ஓர் காலத்தில் கடவுள் மட்டும் தான் இருந்த உலகத்தில் இருந்தார் அப்போது எல்லாம் கரெண்ட் வசதி கிடையாது ஏன் செல்போன் வாட்ஸ்அப் இமெயில் இப்படி எதுவுமே இல்லாது இருந்துச்சு. இது காணாதுன்னு உலகமே இருட்டாக தான் இருந்துச்சு.
ரொம்ப நாளா தனிமையில் அமைதியா வாழ்ந்த கடவுள் மனசுல ஓர் எண்ணம் ஏற்பட்டது.நாம ஏன் இப்படி தனியாவே இருக்கோம் என்று யோசிச்ச கடவுளுக்கு ஓவ்வொரு நிமிஷமும் ஓவ்வொரு யோசனை தோணுச்சு
தனிமையிலேயே வாழ்ந்த கடவுளுக்கு வாழ்க்கை அலுப்பாக மாறியது..ஏன்னடா இது வாழ்க்கை நமக்கு என்று யாருமே இல்லையே என யோசித்த கடவுள் கடைசியில் ஏதாவது புதுசா பண்ண ஆசைபட்டு உலகத்தை படைக்க தொடங்கினாரூ.
தனிமையிலேயே பல யுகங்களாக கஷ்டபட்டவரு, பிரபஞ்சத்தை படைக்கும் போது ஓவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செஞ்சாரூ.
எப்படின்னா பல ஆண்டுகள் சொந்த வீடே இல்லாமல் வாடகை வீட்டில் இருந்தவன் எப்படி சிரத்தையா வீடு கட்டுவானோ அப்படி.
அட பிரபஞ்சத்தை படைக்கிறதுக்கு முன்னாடி அவர் எங்கே இருந்தாரூன்னு உங்களுக்கு வரும் அதே சந்தேகம் எனக்கும் வந்துசசு..ஆனா இந்த கேள்விக்கு இதுவரைக்கும் எந்த விடையும் தெரியவில்லை.. கோழி முட்டை இதில் எது முதலில் வந்ததது என்பது போலவே...நீங்க மேற்கொண்டு கதையை படிங்க
பிரபஞ்சத்தில் ஓவ்வொரு கோள்கள் நட்சத்திரம் சூரியன் இப்படி படைச்ச இறைவன் தான் வசிப்பதற்க்காக ஓர் உலகத்தை படைசசாரூ.
அட அந்த உலகம் தான் நாம இப்போ வாழுற பூமி. ஓர் நாள் மண்ணை படைச்ச கடவுள் அதில் கூட தன்னுடைய கலை நயத்தை காடடினாரூ. செம்மண், களிமண் ஆற்றுமணல் கற்கள் பாறை கற்கள் படிம கற்கள்.கடினமான பாறைகள் இப்படி சொல்லிகிட்டே போகலாம்.
பிறகு மிருகங்கள் பறவை மனுஷன் என்று எல்லாத்தையும் ஜோடி ஜோடியா படைச்சாரூ.
இப்படி எல்லா உயிர்களையும் படைச்ச கடவுளுக்கு தன்னால் படைக்க பட்ட உயிர்கள் எல்லாம் ஜோடி ஜோடியா சந்தோஷமா இருப்பதை பார்த்து மனசு கஷ்டம் வந்துடுச்சு.. அந்த நேரத்தில் தன்னோட கையில் ஓர் உயிரை படைக்கிறோம் என்பதையும் மறந்து விரக்தியா மன கஷ்டத்தோட வேண்டா வெறுப்பா எரிச்சலா படைத்தார்.
திடீரென அவருக்கு மூளை வேலை செய்ய ஆரம்பிச்சுது.. அடக்கடவுளே என்ன காரியம் செஞ்சுட்டேன் என்று தன் கையில் இருந்த அந்த பொருளை அப்படியே தரையில் விட்டார்.
அது தவளையாக உருமாறி இருந்துச்சு. உலகத்துலேயே மிகவும் அவலட்சணமான ஓர் பொருளை தான் படைத்து விட்டோமே என்ற மனக்கவலை கடவுளுக்கு வந்துச்சு.
