சுதந்திரமூச்சு என்னும் ஆசை..


.
.
.
ஆசைப்படுவது தவறே இல்லை.
மனிதனுக்கு மனிதன் ஆசையின் அளவுகள் மாறுபடும்.
முதலமைச்சர் பதவியில் அமர்ந்தால் மட்டும் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்பது போன்ற பிம்பம் எதற்காக ஏற்படுத்தப்படுகிறது...
சுனாமியால்..
கஜா புயலால்..
நோய் வாய்பட்ட...
எத்தனையோ பேருக்கு யாருக்கும் தெரியாமல் உதவி செய்த மக்கள் பலர்...
300 நூறு சம்பாதிக்கும் ஏழை மக்கள் கூட தன் சேமிப்பின் சிறு பகுதியை கொடுத்து உதவியது பற்றியும் பேசுங்கள்..
பக்கத்து வீட்டு மனிதருக்கு உடல் சரியில்லை என்றால் வேதனைபடும் மனிதர்கள் இன்னும் உலகில் இருக்கிறார்கள்...
ஆசை படுங்கள், அதிகமாகவே ஆசைபடுங்கள்..பல ஆண்டுகளுக்கு நோய் நொடியற்ற வாழ்வு வாழ ஆசைபடுங்கள்...
பதவி என்னும் முட்கிரீடம் தரித்து, சுதந்திர வாழ்வை அடகு வைத்து, வேளா வேளைக்கு குறித்த நேரத்தில் சாப்பிட கூட முடியாத பரபரப்பு வாழ்வை தவிர்த்து.
நிம்மதியாய் நமக்கு பிடித்த படி, நாம் நாமாக வாழும் நிம்மதி வாழ்வு.
பணத்திற்கு அதிகாரமும் ஆணவமும் தான் கட்டுப்படும்..
அன்பின் வழியில் யார் மீதும் யாருக்கும் கட்டு போட வேண்டிய அவசியமில்லை...
சாப்பிட்டு முடித்து உடனே, குழந்தை தெருவில் சென்று தான் விளையாடும்..
ஏனென்றால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கூட அடக்கு முறை பிடிப்பதில்லை.
சுதந்திரமாக அன்பாய வாழ்வதே தவம்..
ஓவ்வொரு நொடியும், மூச்சு விடுங்கள். சுதந்திரமாக படபடப்பின்றி, யாருக்கும் பயப்படாமல், பதவி சுகங்களில் மயங்கி, உங்களின் தனித்துவம் இழந்து விடாதீர்கள்.
.
நன்றாக யோசித்து பாருங்கள், சுதந்திர உங்கள் மூச்சாக மாறட்டும்..

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...