வேலை வெட்டி
இல்லாதவன்....படிக்காத முட்டாள்....
கோவில் கோவிலாக
சுற்றும் பரதேசி...
பணத்தை பற்றி
புரியாத பைத்தியக்காரன்...
ஏனோ எனக்கு
பிடித்த வார்த்தை
பிச்சைக்காரன்...
என்னுள் மாற்றத்தை
ஏற்படுத்திய குருவின்
மொழி அதுவே....
நிலையற்ற உலகில்
மதங்களை கடந்து
மனிதனாக வாழும்
வழியை சொல்பவர்.....
என் வானுலகத்தின் தந்தை
(My Father bless you)
உன்னை ஆசிர்வாதிக்கிறார்....
என்பதை புரிந்து கொள்ள
முடியாமல் தவிக்கும்.... அந்த
பிச்சைக்காரனிடம்
பிச்சையெடுக்கும் நானும்
ஓர் பிச்சைக்காரனே.
No comments:
Post a Comment