கட்சியில் சேரும் எல்லாரும் முதல்வர் ஆகணும் நாட்டுக்கு சேவை செய்யணும் என்று நினைப்பது தவறா...ஏன்னா , தலைவா வாழ்க..அண்ணே வாழ்க... தம்பி நீங்க கட்சியில் நல்ல நிலைக்கு வளரணும் என்று உதட்டில் பேசும் எல்லா மனிதருக்கும் உள்ளத்தில் முதல்வர் ஆகணும் என்று ஆசை இருக்கு..எந்த நேரத்தில் எவன் எப்படி ஆட்சியை கவிழ்ப்பான் என்பதை யாராலும் யூகிக்க முடியாது.
ஓர் வேளை முதல்வர் பதவியில் இருப்பவரை இறக்கிவிட்டு இன்னொரு நபர் அதில் அமர நினைத்தால், அதை ஓர் நடுநிலையுடன் செயல்படும் பத்திரிகையாளன் மட்டுமே பேசுவார்.
நடுநிலையுடன்
செயல்படும் #அரசியல்விமர்சகரை நீங்கள் சிறையில்
அடைத்தால், யாரும் அவரை ஆதரிக்க மாட்டார்கள்
தான்.
உங்கள் அரசாங்கத்திற்கு
எதிராகவும் பேசமாட்டார்கள் தான். ஆனால் அது உங்கள் அரசியல் வாழ்க்கையில் என்றென்றும்
ஒரு பெரிய தவறாக இருக்கும்.
உங்கள் அரசு வீழ்ச்சியடையும்
போது, உங்கள் நண்பர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் உங்களது கடந்த கால தவறுகளை மட்டுமே
குறை கூறுவார்கள்.
தனது மரபை நீண்ட
காலத்திற்கு எடுத்துச் செல்ல விருப்பமுள்ள ஒரு தலைவர் ஒருபோதும் அவசரமா முடிவெடுங்க
மாட்டார்கள், அரசியல்விமர்சகரை நீங்கள் சிறையில் தள்ளமாட்டார்.
அதற்கு பதிலாக
அரசு தனது நிர்வாகத்தை மிகச் சிறந்த முறையில் நிர்வகிப்பார், மக்களின் ஆதரவைப் பெற
அப்படிச் செய்தால்,
அவரை விமர்சித்தவர் உங்கள் செயலுக்காக உங்களைப் பாராட்டுவார்.
தங்கள் எண்ணங்களையும்
கருத்துக்களையும் எழுதுபவர்கள் உங்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் உங்கள் சிறந்த நண்பர்கள்
என்று நினைத்துப் பாருங்கள்.
உங்கள் அரசாங்கத்தில்
நீங்கள் எந்த அரசியல் பதவியை வழங்கினாலும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
காரணம், அவர்கள் நாற்காலிகள் மற்றும் அதிகாரத்தைத் தேடி அல்ல, உண்மையை எழுதத் தயாராக இருக்கிறார்கள்
உங்க ஆட்சி சூப்பர்.நீங்க தான் அடுத்த முதல்வர் என்று உண்மையை மறைத்து விட்டு முகத்திற்கு நேராக புகழ்பவர்களை ஆட்சியில் இருப்பவர்கள் நம்புவதும் என்றுமே ஆபத்தானது.
ஓர் சிறந்த ஆட்சியாளன் தனக்கு எதிராக பேசும் தனிமனிதனோ அமைப்போ அவனோ அவளோ எதற்காக அப்படி பேசுகிறார்கள் அவர்களின் நோக்கம் என்ன.
நம்மிடம் இருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுகிறாரா அல்லது வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் பேசுகிறாரா என்பதை ஆராய்லார்.
ராஜாஜி.காமராஜர்...அண்ணாதுரை....எம்.ஜி.ஆர்...கருணாநிதி..ஜெயலலிதா...
இவர்கள் எல்லாம் தனக்கு எதிராக பேசிய எழுதிய ஊடகங்களை முடக்கவில்லை. மாறாக எதிராக பேசிய ஊடகங்களே அவர்களை புகழும் படி அரசாட்சி செய்தனர்.
