சுதந்திர இந்தியா...


.
.
.
இந்தியாவிற்கு சுதந்திரம் தனி ஓரு நபரால் வாங்கிக் கொடுக்கப்பட வில்லை. சில பழைய சரித்திர புத்தகங்களை புரட்டிப் பார்க்கும் போது, சில எழுத்தாளர்கள்.
ஏனோ ஓர் சார்பாக எழுதியது, மிகப்பெரிய வலியை தருகிறது.
.
.
ஓரு சில தனிநபர்களின் ஆளுமை கண்டு பலர் அஞ்சப்பட்டதன் விளைவு.
அந்த குறிப்பிட்ட சில மனிதர்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டு, ஓர் தனி மனிதனை புகழ்வதாக மாறிவிட்டது.
இந்தியாவின் மீது ஆசைப்பட்டு படையெடுப்பு நடத்திய மன்னர்களும் ஓர் இந்தியராகவே மாறிப்போனது வரலாறு.
மறுக்க முடியாது உண்மையும் அதுவே.
.
இந்திய கலாச்சாரமும் இந்தியாவில் காலூன்றிய அரசர்களும் சில வருடங்களுக்குப் பிறகு இந்திய மரபினை மறுக்க முடியாமல்.
ஓர் இந்தியராகவே மாறிவிட்டனர்.
மன்னராட்சி என்பதும் வாரிசுரிமை என்பதும் இந்திய சரித்திரத்தில் எல்லா இடத்திலும் மாற்ற முடியாத நடைமுறை.
ஓர் மன்னராட்சியை எதிர்த்து கலகம் செய்து ஆட்சிக்கு வந்தவர்களும் ஏனோ வாரிசுரிமையை மட்டும் கைவிட முடியவில்லை.
சிற்றரசுகள் முதல் பேரரசர் வரை இதுவே நிலை, வீடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
அங்கேயும் இதுவே நிகழ்வு.
ஏனென்றால் இந்தியா என்பது கலாச்சாரத்தின் அடையாளம்.இங்கே வழி வழியாக வரும் பராம்பரியமும் அது தான்.
சராசரி மக்கள் தொடங்கி மன்னர் வரை இந்த நடைமுறை நிகழ்வுகளில் மாற்றம் நிகழ்வது, நூற்றாண்டுக்கு ஓர் முறை தான்.
அப்படி வரும் மனிதர் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்வதும் இந்தியாவில் நடைபெறும் சாதாரண நிகழ்வுகள்.
.
.
இந்தியர்கள் சுதந்திரத்திற்காக போராடியது இந்தியர்களா இருப்பதற்கு தானே தவிர, வெளிநாட்டின் கலாச்சாரத்தை அப்படியே பின்பற்றுவதற்கு அல்ல...
.
பல வீடுகளில் தாத்தாவிற்கு இரண்டு சம்சாரம், ஆயினும் பிரச்சினை சொத்துக்களை பிரிக்கும் போதே வந்தது. சில வீடுகளில் பாசம் வென்று சொத்து பிரச்சினைகள் சுமூகமாக முடிந்தன.
.
.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஓரு சிலரால் தொடங்கப்பட்ட தனிக்குடித்தனம் என்பது சற்றே வேகமெடுத்து விட்டது.
எனவே தான் தனிக்குடித்தனமும் கசந்து போய் சிலர் தனித்தனியாகவே வாழ முயற்சி செய்கின்றனர்.
அவர்களின் வேதனை யாருக்கும் தெரியாது, ஏனேனில் தன் கவலைகளை தன்னுள்ளே மறைக்கும் வலி(மை) அவர்களிடம் சற்றே அதிகம்.
அவர்களின் எல்லோரின் மனதிலும் உள்ள வலி, அவர்களுக்கு மட்டுமே தெரியும். வீட்டில் பெரியவர்கள் இருந்திருக்கலாம், குடும்பத்திற்கு சம்பந்தமே இல்லாத சிலர் பேசியே பிரச்சினை பெரிதானது.
விட்டுக் கொடுப்பதும் தட்டிக் கொடுக்கவும் ஆட்கள் இல்லாத காரணத்தால் விவாகரத்தை வேறு வழியின்றி தேடும் மனிதர்கள்.
.
.
விட்டுக்கொடுப்பதும், சகோதரத்துவமும், பாச உணர்வும், குரு வழி உபதேசமும், இந்திய கலாச்சாரத்தின் அங்கங்கள்.
இந்திய கலாச்சாரத்தின் பகுதியான கூட்டுக்குடும்பம் என்னும் வழி ஒன்றே முதியோர் இல்லங்கள் தவிர்க்க வழி வகை செய்யும். வயதான காலத்தில் தனது சொந்த பிள்ளைகளால் சூழ்நிலையின் பெயரால் நடக்கும் பிரிவுகள் இனியும் வேண்டாம்.
.
.
சொந்தங்களுடன் சொந்தங்களாய் ஓர் வீட்டிற்குள் வாழும் பழைய முறை வர வேண்டும்.அதுவே பாசமுடன் குழந்தைகள் வளர வழி செய்யும்.
.
.
வயது வித்தியாசமின்றி உண்மையான பாசத்தை தேடி அலையும் பல மனிதர்களின் காலடியில் இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
.
.
மலரட்டும் கூட்டுக்குடும்பத்துடன் வாழும் சுதந்திர இந்தியா..

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...