எல்லா உயிரை படைக்கும் போது தைரியமா இருந்த கடவுள் தவளையை படைக்கும் போது மனக்கஷ்டமும் பயத்துடனும் படைச்சதால் தவளையும் மிகவும் பயந்த சுபாவத்துடன் இருந்தது.
புதிதாக படைக்க பட்ட தவளைக்கு தான் தான் அசிங்கமான உருவத்துடன் படைக்க பட்டு இருக்கிறோம் என்பது கூட தெரியாது.
அது கடவுள் நம்மை தன்னுடைய கரத்தால் அல்லவா நம்மை படைச்சு இருக்கிறார்.
நீங்க படைச்ச இந்த அழகான திறமைகள் நிறைந்த இந்த உலகத்தில் என்னையும் படைச்சதுக்கு ரொம்ப நன்றி.. ரொம்ப நன்றி.. என்று ஓவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்லி ரொம்பவே சந்தோஷமா வாழ்ந்துச்சு
தான் எவ்வளவு பெரிய தவறு பண்ணிட்டோம் ஆனால் அது இந்த தவளைக்கு தெரியவும் இல்லை புரியவும் இல்லையே என்று யோசித்து பார்த்து பிறகு தான் அவருக்கு ஓர் விஷயம் புரிஞ்சுது. நாம படைச்ச உயிர்கள் எல்லாம் ஜோடி ஜோடியா மகிழ்ச்சியா வாழுதே என்று காமத்தின் வயப்பட்டதால் நமக்கு அறிவு மழுங்கிப் போனது. அதனால் தவளைக்கு புத்தி என்ற ஓன்றை வைக்க மறந்துட்டோம் என்பதை உணர்ந்தார்.
ஆனால் தவளையோ அந்த வித கவலையும் இல்லாமல் துள்ளி துள்ளி குதிச்சு விளையாடிக்கிட்டு இந்த உலகத்துலேயே தான் ஒருத்தர் தான் மிகவும் சிறந்த படைப்பு என்று குதூகலமாக சென்றது.
கடவுள் நினைச்சாரூ...சரி ஆனது ஆகிப்போச்சு.தவளைக்கு தான் புத்தியே இல்லையே அதுவோ சரியான தத்தி. நாம இதுக்கிட்ட எதுவுமே சொல்லாம போய்விடுவோம் என்று போயிட்டாரூ ( இதனால் தான் மரமண்டை என்பது போன்ற வார்த்தை தத்தி. விஷயமே தெரியாதவனை தவளையின் பட்ட பெயரான தத்தி என்று அழைப்பது மக்களின் வழக்கமாச்சு)
தவளையும் கடவுளை சில நிமிஷத்துலையே மறந்து போயி வாழந்து வந்துச்சு.
முதல் நாளில் தவளை கடவுளால் படைக்க பட்ட நாய் கிட்ட போய். என்னையும் உங்க கூட சேர்த்துக்கோங்க நானும் உங்க கூட சேர்ந்து மகிழ்ச்சியா வாழணும் என்றது.
ச் சனியனே நீ தூரப்போ. உன் உடம்பும் நீயும் உன் உடம்பும், உன்னை பார்த்தாலே கண்றாவியா இருக்கு. நாங்க உங்க கூட எல்லாம் விளையாட முடியாது. போ..போ.. என்று அடித்து விரட்டியது.
தினமும் நிலத்துல வாழும் ஓவ்வொரு உயிர்களிடமும் போய் கேட்டுச்சு. ஆனா எந்த உயிர்களும் அதை தன்னோட சேரூஅதுக்கவே இல்லை.
பாரு நாங்க எவ்வளவு அழகாக மினுக்கா இருக்கிறோம் நீயும் தான் இருக்கியே..
பானை வயிறு.மூஞ்சிய பாரு சப்பையா.கண் வேற கோழி முட்டை மாதிரி.
முதல்ல உன் மூஞ்சி எப்படி இருக்குன்னு போய் பாரூ என கேலி செய்தது.
