742 - அப்பாவ தொந்தரவு பண்ணாதீங்க

 மாமனார் மரியாதையை எதிர்பார்க்கிறார் 

மருமகன் நன்மதிப்பை 

எதிர்பார்க்கிறான் சம்பந்தி ஆலோசனையை எதிர்பார்க்கிறார்.

தங்கையோ நகையை 

எதிர்பார்கிறாள் மகனும் மகளும் எல்லையற்ற பாசத்தை தன்னை பெற்றவருக்கு கொடுத்துவிட்டு அவர்களின் முகத்தில் 

சந்தோஷத்தை எதிர்பார்க்கின்றனர்..

அன்பான மனைவியோ அறுசுவை 

உணவை செய்து கொடுத்துவிட்டு 

எனது வாய் வார்த்தை கேட்க எதிர்பார்க்கிறாள் என்ன செய்வது 

சில நேரங்களில் உலகத்திடம் 

காட்ட இயலாத கோபத்தை காட்டுகிறேன்...  கவலையை 

மறக்க மதிய தூக்கத்தை தழுவியவன்.

தூக்கம் கலந்து சற்றே தலைநிமிரும் போது மனைவி மகன் மகளுக்கு  இடையே நடக்கும் ரகசிய ஆலோசனை காதில் விழுந்தது.... நீங்க அப்பாவை 

ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க 

அப்பாவுக்கு நம்ம எல்லார் மீதும் 

ரொம்பவே பாசம் அதிகம் அதனால் 

தான் தன்னோட கவலையை 

நம்மகிட்ட சொல்ல மாட்டேங்குறார்...

நீங்க அப்பா திட்டினா கேட்டுக்கோங்க 

எதிர்த்து பேசாதீங்க...ஏனோ கண்கள் 

கலங்குகிறது....இவர்களையோ 

திட்டினேன்.. நினைத்துப் பார்க்கிறேன் 

எனது அம்மா என்னிடம் சொன்ன 

அதே வார்த்தைகள் நம்ம அப்பாவை 

தொந்தரவு பண்ணாதீங்க....

நம்ம அப்பா ரொம்ப பாவம் பிழைக்க தெரியாத மனுஷன் அவருக்கு நம்மை விட்டா யாரு இருக்கா 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...