740 - முருகா நீயே துணை

கவலையோடு 

வந்த பலர் கந்தா..முருகா...

இனி நீயே துணையென்றே

தன்னை மறந்து தும்பிக்கையை 

தெய்வத்தை முதலில் தொழுதே 

பின்னர் சிவனின் 

தவப்புதல்வனை நினைந்து 

கடலில் முழ்கி 

எழுந்து போது காதுகளில் 

ஒலிக்கிறது யாரோ சொல்லும் 

வார்த்தை என்னங்க நம்ம 

முருகனை எல்லா பிடிச்சுக்கோங்க...

நமக்கு எல்லாமே அவன் தானே 

திருப்பிப் பார்த்தேன்.

பல வருடங்களாக குழந்தை 

இல்லாம இருந்தவளுக்கு 

முருகன் கொடுத்த வரம் 

பதிலுக்கு யாரோ பேசிக்கொண்டனர்.

உணர்ச்சிகள் மேலிட மனதின் 

எல்லையற்ற கவலையை கடலில் 

கரைக்கும்  பல்லாயிரக்கணக்கான 

மனிதரின் நானும் ஓர் சாதாரண 

சராசரி எண்ணம் கொண்ட 

பரந்தாமன் மருமகனின் பக்தனாக...

நனைந்த உடையுடன் 

கரையில் ஏறும் போது 

ஏறிட்டுப் பார்த்தேன்.

தலைநிமிர்ந்து நிற்கும் 

ராஜகோபுரம்... சந்தோஷத்தின்

மிகுதியில் சஞ்சலங்கள்  மறைந்தது 

மதிய வேளையில் மணலின் 

சூடு கூட சுகமாகவே இருந்தது...

கோவிலிலுக்குள் நுழையும் 

முன்பே ஆர்ப்பரித்த மக்கள் சிலர் 

"முருகா முருகா " வழி விடுங்க 

தங்க தேர் வருது.. 

தங்கத் தேர் வருது..சோதனை 

ஓட்டமாக மதிய வேளையில் 

மயிலேறிய வேலன் சப்பரத்தில் 

சிரித்து படியே காட்சி தருகிறான்...

மனித வாழ்வின் சிக்கலை 

நீக்கும் சிங்கார வேலவன்...

பட்டாடையில் பிறந்தநாள் 

கொண்டாடும் குழந்தைகள் சிலர் 

பத்தாவது பாரும் போற்றும் படியே

பாஸாகி விட பரிதவித்து 

தலைகனம் தவிர்த்து 

தலைகுனிந்து வணங்கும் சிலர் 

புதிதாக திருமணமான சிலர் 

பல வருட தவத்திற்கு பிறகு 

தனது முதல் குழந்தையின் 

முதல் வருட பிறந்தநாள் 

கொண்டாடும் சிலர்.

இழந்த வேலையை 

விட கண்ணியமான 

கெளரவமிக்க வேலை 

கிடைத்த மகிழ்ச்சியில் சிலர்.

எங்க அப்பாவுக்கு நோய் 

குணமாயிடுச்சு என்றே 

சங்கடம் தீர்ந்த சலனத்தில் சிலர் 

இந்த ஏழை கிழவிக்கு நீயே 

இனி துணையென்றே 

ஏக்கத்துடன் சிலர்...

பேத்தியின் விரல்களை 

பிடித்த படி வயதான 

பாட்டி.. கவலைப்படாதே 

நான் உன்னை நல்லா 

பார்த்துக்குவேன்... 

சின்னஞ்சிறு தேவதையின் 

அன்பு மொழி...உங்க ஆத்தாளுக்கு

என் மகள் தான் லாயக்கு 

பக்தி முற்றுவதற்கு முன்னால் 

பொறுமலுடன் அவள்..

அருகில் பொறுமையுடன் அவன்..

கையில் காசு இல்லாத 

காரணத்தால் சொந்தங்களால் 

பந்தாட்டப்பட்ட அன்பு மிகுந்த 

ஏழை அப்பாவுக்கும் 

அம்மாவுக்கும் என்னை தவிர  

யாருமில்லையே. அவங்களுக்கு 

"திருச்செந்தூர் வேலவா"

எனக்கோ உன்னை தவிர 

கையிலும் மனதிலும் 

ஏதுமில்லை . ஏற்றமிகு 

வாழ்வு தந்து தரணி புகழும் 

வள்ளியின் மணவாளனே... மனிதரின் 

எண்ணங்கள் பலவிதம் ஆனாலும் 

அனைவரின் வார்த்தைகளும் 

ஓரே விதம்.. விண்ணை 

முட்டுகிறது  சரகோஷம்

"முருகா நீயே துணை"

சில நொடிகளில்  

பதவியும் பட்டமும் 

பணக்கார தோரணையும்

எல்லாமும் மறந்தே போனதே

என்னையும் அறியாமல் 

தன்வயமிழந்து தலைக்கு மேல் 

கைகூப்பி உதடுகள் 

முணுமுணுத்தது 

"முருகா..முருகா..

முருகா...." தங்கத்தேர் 

நகர்ந்து சென்றதும் 

சுயநினைவுக்கு வந்தே 

வேகவேகமாக கண்களை 

துடைத்துக்கு சுற்றிமுற்றி 

பார்த்தேன்... கண்களில் 

தழுப்பிய கண்ணீரை கூட 

துடைக்க நினையாமல் 

முருகா முருகா என்றே 

கோவில் கோபுரத்தை 

நோக்கி தொழுதும் 

மனிதர்கள் பலர்.. என்னுள் கூட 

ஆவணம் அழிந்து நானும் 

சுய நினைவோடு 

கை தொழுதேன் 

சுரனை அழித்து 

வேலை உயர்த்தி  எங்களின் 

வேதனைகளை நீக்கிய 

கடல் கொஞ்சும் 

திருச்செந்தூர் அருளும் 

"முருகா நீயே என் துணை"


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...