என் இரு காதலிகள்

 ஒருத்தி என் நிழலை கூட தொடாமல் தள்ளி நின்று ரசித்தவள்... இன்னொருத்தி கைகளை தொட்டு காதல் இம்சை செய்தவள்...


என்னது உனக்கு இரண்டு காதலியா...

உனக்கு கூட காதல் இருக்கா என்பது புரிகிறது மேற்கொண்டு படியுங்கள் நண்பர்களே உங்களின் சந்தேகம் தீரும்.

என் முதல் காதலி அவள்... தன்னை யாருமே புரிந்து கொள்ள வில்லை இவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்வதற்கு பதிலாக வாழ்வை முடிச்சுகிட்டா கூட நல்லது தான் என்று சில நாட்கள் அல்ல பல நாட்களுக்கு யாருக்கும் தெரியாமல் கண்ணீர் விட்டவள்.

"யாருக்குமே தெரியாது என்று நீதான் சொல்லுறே பிறகு எப்படி உனக்கு தெரியும்".. ஆமாம் எனக்கு நல்லாவே தெரியும் அது மட்டும் அல்ல அவள் பிறரிடம் சொல்லாத வலிகளை கூட அறிவேன்.ஏனென்றால் என் வருகையை எதிர்பார்த்து நான் வந்த பிறகு என்னை எப்படி யெல்லாம் கொஞ்ச வேண்டும் எனது அன்பிற்காக கெஞ்ச வேண்டும் என்று ஓவ்வொரு நாளும் தவித்தாள்.

அவளின் மனசாட்சி நானே.. என்னை மருகி மருகி உருகி காதலித்தாள்.ஆயினும் ஓர் முறை கூட I love you,  என்று உதட்டில் ஜோடனை செய்யாதவள். 

என்னை காதலிப்பதை தனது செயல்களால் உறுதி செய்வாள். எப்போதும் தண்ணீரையே வாழ்வாக கொண்டவள்.

என் கண்ணில் கண்ணீர் வந்துவிடக்கூடாது என்று எனக்காகவே வாழ்ந்தவள்...

மற்றொருத்தியோ என் வருகையை எதிர்பார்க்காமல் இருந்தவள்...

என் தலையெழுத்து இந்த வேலையை எல்லாம் செய்ய வைச்சுட்டான் அந்த ஆண்டவன்...

என் கூட படிச்சவங்க எல்லாம் நல்ல சம்பளத்தில் வெளிநாட்டில் வேலையில் இருக்காங்க.. என்னை பெத்தவங்க சரியா இருந்திருந்தா எனக்கு இந்த நிலை வந்திருக்குமா..... தனக்கு கொடுத்த வேலைய வாங்கும் சம்பளத்திற்கும் அதிகமாகவே திறம்பட செய்தாலும் அடிக்கடி மனதில் உண்மையான காதலையும் அன்பையும் தேடியே ஓவ்வொரு நாளும் மனதிற்குள் புலம்பியவள்.. 

இந்த உலகத்தில் எல்லோரும் ஏதோ ஓர் விதத்தில் எதாவது ஓன்றை பிரதிபலனாக எதிர்பார்த்து தானே காதலிக்கிறாங்க....

என்னை பற்றி எந்த கேள்வியும் கேட்காம பார்த்தவுடனே என் மீது அன்பு செய்ய யாராவது என் வாழ்வில் வந்தா எப்படி இருக்கும் என்றாவது இந்த நினைவு வந்தாலும்.

ச்சே என்ன ஓர் அல்பதனமான ஆசை.இந்த உலகத்தில் உப்பு வாங்கணும் என்றால் கூட காசு கொடுத்தால் தானே கிடைக்கும்.

எதுவுமே கொடுக்காம எப்படி அன்பு செய்வாங்க. தன் முட்டாள்தனத்தை தானே கேலி செய்து சிரித்து கொண்டவள்...

