ஆசை... தோசை.. அப்பளம்.. வடை...

     அலுவலகத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஊதா நிறமாருதி கார்.அந்த கார் நகரும் வரை வெறித்த படி ஆசையுடன் பார்த்து கொண்டிருந்தான் கேசவன்...

"ஹலோ சார், என்ன பயங்கரமா யோசனை" பரிகசித்தாள் பரிமளா.

 எல்லோரிடமும் அதிகார தோரணையில் பேசுபவள், அவனிடம் ஏனோ அதிகாரத்தில் பேசுவதை தவிர்த்தாள்.

சில நேரங்களில் அவளையும் மீறி சில வார்த்தைகள் அதிகார தோரணையில் வந்து விழும் அவளின் பேச்சில்..

அந்த நாள் முழுவதும் ஏதோ குற்றம் செய்து விட்டு பாவனையில் அவனை சமாதானம் செய்ய முயற்சி செய்வாள்..

நமக்கு எதுக்கு வம்பு, அதுவும் ஓர் பொண்ணு கிட்ட. ஓரு நாள் தெரியாதனமா கோபத்தில் பேசியதற்கே அழுது விட்டாள்.

நான் ரொம்பவே தைரியமான பொண்ணு. தன்னை பற்றி பெருமை பேசியது பொய்தானா... குழப்பமாக இருந்தது.... அவனின் மனதில்....

"வேலை பார்க்க வந்த இடத்தில் எதுக்கு இந்த கேலி கிண்டல் எல்லாம்..பேசாம வந்தோமா, வேலை பார்த்தாமோ என்று இல்லாமல் எதற்காக எல்லோரிடமும் சிரித்து பேசணும், சாரி என்னை மன்னிச்சிடுங்க... நீங்க அழுவீங்கண்ணு எனக்கு தெரியாது, கோபத்தில் கத்தி விட்டேன் நான் ஒரு சரியான சிடுமூஞ்சி, ஓரு தண்டச்சோறு வேற.. .. எனக்கு யார் கிட்டேயும் சிரித்து பேசவே தெரியாது... அதுவும் பொண்ணு கிட்ட சுத்தமா பேசவே தெரியாது....விரக்தியா சொன்னான்"....

அவனின் வார்த்தை பகவத் கீதை போல இருந்தது.... நாம் தான் இவனை சீண்டி விட்டோம்.. அவளின் பெண்மையை அவனுக்கு உணர தெரியவில்லையா?அல்லது தெரிந்தும் தெரியாதது மாதிரி நடிக்கிறாரா?!!! குழப்பித்தான் போனாள்...

சின்ன பொண்ணு போல அழுதுகொண்டு இருந்தவளின், முகத்தில் சற்றே சிரிப்பு எட்டிப் பார்த்தது....

"சரியான லூசு தான் போல", எல்லோருமே ஓர் பொண்ணு எப்படா தனியா இருப்பா... ஏதாவது பேசி சிரிக்க வைக்கலாம், அவளுடைய குடும்ப  விஷயத்தை பேசலாம்ன்னு நினைப்பானுங்க.. இவன் என்னடா இப்படி இருக்கான்...

தன்னையே "சிடுமூஞ்சி" " தண்டச்சோறு" என்று விமர்சனம் வேற சென்றான்.... நினைத்து சிரித்தாள்.... இன்னும் குழந்தையாவே இருக்கான் போல... நினைத்து ரசித்தாள்... அவளுக்குள் சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் துப்பாட்டாவை எடுத்து முகத்தை மூடி அழுவது போல பாசாங்கு செய்தாள்.....

அவனோ அதை கவனிக்கவில்லை....

அவனுக்கோ வேறு ஏதோ கவலை....

வாய்க்குள்ளே முணுமுணுத்தான், "அவ சரியா தான் சொன்னா, எனக்கு ஓரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும் தெரியலை",... வீட்டிலேயும் பேச தெரியலை வெளியேவும் பேச தெரியலை... இந்த உலகத்திலே நடிக்கவும் தெரியலை... நான் பேசாம செத்து போனா கூட எனக்காக யாருமே அழமாட்டாங்க.... ச்சே.... என்னடா வாழ்க்கை இது..

யாருக்குமே கேட்காத வகையில் சொன்ன வார்த்தைகள், அவளின் பாம்பு செவிகள் உள்வாங்கின....

கலங்கிய கண்களை சாமி கும்பிட்டு வந்து போல செய்து கண்ணீரை மறைந்தான்....

வெள்ளை நிற கண்கள், நொடியில் சற்றே சிவந்து போனது....

