வெளிபாடு....
வாழ்வில் முன்னேறிய எல்லோரும் ஏதோ ஓர் விதத்தில் அன்பின் மிகுதியால் ஏமாந்தவர்கள் தான்...
மனித தவறுகளை மாற்ற முடியாமல் தெய்வத்தின் சன்னிதியில் நம்பிக்கை தேடுகின்றான்...
அங்கே கூட உண்மையும் பொய்களும் பித்தலாட்டங்களும் கலந்தே இருக்கிறது...
கடவுளை நம்பும் மனிதன் ஏமாற்றுவதில்லை....
கடவுளை காட்டுவதாக சொல்லும் கபடதாரிகளே....பலரை ஏமாற்றுகிறான்...
ஆனால் இந்த நம்பிக்கை தோல்வியில் இருந்து மன அமைதி என்னும் வெற்றியை நோக்கியதே....
கபடதாரிகளை கண்டு ஏமாந்த பிறகும், நல்ல மனிதன் தனது முயற்சியை கைவிடுவதில்லை....
இறைவனை தேடுகிறான், அவனோ ஏழைகளின் சிரிப்பில் ஒளித்து கொண்டு, உலகை இயக்குகிறான்....
பணத்திலும் பதவியிலும் பட்டத்திலும் கிடைக்காத மகிழ்ச்சி.ஏழையின் சிரிப்பில் காணுகிறான்....
"மக்கள் சேவை மகேசன் சேவை" வாழத் தொடங்கிய பிறகு கிடைத்த அமைதியை யாருக்கும் புரியவைக்க இயலாது....
நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது என்பது புரிந்த காரணத்தால் கண்ணுக்கு தெரியாத கடவுள் மீது நம்பிக்கை வருகிறது.
எதுவுமே வேண்டாம் என்று ஆண்டியின் கோலத்தில் நின்றவனை அண்டிப் பிழைத்தவர்களின் கணக்கு எண்ணிலடங்கா...
எல்லோராலும் ஏமாற்றப்பட்டு வாழ்வில் விரக்தி அடைந்ததும் கூட ஓர் முறை மலையேறி வணங்கிய காரணத்தால் தலைமுறைக்கும் காவலாய் வருகிறானாம் இந்த கந்தவேல்...
திருச்செந்தூர் கடற்கரையில் உயிரை மாய்த்து கொள்ள வந்தவர்.. யாருமில்லாத நேரத்தில் கடலுக்குள் இறக்கி விட துடித்தார்..
குடும்பமாக வந்த சிலர் அங்கே குளித்து கொண்டு இருந்தனர்....
கூட்டம் குறையவில்லை, மாறாக கூடிக்கொண்டே போனது... ஓர் சின்னச்சிறுபாலகன் அந்த கூடத்தில் தன்னந்தனியாக தெரிந்தான்.
பலர் சுமந்திருந்த போதும் அவனின் அடையாளம் தனியாக தெரிந்தது.
ஏனோ அவன் எல்லோரில் இருந்தும் தனித்தே காணப்பட்டான்....
யாரும் அவை சட்டை செய்யவில்லை, அவனும் கூட யாரையும் சட்டை செய்யவில்லை....
கடற்கரை பற்றிய பயமே இல்லாமல், பெரியவரின் கைகளை பிடிக்காமல் தனித்தே தைரியமாய் நின்றான்...
இரண்டடி உயரத்தில் அலை அவனை மட்டும் இழுக்க முடியாமல் தவித்தது....
புதிதாக கல்யாணமா தம்பதிகள் கடல் அலையில் நிலைகுலைந்து விழந்த போது...
ஓர் மாபெரும் தலைவன் போல, அனைத்தும் அறிந்தவன் போல் சொன்னான்...
காலை நல்லா அழுத்தி நின்னா கீழே விழ மாட்டீங்க....
அவனை ஏதோ வித்தியாசமாக பார்த்து விலகி போன கல்யாண கூட்டம்....
கடற்கரை வெறித்த படி ஏதோ வேடிக்கை பார்த்தான்.. அப்படி அவனுக்கு என்ன தெரிந்தததோ தெரியவில்லை...
கடற்கரையில் எண்ணற்ற காட்சிகள்...
தள்ளாடியபடி வந்த அந்த பாட்டி, அவளும் கூட உயிரை மாய்த்து விட வந்தவள் போல் இருந்தாள்....
தன்னை தாண்டி போன பாட்டியின் கைகளை எட்டிப்பிடித்தான்...
ஏய் பாட்டி, ரொம்ப உள்ள போகாதே.. கடல் அலை உன்னை கீழே தள்ளிவிடும்....
அவளின் கைகளை பிடித்துக்கொண்டு சற்று நேரம் நின்றவனை தேடி வந்த பெற்றோர்...
உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தி இல்லை, உன்னை எங்க எல்லாம் தேடுறது...
நான் அப்பாகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்... நியாயம் பேசினான்....
அம்மா, அவனை அடிக்காதே, ரொம்ப நல்ல பையன்...
பெற்றவளுக்கு புரியாத அன்பை எப்படியோ, முகம் தெரியாத மனிதரில் விதைத்து விட்ட சிறுவன்.....
தாயீ....ஏதோ மனசஞ்சலத்துல கடலுக்கு வந்தாலும் மனசே சரியில்லை.... கடலுக்குள் போக இருந்தவளை இவன்தான் பிடிச்சு நிறுத்தினான்.....
இவனோட அன்பை மறுக்க முடியாம அப்படியே நின்னுட்டேன்....
அப்போ, அவன் கேட்டு கேள்வி என்ன தெரியுமா...
பெற்றவருக்கு எதுவுமே புரியாமல் நின்றனர்....
பாட்டியோ மேலும் சொன்னாள்....
பாட்டி இன்னிக்கு வைகாசி விசாகம் முருகனுக்கு பிறந்த நாள்.....
அவனுக்கு "Happy Birthday" சொன்னா அவன் நமக்கு நிறைய பரிசு தருவானாம்.. எங்க அம்மா சொன்னாங்க... நீயும் அடுத்த தடவை வரும் போது, உங்க பேரன் பேத்தியோட வந்து இந்த மாதிரி கடல்ல நின்னுங்க..செம ஜாலியா இருக்கும்ன்னு சொன்னான்.....
கதை சொல்லும் போதே அந்த பாட்டி உணர்ச்சியின் மிகுதியாக இருந்தாள்...
இப்படி எத்தனையோ கதைகள்... மலையின் மீதும் கடற்கரையில் இருந்தாலும் அவனை நம்பி வந்தவரை காப்பாற்றியதால்.
ஓவ்வொரு வைகாசி விசாகம் அன்றும் விரதம் இருக்கும் எத்தனையோ பேர்....
.
.
உயிரை விட நினைத்தவரையும் வாழ வைத்து, தன் கருணையை பொழிவதில் அவனுக்கு நிகர் யாருமில்லை....
"செந்தமிழால் வைத்தாரையும் வாழ வைப்போன்"
மனிதனின் மீது கொண்ட நம்பிக்கை வீழ்ந்த போதிலும், அதை கடவுள் மீதான நம்பிக்கையாக மாற்றுக் ஆற்றல் பெற்றவன் இந்த கந்தவேல்....
சுரனின் உடலை கிழித்து சேவலும் மயிலுமாக நின்றவன்....
ஆண்டியாக நின்றாலும் அண்டியவரை காப்பதில் சிறந்தவன்....
எனவேதான் இன்னும் கூட அவன் மீதான நம்பிக்கை குறைவதே இல்லை....

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...