முதியோர் இல்லம் ????


.
.
இந்தியா வல்லரசாக வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கின்றனர்.உங்களின் சிந்தனையை மிகவும் மதிக்கிறேன்.ஆனால் இந்த நாடு வல்லரசாக மாற நீங்கள் ஏதாவது செய்தது உண்டா?..
உங்களையும் உங்களுக்கு மிகவும் பிடித்தவரையும் அழைத்து சுற்றுலா செல்லும் மனிதர்களே..
நம்புங்கள் இது தான் நிதர்சனமான உண்மை. இன்னும் பல நகரங்களிலும் கிராமங்களிலும் தனது சொந்த பிள்ளைகளால் அனாதையாக தெருவில் விடப்படும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
வரதட்சணை கேட்டு நடந்த கொடுமை மற்றும் பெண்ணுரிமை பேசும் பெரிய மனிதர்களே. சற்றே நிதானமாக சிந்தனை செய்து பாருங்கள். தயவுசெய்து சொத்துக்களை பிள்ளைகளுக்கு பெயர் மாற்றி கொடுத்த பிறகு, அவர்களை வீட்டில் அனாதையாகவும் சம்பளம் இல்லா வேலைக்காரர் போலவும் நடத்தும் நிலைமை பற்றியும் பேசுங்கள்.
.
.
பெண்ணுரிமை, பலாத்காரம் பெண் சமத்துவம் என்று மேடையில் முழக்கம் இட்டது மட்டுமே போதாது.
வயதான காலத்தில் தன் பல வருட உழைப்பை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தன்மானம் இழந்து வாழும் இவர்களின் கஷ்டத்தையும் உணர்ந்து பேசுங்கள் எழுதுங்கள்..
.
நான் சில நாட்கள் மிகவும் புனிதமாக கருதப்படும் கோவில்களில் வேலை பார்த்ததுண்டு, அந்த சமயத்தில் அங்கே வரும் முதியவர்கள் சொல்லும் கதைகள் இறைவனின் காதுகளில் கேட்டதா தெரியவில்லை. ஆனால் அதை கேட்டு விட்டு அழுத நாட்கள் உண்டு.
.
அவர்களில் சிலர் மிகப்பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், இசை மேதைகள் இன்னும் பல அரசு பதவியில் உயர்ந்த நிலையில் பணிபுரிந்த மனிதரும் ஏழை விவசாயிகளும் உண்டு.
தன் குழந்தையை அவர்கள் வளர்த்த விதம் சொல்லும் அழகில், இவ்வளவு செல்லமாக தன் பொருளாதார கஷ்டத்தின் நிழலை கூட குழந்தைக்கு காட்டாமல் வளர்க்க முடியுமா, என்று அதிசயித்த நிமிடங்கள் உண்டு.
.
எனக்கு ஓரே மகன் அவனை நான் கொஞ்சம் நெஞ்சம் இல்லை, ரொம்பவே செல்லமா வளர்த்து விட்டேன். என் மனைவி கூட சொல்லுவா, தம்பி.
இது எல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ ? என கோபமாக என்னை திட்டியதுண்டு.
இன்று அது என்னை இப்படி கோவில் கோவிலாக மனநிம்மதி தேடி, மேற்கொண்டு பேச இயலாமல் அவரின் நாக்கு மிகவும் குழறியது.
.
நீங்க இப்போ பேசாம இருக்க மாட்டீங்க, இந்த பையன் யாருன்னே தெரியவில்லை.
இவன்கிட்ட எல்லாம் நம்ம கதையை சொல்லிக்கிட்டு. வர வர உங்களுக்கு விவஸ்தையே இல்லை.
ஏதோ கோவில் வேலை பார்ப்பவரிடம் எல்லாம் நம்ம கஷ்டத்தை சொல்லுவது எந்த விதத்தில் நியாயம். அந்த தாய்மையின் பக்குவம், தன் மகன் தன்னை கஷ்டப்படுத்திவிட்ட விஷயங்களை கூட அடுத்தவருக்கு தெரியாமல் வாழ முயலும் வாழ்வு தான் எத்தனை ஆச்சரியம்.
.
சில சுயநலத்திற்கார மனிதர்கள்.
தன் மகளை (முறை பெண்ணை) அவன் திருமணம் செய்யவில்லை என்ற காரணத்தால் தன் அக்கா மகன் என்று கூட பாராமல்.
தனது உடன்பிறந்தவளிடன் மிகவும் பாசமாக இருப்பது போல் நடித்து, தாய் தந்தையை தெய்வம் போன்று பார்த்த மகனின் மனதை , தனது அரசியல் காய் நகர்த்தல் மூலம் அவனின் வாழ்வை நோகடித்து விடுகின்றனர்.
.
இரண்டு பக்கமும் தன்னால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒற்றுமையாக இருந்த குடும்பங்களை பிரித்து விடுகின்றனர்.
.
.
"செய்த வினை செய்தாரை சாரும்",
தன்னை வினை தன்னை சூடும் என்பது பழமொழி.
.
யாருக்கும் தீமை செய்யாத அந்த அப்பாவிகளை துன்புறுத்தும், அவர்களை மறந்து மன்னித்து விட்டு,
தன் சொந்தங்களை யாரும் காட்டிக் கொடுக்காமல், வீட்டிற்கு வெளியே நிம்மதி தேடும் அந்த தாய் தந்தை.
ஏனோ தனக்கும் மகன் மகள் இருப்பதை மறந்து விடுகிறார்கள்.
மனம் மிகவும் வலிக்கத்தான் செய்கின்றது.
பாரத பண்பாடு, கலாசாரம் என மார் தட்டுகிறோம்.
எத்தனையோ அவசர சட்டத்தை இயற்றும் அரசியல்வாதிகளே, ஓரே ஓர் சட்டத்தை இயற்றுங்கள்.
இந்தியாவில் இனி முதியோர் இல்லங்கள் கூடாது என்று, ஏனென்றால் இந்தியா என்பது கலாச்சாரத்தின் அடையாளம்.
வயதான காலத்தில் தன் ஆசை மகனையும் மகளையும் நினைத்து மனதில் அழுது விட்டு, வெளியே சிரிக்கும்.
ஏழை , பணக்கார மற்றும் நடுத்தர வீடுகள் அனைத்திலும் அரங்கேறுகிறது.
இந்த கொடுமைகள் இனியாவது மாற வேண்டும். அவர்கள் படும் வேதனைகளை வயதான போது உணரும் நிலை வேண்டாம்.
பல வீடுகளிலும், இந்த கதைகள் இருக்கின்றன. ஆனால் காட்சிகள் தான் வேறு.
.
வாருங்கள் அனைவரும் இணைந்து உருவாக்குவோம், பாசமான நேசமான உறவுகளை, சாதியும் மதமும் பேசி பிரிவினை வேண்டாம்.
அன்பை விதைப்போம்..
உருவாகட்டும் புதிய பாரதம். "பாசமான பாரதம், ஓளிரட்டும்".

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...