அவனின் மனதிற்குள் இருக்கும் ரணங்களை மறைத்து வாழ்கிறான் என்பது மாத்திரமே அவளுக்கு புரிந்தது...

நம்ம கம்யூட்டரா, அது சரியான விளக்கெண்ணெய்... அடுத்தவங்க உணர்ச்சியை புரிந்து கொள்ள தெரியாத மரமண்டு....கேசவனை பற்றி உடன் இருப்பவர்களின் கூற்று பொய் என்பதற்கு அவனின் கண்ணீரே சாட்சி...

இருவரின் நெஞ்சிலும் ஓரே மாதிரியான எண்ண ஓட்டம்....பழைய நாளை நினைத்து இருவருக்கும் உள்ளே பயமிருந்தாலும், அதை மீறி அவள் கேலி பேசினாள்.... மறுபடியும் ஓர் முறை கோபப்படுவாரா எதிர்பார்ப்பு அவளுக்குள்...

இன்னும் எத்தனை நாட்களோ இருக்கிற வரை தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டி விட்டு போகணும் மனதில் அவன் எடுத்த சபதம்...

எதுக்காக மத்தவங்க மனசை கஷ்டப்படுத்தணும்.....அமைதியாக இருந்தான்

 ஏதோ உங்க கார் மாதிரி இப்படி வெறிச்சு பார்க்குறீங்க, மீண்டும் கேலியாக சிரித்தாள் உடன் பணிபுரியும் பரிமளா...

இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் எரிச்சலாக சொன்னான்.. ஆபிஸ் விஷயம் தவிர தயவுசெய்து வேற எதுவும் பேசாதீங்க....

பிறகு நான் எதாவது கோபத்தில் சொல்லுவேன்...அதை நீங்க எல்லார்கிட்டயும் சொல்லி, என்னை பலபேர் முன்னாடி கேலி பேசி நக்கல் பண்ணுவீங்க...

நீங்க உங்க வேலை பாருங்க.. நான் என் வேலை பார்க்குறேன்...

தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்று அப்போது தான் அவளுக்கு புரிந்தது.. 

ஓர் பெண் தனக்கு பிடித்த ஆடவனை மற்றவர்களுடன் முன் கேலி பேசி ரசிப்பதை கூட உணர தெரியவில்லையே...

அப்படி கேலி பேசுவதன் மூலம் அடுத்தவர்கள் அவனை பற்றி சொல்லும் விமர்சனங்களால் அவனை அறிந்து கொள்ள முயல்கிறாள்....

சரியான மரமண்டை உதட்டின் உள்ளே சிறை பட்டது வார்த்தைகள்...

அவள் ஏதோ சொல்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது, ஆனால் என்ன சொன்னாள் கவனிக்கவில்லை....

இப்போ உங்களுக்கு என்ன பிரச்சினை அதை சொல்லுங்க எரிச்சல்பட்டான்...

தனியாக இருக்கும் பெண்ணிடம் எரிச்சல்படும் முதல் ஆள் சிரிப்பை அடக்க முடியவில்லை.....

எதுக்கு சிரிப்பு.....

தன்னை உணர்வுகளை அவன் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதை நினைத்து அவளுக்கு ஆசை அதிகரித்தது... இதுவே மற்றவர்களாக இருந்தால் கதையே வேறு....

அருகே வந்து கைகளை பிடித்து பேசி இருப்பான்... வெட்கத்தில் அவளின் மாநிற கன்னங்கள் சிவந்தன.... கால்கள் தரையில் வட்டமிட்டது... விரல்களால் தனது துப்பட்டாவை சுற்றி சுற்றி விளையாடினாள்....

சீக்கிரம் சொல்லுங்க......‌எனக்குநேரமாகுது....

ஏன் அடுத்த கார் வருதா... மீண்டும் சீண்டினாள்.....

ஓர் முறையாவது அவனையும் மனிதனாக மாற்ற முயற்சி செய்து அவனின் முகத்தில் புன்னகை மலர விரும்பினாள்...ஆண்டவா, இவனை போல் நல்லனா... இல்லை இல்லை இவனையே..... மனதிலோ பிராத்தனை


எங்க அம்மாகிட்ட கூட நான் இவ்வளவு பொறுமையா பேசினது கிடையாது... எதுக்காக என்கிட்டயே வந்து பேசுறீங்க....அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க...

சிவா வந்திடுவாரு... அவர்கிட்ட பேசுங்க.... பேசிக்கொண்டே இருப்பாரு.....

சேல்ஸ் வேலை தெரியாது, ஆனால் வெட்டி கதை பேச சொன்னா போதும்....