நிலத்துல தான் நம்மை யாரும் சேர்த்து கொள்ளவில்லை. நீரில் வாழும் உயிர்களிடம் சென்று கேட்டுப் பார்ப்போம்.
கடவுள் நம்மை ஏரிக்கரையில் இருக்கும் போது தானே படைச்சாரூ.ஓரு வேளை அந்த இடம் தான் நமக்கானது போல என்று நீர் நிலைக்கு சென்றது.
அங்கே இருந்த மீன் நண்டு பாம்பு முதலை இப்படி எல்லா உயிர்களிடமும் கேட்டுப் பார்த்துச்சு. ஆனா யாருமே அதை தன்னோட சேர்த்துக்காம ஒதுங்கியே வைச்சாங்க.
என்னடா இது நம்மை யாருமே சேர்த்துக் மாட்டேன் என்று சொல்லுறாங்களே என நினைச்சு வருத்தப்பட்டுச்ச..
கடவுளால் படைக்கப்பட்ட ஓவ்வொரு மிருகமும் எப்படியெல்லாம் வாழுறாங்க.ஏன் எதற்காக தன்னை யாரும் அவங்க கூட சேர்த்துக்கொள்ள வில்லை என்று இப்படி எல்லோரும் வெறுத்து ஓதுக்குறாங்க என யோசிக்க ஆரம்பிச்சுது.
தவளை தனக்கு அறிவு இல்லை என்பதை கூட சிந்திக்க தெரியாம யோசிக்க ஆரம்பிச்சுது.
காட்டிற்கு ராஜாவாக வாழும் சிங்கம் மாசத்துல ஓர் நாள் தான் வேட்டையாடி சாப்பிடுது. மத்த நாள் எல்லாம் உயரமான இடத்துல ஏறி உட்கார்ந்து தான் நான் காட்டுக்கு ராஜா என்று கர்ஜனை பண்ணுது.
ஆனால் பத்து நாட்கள் பசி தாங்குற மாதிரி ஓரே நாளில் சாப்பிடுது புலி, சிறுத்தை கரடி கூட இப்படித்தான்.
நரி ஓநாய் மாதிரி விலங்குகளுக்கு வேட்டையாட தெரியாத காரணமா..புலி சிங்கம் சிறுத்தை போன்ற மிருகம் வேட்டையாடிய உணவை கூட்டமா போய் பிடுங்கி தின்று விட்டு ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் இருந்தன.
பசு ஆடு மாடு போன்ற விலங்குகளோ தினமும் இரை தேடி தின்றது. பல நாட்கள் பட்டினி கிடந்து ஓரே ஓர் நாள் சாப்பிடும் விலங்குகள் சாப்பிட்டு முடிக்கும் வரையாவது ஓற்றுமையா இருந்துச்சு.ஆனா இவர்களுக்கோ நிறைய புல் இருந்தாலும் தன் பக்கத்தில் வந்து தன் இனத்தை சார்ந்த இன்னொரு விலங்கு வந்தவுடன் முட்டி தள்ளி நீ தூரப்போ என சண்டையிட்டது.
தவளையோ எந்த முடிவும் எடுக்க இயலாமல் தவிச்சது
இப்படி யோசித்து கொண்டே இருந்தாலும்.கடவுள் தனக்கு ஓரவஞ்சனை செய்து விட்டார் என்பது கூட புரியவில்லை.
ஓர் நாள் தவளையின் இடைஞ்சல் பிடிக்காத ஓர் உயிர் கோபத்தில் கத்தியது ச்சீ தூரப்போ.போயி ஆறு குளத்துல விழுந்து சாவு அப்போது தான் உனக்கு நல்ல புத்தி வரும் என்று நல்லா திட்டி விட்டது.
யார் எது சொன்னாலும் கேட்டு அது படியே செய்யுற தவளை.
நம்ம தவளைக்கு தான் அறிவே கிடையாதே அதுவும் அதே போல் போய் குளத்துல விழுந்துச்சு.. ஆனால் அதனால் தண்ணீரில் முழ்க முடியலை பல நாட்களாக அது தண்ணீரில் கிடந்தாலும் பசி தாகம் இல்லாம உயிரோட இருந்துச்சு.
