தந்தையின் இழப்பு

தந்தை இறந்து விட்டார், என்பதை இன்னும் நம்ப முடியாமல் நேரமும் கடந்து கொண்டு தான் இருக்கிறது

இருந்த போதிலும் அவர் ஏற்படுத்திய நிகழ்வுகள் எத்தனை எத்தனையோ...

முதன்முறையாக பள்ளிக்கூடத்தில் சேர்க்க அழைத்து சென்ற நாள் தொடங்கி சைக்கிள் ஓட்டுவதற்காக பின்னால் ஓடி வந்து மூச்சிறைக்க நின்றதும், கல்லூரியில் சேரும் போது தன் குழந்தை பெரியவனாக வளர்ந்து விட்டதையும் மறந்து, பச்சிளம் குழந்தைக்கு அறிவுரை சொல்வது போல கல்லூரியின் மரத்தடியில் அமர்ந்து பேசிய கதைகளும்.

வேலைக்கு சேர்ந்து பெற்ற முதல் சம்பளத்தை அவர் கையில் கொடுக்க நினைத்து, அவரிடம் நீட்டிய தருணத்தில் உன் பணத்தை நான் கையால் தொட மாட்டேன்.

உன் உழைப்பில் கிடைத்த பணம், அதை நீ எப்படி வேண்டுமானாலும் செலவழித்து கொள்.ஆனால் உனக்கு ஏதாவது பணம் தேவை என்றால் யாரிடமும் கை நீட்டி கடன் வாங்கி விடாதே, தன் வாழ்நாளின் அனுபவத்தை வார்த்தைகளில் வார்த்தெடுத்த நாள்...

திருமணமான புதிதில் மனைவியின் சொல்லையும் தவிர்க்க முடியாமல், அம்மா, தங்கையின் சந்தோஷத்தையும் நினைத்து தடுமாறி நின்ற போது..

உன் மனைவி சொல்வதில் நியாயம் இருந்தால், அவள் சொற்படி நடப்பதில்லை தவறில்லையே.

மிகவும் யதார்த்தமாக கஷ்டமான தருணத்தை அது அனுபவத்தால் அனுசரித்து போக சொல்லும் அனுபவசாலி.


 *கவலைபடாதே சகோதரா*...

.

நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வாழ்வை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்..

தந்தை இருக்கும் போது அவர் சொல்லிய ஆயிரம் சொற்கள் நினைவில் பசுமரத்தாணி போல் பதிந்து தான் இருக்கும்

தன் வலிகளை மறந்து, அவற்றை புன்னகையில் மறைத்து குடும்பத்தின்  உறுப்பினர்கள் அனைவரையும் சம நோக்குடன் அன்பு செலுத்திய தந்தை என்றுமே போற்றுதலுக்குரியவர்.

எத்தனை வலிகளை சுமந்து வாழ்ந்தார், என்பதை தனது பிள்ளைகளுக்கு தெரியாமல் சிரித்த படியே தேவைகளை நிறைவேற்றும் கடமையே அவரின் வாழ்வு..

இவற்றை எல்லாம் நினைத்து பார்த்தால் பிரமிப்பு ஏற்பட்டுவது இயல்பு..

அவர் மறைந்தாலும் அவர் மாபெரும் பொறுப்பை உங்களில் கைகளில் தந்துவிட்டே சென்றுள்ளார் சகோதரா...

தனது குடும்பத்தலைவன் என்னும் மிகப்பெரிய சுமையை உங்களின் முதுகில் இறங்கி வைத்து விட்டு இளையாறுகிறார்.

தன்னிடம் பழகிய போலிகளை வெறுத்து உண்மைகளை தேடிய பாசத்தில் உழன்ற சாதாரண மனிதனே அன்பான தகப்பன்...

.

.

அவர் மறைந்தாலும் அவரின் ஆன்மா உங்களுக்கு பக்கபலமாக இருந்து உங்களுக்கு உதவும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை...

கவலைகளை புறந்தள்ளி விட்டு தைரியமாக வாழ்வை எதிர்நோக்குங்கள்...

.

.

என்னால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஆறுதல் மட்டுமே சொல்ல முடிகிறது.

ஆனால் உங்களின் நண்பனாக, உங்களை தூரத்தில் இருந்து ரசிக்கும் ஓர் ரசிகனாக   உங்களுக்கு ஆறுதல் சொல்லும் ஓர் அன்பு தம்பிகளில் நானும் ஒருவன்...

என்றும் அன்புடன்

*ராமன் ஷங்கர்*

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...