தன்னை சுற்றி இருக்கும் அனைவரிடமும் தான் மட்டுமே உலகில் மிகவும் சந்தோஷமாக இருப்பது போல நன்றாகவே நடிக்க தெரிந்த நடிப்பின் தேவதையவள்..

ஆமாம் அவள் நடிக்கிறாள் என்பதை முதல் பார்வையிலேயே தெரிந்து கொண்டேன்.

அவளைப் போலவே நானும் அவளின் முகத்தில் அன்பை உருவாக்க ஓர் முறை தான் சிரித்தேன்.அதுவும் கூட முகம் மலர்ந்து சிரிக்கவில்லை.

இதழ் ஓரமாக அவளுக்கு மட்டும் புரியும் விதமாக செல்லமாக சிரித்தேன்.. பிறகு தான் புரிந்தது அவளோ அன்பு அரக்கியென்று... என்னை வாரிமுத்தமிட்டாள்... முத்தம் மட்டும் கொடுத்தால் பரவாயில்லையே.. வாரியணைக்கும் போது இதுவரையில் தன் நெஞ்சில் அடக்கி வைத்திருந்த அன்பை கண்களில் வழியாக என் உடலின் மீது செலுத்த முயன்றாள்...

எனது நெஞ்சில் அவளின் இருதுளி கண்ணீர் பட்டதால் அதன் வெப்பம் தாங்காமல் சத்தமிட்டு அழுதேன்.


வெளியில் நின்றவர்கள் பேசும் சத்தம் நன்றாகவே கேட்டது முதல் நாள் அதனால் தான் இவ்வளவு சத்தம்.போக போக அவனுக்கு எல்லாமே பழகிடும்...

இன்னிக்கு அழுபவன் நாளைக்கு சிரிப்பான்..நம்மை எல்லாம் அவன் தானே காப்பாத்தணும்...

வெளியே இருப்பவர்கள் தன்னை கவனித்து விட்டார்கள் என்பதை நினைத்தவுடன் அவளின் முகத்தில் வெட்கம் படர்ந்தது.. 

 ப்ளீஸ்டா ரொம்ப பண்ணாத... எனக்கு எத்தனை பேர் லவ் லெட்டர் கொடுத்து இருக்காங்க தெரியுமா... ஆனா அவங்க எல்லாமே போலிடா என் உடல் அழகை பார்த்து காதலிக்கிறாங்க.. யாரிடமும் சொல்ல விரும்பாத சொல்லாத ரகசியங்களை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்ற தைரியத்தில் சொன்னாள்.

அடியே அன்பு கிராதகி... எதுக்கு டீ உன் கதையெல்லாம் என் மண்டைக்குள் திணிக்கிறே... என்னை விடுடீ  சீக்கிரமா நான் போகணும்.. என் இருந்தால் என் முதல் காதலி என்னை அங்கே தேடிக்கிட்டு இருக்கிறா... என்னை காணாமல் அவள் எவ்வளவு தவிக்கிறா தெரியுமா....

சொல்ல நினைத்த விஷயத்தை எப்படித்தான் உடனே புரிந்து கொண்டாளோ..

எனக்கு முதன்முதலாக அவளை பற்றிய சந்தேகத்தை விட பயமே மேலோங்கியது..

ஓர் வேளை இவளுக்கு மந்திரம் ஏதாவது தெரியுமோ.மனதில் நினைத்த விஷயத்தை எப்படி சொல்லுறா...

ப்ளீஸ்டா கத்தி கூச்சல் போட்டாதே இன்னும் ஓரே ஓர் தடவை மட்டும் என்று அனுமதி வாங்கி முத்தமிட தொடங்கியவள் நாலைந்து முத்தங்களால் என் உடலை எச்சிலாக மாற்றினாள்.

அவளின் உதட்டில் மீறி எச்சில் வடிந்தது..

