739 - சோமு Vs காமு

 சோமு Vs காமு 


ஓர் ஊரில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் பிறந்த இருவர் நண்பர்களா இருந்தனர்.


அவர்கள் சிறுவயது முதலே எங்கே சென்றாலும் சேர்ந்தே போவாங்க வருவாங்க..

அவங்களுக்கு நிறைய திறமை இருந்தாலும் தன்னோட திறமையை யாருமே மதிக்கிறது இல்லை என்ற கவலை இருந்தது.

ஊர் மக்கள் எல்லோருமே இவங்க இரண்டு பேரையும் செல்லா காசு மாதிரி தான் பார்ப்பாங்க நடத்துவாங்க.


ஏன்னா நான் எவ்வளவு பெரிய திறமைசாலி தெரியுமா என்ற தலைக்கனம் இரண்டு பேருக்குமே இருந்தது.


நான் தான் இந்த உலகத்துலேயே பெரிய மனுஷன்.

என்னை சுத்தி இருக்கிறவன் எல்லாமே பிச்சைகார பயலுக என்பது போல் தான் பேசுவாங்க நடந்துப்பாங்க.

குடும்பத்தோட கஷ்டத்தை கூட புரிந்து கொள்ள தெரியாம..

எல்லோர் வீட்டிலும் கறி சோறும் சுடு சாதமும் தினமும் பண்ணுறாங்க.

உன்னால் உன்னோட மகனுக்கு கூட நல்ல சோறு போட வக்கில்லை...உன்னை கட்டிக்கிட்ட எங்க அப்பனை சொல்லணும்.. ஓர் புத்திசாலி பொம்பளையை கல்யாணம் பண்ணி இருந்தா காசு சேர்கிறது என்று தெரிஞ்சு இருக்கும் உன்னை மாதிரி சரியான அழுமூஞ்சியை கட்டிக்கிட்டு....

தன்னை பெற்ற அம்மாவை காயப்படுத்துகிறோம் என்று கூட தெரியாமல் புரியாமல் பேசிய இந்த இரண்டு ஏழை நண்பர்களுக்கு ஓர் பணக்கார நண்பனும் கிடைத்தான்..


டேய் சோமு நம்ம ஊரிலேயே ரொம்ப புண்ணியம் பண்ணி கொடுத்து வைச்ச ஒருத்தன் இருக்கான் என்றால் அது நம்ம பெரிய வீட்டு மீனாட்சி சுந்தரம் தான்டா..


அவங்க அப்பா அம்மா இரண்டு பேருமே நல்லா படிச்சவங்க அவங்க தாத்தா பாட்டி கூட அந்த காலத்துல படிச்சு இருக்காங்கடா.

என்னத்த சொல்லுறது நம்மை பெத்த அப்பனும் ஆத்தாளும் இருக்காங்களே எப்போ பாரூ ஓரே பழைய புராணத்தை பாடிக்கிட்டு...

இந்த வீட்டில் வந்து பிறந்து நாம படுற கஷ்டம் இருக்கே..

ஆமாண்டா.. நமக்கு அடுத்த ஜென்மம் என்று ஓண்ணு இருந்தா... மீனாட்சி சுந்தரம் வீட்டில் போய் பிறக்கணும் டா 


சும்மா சொல்ல கூடாது தான்.போன வருஷம் தான் கல்லூரி படிப்பு முடிச்சா அவங்க தாய் மாமன் பம்பாயில் இருக்காராமே...அவரூ அவனை அங்கே ஓர் பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்த்து இருக்கார்.

அனேகமாக அவருக்கு இருக்கிற அந்த பொண்ணை செல்வியை அவனுக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுவாரூ..

அதுக்கு பிறகு அவருக்கு என்ன குறைச்சல், ஏற்கனவே அவரோட இரண்டு பையனும் பாரினில் போய் படிச்சுட்டு வந்திருக்கானுங்க..

டேய் காமேஸ்வரா, . இவன் பாடுக்கு பம்பாயில் வேலை கிடைச்சு போயிட்டா.. இவங்களோட விவசாய நிலத்தை எல்லாம் வித்துட்டு தானே போவாங்க..

அட போடா பைத்தியகாரா.. அவனோட தம்பி மாதேஸ்வரன் இவனை விட நல்லா படிப்பான்.ஆனா மேற்கொண்டு படிக்க விருப்பமில்லை என்று அவங்க அப்பாகிட்ட பயங்கரமா சண்டை போட்டு இருக்கான்.அதுமட்டுமில்லை, நான் ஸ்கூல் பர்ஸ்ட் வந்தால் தானே என்னை காலேஜில் போய் சேர்ப்பீங்க என்று மாதாந்திர பரீட்சையில் எல்லாம் முதல் மதிப்பெண் வாங்கியவன் வேண்டுமென்றே... பள்ளி இறுதியாண்டு பரீட்சையில் 100 மார்க் கேள்வி தாளில் எல்லாம் வெறும் 60 மார்க் -க்கு மட்டும் தான் பதிலே எழுதி இருக்கான்.


பரீட்சை ஹாலில் மேற்பார்வை பார்த்த பள்ளி கூட வாத்தியார், டேய் மாதேஷ் உனக்கு தான் எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரியுமே எழுதுடா.. உன்னால் தான் நம்ம பள்ளி கூடம் மாநில ரேங்க் வாங்க போகுது என்று தலைமையாசிரியர் தினமும் உன்னை புகழ்ந்த வார்த்தைகள் பொய்யா போயிட கூடாது என்று சொல்லி இருக்கார். 

அதுக்கு இவன் என்னடா பதில் சொல்லி இருக்கான்.. 

சார் எனக்கு பரீட்சை எழுதவேண்டும் விருப்பம் இல்லை இருந்தாலும் எங்க அம்மா அப்பா பெயரை காப்பாத்தணும் எனக்கு அது போதும் என்று சொல்லி விட்டு வந்திருக்கான்.


டேய் நம்ம ஹெட் மாஸ்டர் சரவணன் இவனை தலை மேலே தூக்கி வைச்சுகிட்டு சுத்துவாரேடா..


ஆமாண்டா பரீட்சை முடிந்த பிறகு இவனை கூப்பிட்டு அவர் அக்கறையா விசாரிச்சு இருக்கார்.. வீட்டில் ஏதாச்சும் பிரச்சினை என்றால் சொல்லுடா நான் வந்து உங்க அப்பாகிட்ட பேசுறேன் நீ மட்டும் நல்ல மார்க் எடுத்தா உங்க அப்பா உன்னை லண்டனுக்கே அனுப்பி படிக்க வைக்கிகாத்து இருக்காரூ.


அதுக்கு இவன் என்னடா சொல்லி இருக்கான்.




கதை தொடரும் 


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...