இதுவே சரித்திரம். சிறந்த ஆட்சியை தந்த காமராஜர் தோற்றார் என்பதை மட்டுமே இன்றளவும் பேசி மக்கள் சிறந்தவர்களை புறக்கணித்து விட்டதாக எழுதும் ஊடகங்கள்
ஆனால் காமராஜர் பேசிய வார்த்தைகளை சரித்திரம் பாதுகாத்து வைத்தது. மக்கள் என்னை தோற்கடிச்சுட்டாங்கன்னு சொல்லாதீங்கடே.. நாம் இத்தனை வருஷமா எந்த ஜனநாயகத்தை நிலை நிறுத்த போராடினமோ.அந்த ஜனநாயகம் வெற்றி பெற்றது என்றார்
மேலும் மக்கள் பணியை ஆட்சியில் இல்லாமலும் செய்யலாம் முன்பு அப்படித்தானே வெள்ளைக்காரன் காலத்தில் செய்தோம் என்ற மிக நுண்ணிய அரசியல் தெளிவை காட்டினார்.
எனவே தான் இன்றும் அவரை மக்கள் புகழ் கின்றனர்
அரசியல் விமர்சகம் என்பது கூட ஓர் சினிமா விமர்சனம் போன்றதே.
ஓர் நல்ல படத்தை மோசமானது என்று சினிமா விமர்சனம் செய்த பிறகும் வெள்ளி விழா கண்ட திரைப்படங்கள் எத்தனையோ.. சிறந்த படம் இதை எத்தனை தடவை வேண்டுமென்றால் பார்க்கலாம் வரலாற்று பொக்கிஷம் இந்த படம் என்ற விமர்சனம் செய்த படங்கள் கூட பத்தாவது நாளில் பெட்டியில் சுருண்டது.
ஆனால் முதல் தோல்வியில் பாடம் கற்று பிழைத்த பலர் எதிர்காலத்தில் சூப்பர் ஹிட் கொடுத்ததும் வரலாறு
ஓர் சிறந்த அரசியல் விமர்சகனுக்கு, அரசியலை சரியான தரவுகள் மற்றும் துல்லியமான அலசலுடன், அரசியலை விமர்சனம் செய்யவேண்டும் என்ற ஓர் சாதாரண எண்ணம் மட்டுமே உள்ளது...
ஓர் வேளை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், துணிச்சலுடன் அரசை விமர்சனம் செய்யும் ஓர் நடுநிலையான விமர்சனை கைது சிறை தண்டனை என்று முடக்கி போட நினைக்கலாம்.
உலகம் தோன்றியது முதற்கொண்டு அரசு பதவியில் நீண்ட நெடிய காலம் இருக்க வேண்டும் என்றும். எதிரிகள் யாருமே தனக்கு எதிராக எதுவும் பேசி விடக்கூடாது, என்றே எதிர்த்து பேசியவர்களை அடக்கிய நிகழ்வுகள்.
சரித்திரத்தின் ஏடுகளை புரட்டிப் பார்த்தால் அப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லா நாடுகளிலும் எல்லா இடத்திலும் பரவிக் கிடக்கிறது.
பிரெஞ்சு மன்னர் ஆட்சி ஏன் வீழ்ந்தது என்பதை அறிந்த புத்திசாலி வியாபாரிகள் கண்டுபிடித்த யுக்தியே ஜனநாயகம் என்ற அமைப்பு.
ஊடகங்களையோ அல்லது எழுத்தாளர்களையோ கட்டுப்படுத்த உங்கள் படைகளைப் பயன்படுத்த வேண்டாம், அவர்கள் ஒரு சாதாரண மனிதராக தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மிக முக்கியமானது பத்திரிகை துறை
காங்கிரஸ் என்ற கட்சி எதற்காக உருவாக்கப்பட்டது இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்திய பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் வரலாற்று சாட்சியங்கள்.
உலகையே அடக்கியாள நினைத்த இங்கிலாந்து அரசாட்சி இந்தியாவில் ஜனநாயகம் தளைக்க ஓருவர் விதையிட்ட போது அதை அழித்து விட நினைக்கவில்லை
மாறாக ஜனநாயகம் தளைக்க எதிர்கட்சியோ, அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி மக்களின் உணர்வுகளை அரசு செய்வர்களுக்கு எடுத்துரைக்க ஓரே ஓர் மக்கள் பிரதிநிதி மட்டும் போதாது என்றே பல கட்சிகள் தங்களின் கருத்துக்களை ஜனநாயக ரீதியில் சொல்லும் போது அதை ஆதரிக்கவே செய்தனர்.
மக்களுக்காக பேசும் பத்திரிகையாளரோ மக்கள் பிரதிநிதியோ தங்களின் கருத்துகளை சொல்ல இயலாமல் முடக்கப்பட்டால்.
அந்த பத்திரிக்கையாளர் இழப்பது அவரின் வாழ்வாதாரத்தை மட்டும்.. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அவர்களின் பல வருடங்களாக கட்டிக் காப்பாறிய கட்சி கரைத்தால் அதை மீண்டும் எழுப்ப இயலாமல் போய் விடும்.