நீ ரொம்ப பெரிய ஆளுதான்டா யாரை திருப்பி கூட பார்க்காத என்னைய இப்படி ஜொள்ளு விட வைச்சுட்டே..தனது பெண்மையின் வெட்கத்துடன் பேசி சிணுங்கினாள்... எனக்கு அவளை பிரிய மனமில்லை ஆனால் என் முதல் காதலி எனக்காகவே காத்திருக்றாளே.... அவள் மிகவும் பொறுபைசாலி இவளை போல .. தன் முகத்தில் வழிந்த எச்சிலை துடைத்துக் கொண்டவள்...

டேய் உன் மனசு எனக்கு புரியது ... இதுக்கு மேல எதுவும் யோசிக்காதே என சிந்தனைக்கு கூட தடை விதித்தாள்...


சில நொடிகளில் பெரிய அளவில் பாசமும் நேசமும் காட்டியவள்...உங்க பையன் பயங்கரமான சேட்டைக்காரன் என்னை இதுவரைக்கும் இவ்வளவு தூரம் யாரும் இம்சைபண்ணலை என்றே புராணம் பாடினாள்.


நான் அவளை காட்டி கொடுக்க மாட்டேன் என்ற தைரியத்தில் என்னை பற்றி பலர் முன்னிலையில் புகார் செய்தாள்...


மன்னிச்சிடும்மா... அவன் குழந்தை தானே அவனுக்கு என்ன தெரியும்...

அவள் மனதிற்குள் நினைத்தாள் ..ச்சே இவனை பார்த்துகிட்டே இருக்கணும் போலவே இருக்குது...

உங்க வீடு எங்கே இருக்கிறது மனதின் கள்ளதனத்தை வார்த்தையில் மறைத்தாள்....

நீ எப்போ வேண்டுமானாலும் எங்க வீட்டுக்கு வாம்மா...யாரும் உன்னை தப்பா நினைக்கவே மாட்டோம்....யாரோ ஒருவர் சொல்லுவதை கேட்டவுடன் சரிங்க நான் கிளம்புறேன் 


வேகவேகமாக நடந்தவள் நேராக குனிந்த படியே ரெஸ்ட் ரூம் நோக்கி நடந்தாள்..

அவளின் காதுகளில் அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் ஒலித்தது

உன்னை நாங்க யாரும் தப்பாவே நினைக்க மாட்டோம்... ரெஸ்ட் ரூம்மில் அன்று யாருமே இல்லை..

கண்ணாடியில் தன் உடலை பார்த்தவளுக்கு கோபம் கோபமாக வந்தது.

தப்பாவே நினைக்க மாட்டாங்களாமே... மீண்டும் மீண்டும் சொல்லி கோபத்தை தனக்குள் ஏற்றிக்கொண்டாள்...

போன வாரம் கூட வேலை முடிந்து வீட்டுக்கு போக நேரமானது...

மழை வேறு தன் பங்கிற்கு இடைஞ்சலாக தூவானம் தூவியது... 

வீட்டின் அருகே திண்ணையில் அமரந்திருந்த இருவர் பேசுவது காதில் கேட்டது...

அப்பன் போய் சேர்ந்துட்டான்..இனி இவளை யாரால் கேட்க முடியும் இஷ்டத்துக்கு அலையுறா...

அம்மாவுக்கு கூட கோபம் வந்தது..ஏண்டீ உன்னை தப்பா பேசுறான் நீ எதுவுமே சொல்லாம வந்துட்டு இருக்கிறே..

நீ பதில் பேசாம வந்தா இதையே பல முறை பேசி உன்னை .....ஏதோ சொல்ல தொடங்கியவளை


அம்மா நீ எதுக்காக இவ்வளவு கோபப்படுறே.... அவங்க உன்னையாவா தப்பா பேசுனாங்க... என்னை பத்தி தானே பேசுறாங்க பேசிட்டு போகட்டும்.. இந்த மாதிரி ஆளுங்களுக்கு பிறரை பற்றி புரணி பேசுறது ஓண்ணு தான் சந்தோஷமே...

