புதிய கல்வி கொள்கை

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் கல்வி கொள்கையை ஏற்காத மாநில அரசுகளில் தமிழகமும் உள்ளது..

இதனால்37,554 அரசு பள்ளியில் படிக்கும் 33 லட்சம் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது கட்டுரை..
ஆனால் அதில் வேலை பார்க்கும் 2.25 லட்சம் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அனைவரும் அரசு பள்ளியில் தான் படிக்கிறார்களா என்பதே எனது சந்தேகம்.. ஏனெனில் எனக்கு தெரிந்தவரை அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் தான் சேர்கின்றனர்.
நாம் இந்தியாவில் வாழ்கிறோம். இந்திய நாட்டிலும் மத்தியில் ஆளும் அரசு புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டு வருகிறது... இங்கே பணமிருக்கும் பலர் தனியார் பள்ளியில் தனது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்..நமது இந்தியாவில் வாழும் அனைவருக்கும் ஓரே மாதிரியான கல்வியை நடைமுறை படுத்த மத்திய அரசு முயல்வதில் என்ன தவறு இருக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் அரசு மழலையர் பள்ளியில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்த காரணமாக...பல மழலையர் மற்றும் நடுநிலை பள்ளிகள் மூடப்பட்டன என்பது வரலாறு.
அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் குழந்தைகள் அனைவரும் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்றும்.மத்திய மாநில அரசு வேலையில் இருப்பவர்களின் குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி இருந்தால். நீங்கள் சொல்வது போல் மத்திய அரசு சர்வாதிகார போக்கில் ஆட்சி செய்கிறது என சொல்கிறதா?????!!!!!!
இங்கே ஏழை மாணவர்களை தங்களின் பள்ளியில் சேர்த்த தனியார் பள்ளிகளுக்கு மத்திய அரசு பணம் கொடுத்திருப்பதாக கட்டுரை சொல்கிறது அப்படி என்றால் ஏழை மாணவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்து இருப்பதாக தானே அர்த்தம்.
எந்த ஒரு புதிய விஷயம் வந்தாலும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்..சில ஆண்டுகளுக்கு பிறகே அதனால் மக்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகள் புரியும்.
முதன் முதலாக ஆதார் என்பதை அறிமுகம் செய்த போது எதிர்ப்புகள் இருந்தது, ஆனால் இப்போது ஆதார் பான் கார்டு ரேஷன் அட்டை பேங்க அக்கவுண்ட் இவையனைத்தும் ஓரே நேர் கோட்டில் இணைக்கப்பட்டது.
இதனால் ஏழை நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.. பத்து லட்சம் வரை வருமான வரி விலக்கு.மேலும்.
MSME மூலம் வியாபாரம் செய்தால் GST மற்றும் வருமானவரி பற்றிய கவலை இன்றி எளிதாக வியாபாரம் செய்ய முடிகிறது.
ஓவ்வொரு டீகடை உணவு விடுதிகள் பெட்ரோல் பல்க் என எண்ணற்ற இடங்களில் டிஜிட்டல் வர்த்தகம் சிறப்பாக நடக்கிறது.
500 ரூபாய் தின சம்பளம் பெறுபவர்கள் கூட தங்களின் சம்பளத்தை டிஜிட்டல் பெறவே விரும்புகின்றர்..
எனவே புதிய விஷயங்களை ஆதரிப்போம்..எல்லா மக்களும் ஓரே மாதிரியான தரமான கல்வியை மத்திய அரசு கொண்டு வருகிறது..இது நல்ல விஷயம் தான்..வந்தே பாரத் டெல்லியில் தொடங்கி கன்னியாகுமரி வரை வந்தது கூட மத்திய அரசின் நலத்திட்ட உதவியே...
வாழ்க பாரதம்.ஜெய் ஹிந்த்

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...