ஜெயலலிதா அவர்களின் ஆட்சி 1996-ம் மாபெரும் படுதோல்வியை சந்தித்தது உண்மை தான்.ஆனால் அவரை ஆட்சியில் இருந்த இறக்கிய பிறகும் தொடர்ந்து பல பத்திரிகைகளில் அவருக்கு எதிராக எழுதப்பட்டன.
1996-ம் சட்டசபை தேர்தலை அவர் தனது தோலவியாக கருதவில்லை மாறாக, தன்னை ஏன் மக்களிடம் இருந்து பிரித்தது யார் எதனால் அந்த தோல்வி என்பதை புரிந்து கொண்டார். பத்திரிக்கைகள் தங்கள் ஜனநாயக கடமை செய்வதில் தவறில்லை அதை சரியா கையாண்டு இருக்கலாம் என்பதை உணர்ந்தார் போலும்
அவரின் பக்குவமும் எளிமையும் மக்களை யோசிக்க வைத்தது.
சரித்திரத்தின் ஏடுகள் மாறியது அவரை இகழ்ந்தவர்களே, மேடையேறி அவரை வானாளாவ புகழ்ந்தனர்
அடுத்த வந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் பேசிய நடுநிலையான பேச்சுகளுக்கும், எந்த தவறை யாரை செய்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்கி ஏழை எளிய மக்களுக்கு அரணாக இருப்பேன் என்ற மனதில் இருந்து வந்த அவரின் யதார்த்தமும் மக்களை யோசிக்க வைத்தது. அவரின் அணுகுமுறையில் இருந்த மாற்றம் அவரை தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது.
மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்த போதும் சில பத்திரிகைகள் அவருக்கு எதிராக தொடர்ந்து எழுதிய போதும், அதைப்பற்றி எல்லாம் கவலைபடாமல் ஆட்சி அமைப்பில் கவனம் செலுத்தினார்.
எத்தனை விமர்சனம் வந்தாலும் அரசின் மீது குறை இருந்தால் தைரியமாக சொல்லுங்கள், ஏதாவது ஓர் சில இடத்தில் தவறுகள் இருக்கலாம்.
அதை பத்திரிகை துறையில் இருக்கும் நீங்கள் தான் அரசின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டிய ஜனநாயக கடமை உங்களுக்கும் இருக்கிறது அதை விடுத்து எல்லாவற்றுக்கும் குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.
அரசு ஊழியர்கள் கட்டிடத்தை திறந்து வைத்து விட்டு அரசு ஊழியர்களுக்கு அதிகமாக செலவு செய்தால் பிற துறைகளுக்கு எப்படி பணத்தை தருவது என்று தடாலடியாக பேசிய போதும் எல்லா பத்திரிகையும் ஓரணியில் நின்று அவரின் கருத்தில் இருந்த உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லியது.
அதே சமயத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் எந்த உரிமைகளும் பறிக்க படாமல் பாதுகாத்தார்.
அவருக்கு குறைந்த பட்ச ஓட்டு கூட கிடைக்காமல் அவரை படுதோல்வி அடைய வைக்க நினைத்து சில பத்திரிகைகள் அவருக்கு எதிராக எழுதியது
நேரத்திலும் அவர் மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக கூடாது என்றே சில பத்திரிகைகள் பரப்புரை செய்தன.
அதைப்பற்றி அவரிடமே கேள்வி எழுப்பிய ஓர் பத்திரிகையாளர்.
நான் கருத்து கணிப்புகளை நம்புவதில்லை, மக்களை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கிறேன் எனது மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்..
எனது சரித்திர வெற்றியை உங்களின் பத்திரிகையே செய்தியாக வெளியிடும் அதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைபட வேண்டாம் என்றார்.
அவர் சொன்னது தான் நடந்தது.
இதுவே ஊடகத்தின் கேள்விகளை அவர் பின்னாளில் எதிர் கொண்டவிதம்.
அதேசமயம் பத்திரிகை துறைக்கும் அரசு செயல்படுத்திய நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, ஏழை எளிய மக்களுக்கு அரசின் உதவிகளை பெற்று தருவதில் பெரும் பங்கு இருக்கிறது
ஜனநாயகத்தை காப்பதே ஓர் சிறந்த அரசின் கடமை.
வாழ்க ஜனநாயகம் வளர்க பத்திரிகை தர்மம்.
தெனாலிராமன் என்ற புனைப்பெயரில் இலக்கியம் என்பது இக்காலத்தின் கண்ணாடி என்ற கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட ஓர் இந்திய பிரஜை
ராமன் ஷங்கர்
ஜெய்ஹிந்த்
No comments:
Post a Comment