அவங்க பேசுற பேச்சுக்கு பதில் பேசினா நமக்கு தான் அவமானம் அது போக இப்படியெல்லாம் பேசுறாங்களே என்று நினைச்சா நோய் தான் வரும்...

அப்பா என்கிட்ட சொன்னது உன்னை நல்லா பார்த்து சொல்லியே.... நான் எந்த தப்பும் பண்ணலை என்பது எனக்கு தெரியும்

அப்படி ஒருவேளை தப்பான தொழில் பண்ணுறவளா இருந்தா மாசம் 500 தங்க சீட்டை கட்ட முடியாம... இரண்டு மாசமா நான் தவிக்கிற தவிப்பு அவங்களுக்கு தெரியும்..

என்னை பத்தி தப்பா பேசுறாங்கன்னு சொல்லுறீயே அவங்க கிட்ட போய் பத்து ருபாய் கேட்டு பாரு தருவாங்களா பார்க்கலாம்...

காலையில் வைத்து சாதம் தண்ணீர் விட்டு வைத்திருந்தது...அதை தட்டில் எடுத்து போட்டால்.அம்மா இங்க வா நீ ஆசையா கேப்பீயே.. உருளைக்கிழங்கு போண்டா சூட சூட போட்டுகிட்டு இருந்தா..

இன்னிக்கு எதிர்பாராத விதமா இருபது ரூபாய் கிடைச்சுது.... கண்ணில் சந்தோஷம் பொங்க பேசியனாள்

ஏதுடீ உனக்கு இவ்வளவு காசு...

அவளுக்கு எரிச்சலாக வந்தது தெருவில் உள்ளவன் பேசுகிறான்..இவளோ தன் மகளை தவறா பேசவில்லையே தவிர மனதிற்குள் அடிக்கடி சந்தேகத்தை வளர்கிறான்..அம்மாவாக இருப்பதால் கொச்சையாக கேட்காமல் அதிகாரத்துடன் கேட்கிறாள்...நினைத்தது எல்லாம் பேச முடியாத உலகில் பிறந்து விட்டதால் மெளனமாக இருந்தாள்..

ஏன்டீ திருட்டு நாயே உன்னை தானே கேட்குறேன்... பதில் சொன்னா குறைச்சாடீ போவ... வயசான காலத்துல தறுதலைய என் தலைகட்டி விட்டு போய் சேர்ந்துட்டான் அந்த மகராசன்.


இப்போ எதுக்கும்மா அப்பாவை திட்டுறே..அவர் நமக்கு முடிஞ்ச வரைக்கும் நல்லது தானே செஞ்சாரூ...

அந்த பரதேசி பய அக்காவீடேன்னு தானே கிடந்தான்... சம்பாதிச்சதை எல்லாம் அவளுக்கு வாரி இறைச்சான்... உலகத்துல இல்லாத அக்கா தம்பி பாசம்

எல்லாம் என் தலையெழுத்து டீ உச்களை கட்டி மார்அடிக்கிறேன் பாரூ....

நீ பதிலுக்கு பதில் பேசி சண்டை போட போய் தானே அவர் பாதி நேரம் அக்கா வீட்டுக்கு போனாரூ.. அங்கே கூட அவரை வேலைக்காரன் மாதிரி தானே நடத்துனாங்க உனக்கு தெரியாதது உண்டா...

சிறுக்கி நாயே கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு குந்தாணி... உனக்கு வடிச்சு போடுறது நானு எதிர்த்து பேசின.இருக்கு பார்த்துக்கோ கையில் இருந்த டம்ளரை எடுத்து அவள் மீது கோபத்தில் வீசினாள்...