முதலாளி என்ன வெட்டி கதை பேசவா... சம்பளம் தருகிறார்........

இப்போது அவளுக்கு எரிச்சலாக இருந்தது... சரியான மரமண்டு தான்‌ நினைத்து கொண்டாள்...

நாளைக்கு நீங்க வருவீங்களா...

லீவு போட்டா ஓரு நாள் சம்பளம் போயிரும்..... ஆமா எதுக்கு கேட்குறீங்க.....

எங்க வீட்டில் நாளைக்கு கோவிலுக்கு போக போறாம் அதான்....

அப்போ நீங்க லீவுன்னு சொல்லுங்க...

அட, நீங்க வேற  11.00 மணி போல வந்திருவேன்....என்னால ஆபீஸ்க்கு லீவு எல்லாம் போட முடியாது....

சரி, எதுக்கும் முதலாளிகிட்ட சொல்லிருங்க.....

அதான் சொல்லிட்டேனே....

எப்போ சொன்னீங்க......

உங்கிட்ட சொல்லியாச்சு அவ்வளவுதான்...

கேசவன் பதட்டமடைந்தான்.... ஏங்க நான் ஓனர் இல்லை.... நானும் உங்களைப் போல சாதாரண வேலைக்காரன் தான்....

சரி... சரி. பதட்டமாகாதீங்க...மதியமே ஓனர்கிட்ட சொல்லியாச்சு.....அவரு தான் உங்ககிட்டேயும் சொல் சொன்னாரு..... நீங்க தானே மேனேஜர்.......

"....."அமைதியாக இருந்தான்.. அவனின் மனதில் இவள் நல்லவள் தான்.... மத்தவங்க சொன்ன மாதிரி இல்லை என்று நினைத்து நிம்மதியடைந்தான்

நாளைக்கு நான் வரும் போது ஓர் சர்ப்ரைஸ் இருக்கு...

அவளின் கண்கள் மின்னியது....

தன்னையறியாமல் உடனடியாக உணர்ச்சி வசப்பட்டு கேட்டான், எதாவது விஷேசமா.....

ஆமாம், எனக்கு நிச்சயதார்த்தம்.... கோவிலில் வைத்து

அவனின் முகத்தில் முதன் முறையாக வாட்டத்தை பார்த்தவள், சுதாரித்து கொண்டு சொன்னாள்.... சும்மா சொன்னேன்.... அண்ணன் பையனுக்கு பெயர் சூட்டு விழா..

அப்படியா ரொம்ப சந்தோஷம் சுவீட் கொண்டு வாங்க........ முகத்தில் சந்தோஷம் குடிகொண்டது.....

முதன்முறையாக அவளிடம் இயல்பாக பேசியது கண்டு அவளின் மனம் பூரித்துப் போனது

திருட்டு பயலே இவ்வளவு நாளா, இது தெரியாம போச்சே... மனதில் பட்டாம்பூச்சி பறந்தது அவளுக்கு....

நாளைக்கு நான் எப்படி வருவேன் தெரியுமா... அவனின் முகத்தில் சந்தோஷத்தை கூட்டினாள்.....

எப்படி வருவீங்க..... அண்ணன் கொண்டு வந்து விடுவாரா.....யதார்த்தமாக கேட்டான்....

ஊதா நிற பட்டுப்புடவையில், கழுத்தில் தங்க அட்டிகை போட்டு, கைக்கு நெளிவு வளையல் தலை கவிழ்ந்து சிரித்தபடி  ஓரக்கண்களால் பார்த்தாள்......

எதுக்கு வேற கலர் புடவை இல்லையா.....

இருக்கு, ஆனா அந்த கலர் தானே உங்களுக்கு பிடிக்கும்....

நீங்க என்னை கேலி பண்ணலேயே... மீண்டும் குழந்தையாக  கேட்டான்....

அவள் தனக்கே உரிய பாணியில் கேலி அவனின் விரல்களை மெதுவாக தொட்டு விட்டு சொன்னாள்...

ஆசை.. தோசை.... அப்பளம்....வடை...... 

அவனும் மெதுவாக அவளுக்கு கேட்கும் படி சொன்னான்....நீ பயங்கரமா ரன் புத்திசாலி தான்..... என்னால் உன் முன்னால் நடிக்க முடியலை......

என்னாச்சு இப்படி சொல்லுறீங்க......பிரமிளா கேட்டாள்....

அவன் சிரித்துக் கொண்டே உதிர்த்தான் முத்துக்களை....

ஆசை.... தோசை..... அப்பளம்....வடை.......

இருவரின் கண்களும் ஓன்று சேர்த்தன.....




No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...