குளத்துல தண்ணீர் குடிக்க வந்த பசு தண்ணீரில் விழந்து உயிருக்கு போராடுச்சு. உடனே தவளை கடவுளுக்கு நன்றி சொல்லிய படி அது பக்கமா போனவுடனே பசுமாடு ச்சே இந்த அருவருப்பு பிடிச்ச தவளை நம்ம பக்கம் வருது என்று விலகி போக முயற்சி செய்தது. இப்படி செய்த முயற்சி அதை பிழைக்க வைத்து கரையேறியது
அட கடவுளே, நிறைய உயிர்கள் நீச்சல் தெரியாம தண்ணீரில் முழ்குது.நமக்கு நீச்சல் தெரியாம தண்ணீரில் விழுந்தாலும் சாக விடாம காப்பாதுற அளவுக்கு இறைவன் நம்மை படைச்சு இருக்காரே என்று மீண்டும் அதற்கு சந்தோஷம் வந்துடுச்சு.
மீண்டும் தன்னை யாரும் அவங்க கூட சேர்த்து கொள்ளவில்லை என்றாலும் தவளை சந்தோஷமா குதிச்சு குதிச்சு விளையாடிக் கொண்டு தான் இருந்துச்சு.
இதை கண்ட எல்லா மிருகமும் தங்களுக்குள் பேசிக்கொண்டன. ச்சே இருந்தாலும் கடவுள் ரொம்ப மோசமான ஆளு தான். இவ்வளவு அழகா அறிவா படைச்ச கடவுள் நம்மை படைச்ச கடவுள் நம்மை என்றைக்காவது ஓரு நாளாவது நிம்மதியா வாழ விட்டானா சொல்லு ஓவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழுறோம்.
ஆனா அந்த தத்திக்கு எதுவுமே தெரியாத கூமுட்டை எவ்வளவு சந்தோஷமா வாழுது..என்றாவது ஓர் நாள் கடவுள் நம்ம கண்முன்னாடி வராமலா போயிடுவாரூ. அப்போ மனுஷனை நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்கணும் என்று முடி செய்து கொண்டன. மனிதர்கள் கூட கடவுளை குறை சொல்ல ஆரம்பிச்சாங்க. கடவுள் என்பவர் கொசு மாதிரி அவரை ஓழிக்கணும் என்று பேச ஆரம்பிச்சாங்க.
இப்படி தன்னால் ஆசையாகவும் அன்பாகவும் பார்த்து பார்த்து உருவாக்கிய உயிர்கள் தனக்கு நன்றி சொல்லா விட்டாலும் பரவாயில்லை இப்படி எல்லோரும் நம்மை குறை சொல்லுறாங்களே என வருத்தப்படார்.
அப்படி வருத்தப்பட்டு சிந்திய கண்ணீர் மழையா வெள்ளமா பெருக்கெடுத்து ஓடி ஊரே வெளத்துல முழ்கியது.
ஊரெல்லாம் தண்ணீரில் முழ்கியதால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டது. ஆனால் தவளையாலீ தண்ணீரில் முழுவதும் முழ்க முடியாத காரணமாக தண்ணீரில் மிதந்தது.
அப்போது கூட தவளை சந்தோஷமாக கடவுளை நன்றி சொல்லி இரவெல்லாம் கததியது. எல்லா உயிர்களும் தவளைக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.. இந்த மழை வெள்ளத்துலேயும் எப்படியெல்லாம் கத்துது பாரூ.. இவையெல்லாம் நாம இனி பக்கத்துல சேர்த்துக்கவே கூடாது என முடிவெடுத்தது.
ச்சே நாம அவலட்சணமான படைச்ச உயிர் நம்மை நினைச்சு இவ்வளவு நன்றியா இருக்கே என்று கடவுள். அதன் முன்னால் தோன்றி ஏய் தவளையே நான் ஏதோ ஓர் தவறான சிந்தையில் உன்னை படைச்சுட்டேன்.
அதான் கடவுள் தவளைக்கு அறிவை வைக்க மறந்துட்டாரே.
No comments:
Post a Comment