கையில் இருந்த பழையதை தட்டி விட்ட படி தரையில் விழுந்து சத்தமிட்டது

இவ ரொம்ப பாவம் ஆத்தாளுக்காக கல்யாணமே வேண்டாம்ன்னு இருக்கா..அது அவங்க ஆத்தா காரிக்கு புரியலை.. ச்சே சும்மா சொல்ல கூடாது ரொம்ப ஒழுக்கமான பொண்ணு..

சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை அவளுக்கு. சில நிமிடங்களுக்கு முன் பேசிய நாக்கு பேச்சை மாற்றி பேசியது

எறிட்டு பார்த்தாள்... நீ உண்மையை மட்டும் பேசு, யாருக்கும் பயப்படாதே என்று அப்பா படத்திற்குள் இருந்து பேசுவது போல் இருந்தது...


பத்து வருஷம் கழிச்சு அவங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு.. அந்த சந்தோஷத்தில் குழந்தையோட அப்பா கொடுத்தார்... மார்கெட்-ல லோடு மேன் வேலை பார்க்கிறார்.. உனக்கு நிறைய கொடுக்க தான் தாயீ ஆசை ஆனா இருந்த பணத்தை எல்லாம் ஆஸ்பத்திரியில் கட்டியாச்சு நாளைக்கு மச்சான் ரூவா கொண்டு வருவான் உனக்கு 100ரூ தாரேன் அப்படின்னு சொல்லியிருக்காரூ.

நாளைக்கு மறக்காம அந்த ரூபாயை வாங்கிட்டு வா.. உங்க அப்பனை மாதிரி பணத்தை விட பாசம் தான் பெருசுன்னு பேசி வைக்காதே..‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கல்யாணத்து பணத்தை சேர்க்க வழி பாரூ...

அம்மா எதுக்கு இதுவே போதும் ஏதோ இருபது ரூபாய் என்பதால் வாங்கினேன்...இதுவே ஆயிரம் ருபாய் கொடுத்திருந்தா... சார் மன்னிச்சுக்கோங்க இந்த ஆஸ்பத்திரியில் என் தகுதிக்கு சரியான சம்பளம் கொடுக்கிறாங்க இந்த மாதிரி பணத்தை அன்பளிப்பா வாங்குறது தெரிஞ்சா எங்க மேடம் மனசு கஷ்டப்படுவாங்க...

போடீ பைத்தியகாரி...பொழைக்க தெரியாதவ... சத்தமாவே பேசினாள் 

ஏய் ரெஸ்ட் ரூமில் என்னடீ இவ்வளவு நேரம்.. டாக்டர் உன்னை கூப்பிடுறாரு.


வார்டுக்கு அவசர கதியில் சென்றவளுக்காக காத்திருந்த டாக்டர்ம்மா...

அப்படி நீ என்ன மந்திரம் போட்டீயோ... உன்னை இவங்க எல்லோரும் புகழுறாங்க...

என் வேலை மட்டும் தான் மேடம் நான் பார்த்தேன்....


200 ரூபாய் கொடுத்ததை வேண்டாம்னு சொல்லிட்டீயாமே...

அது வந்து மேடம் நீங்க தான் கை நிறைய சம்பளம் கொடுக்குறீங்களே..

அவங்க பத்து இருபது ரூபாய் தான் வாங்குவாங்க 100..200.1,000 எல்லாம் வாங்க மாட்டாங்க...

குறைந்த ரூ கொடுக்கிறவங்க தான் அன்பானவங்க நிறைய ரூ கொடுப்பது தன்னோட பணக்கார திமிரை காட்டுறது அதனால் தான்.லட்சக்கணக்கான ஆஸ்பத்திரி பில் பற்றிய நினைவு வந்ததுடன் பேச்சை..மெளனமாக மாற்றினாள்

டாக்டர்ம்மா.. அவளின் கன்னத்தை தட்டினாள்..உன்னை மாதிரி எல்லோரும் இருந்தா பத்து ஆஸ்பத்திரி கட்டுவேன்..


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...