793 - வரதட்சணை பயனாளர் Vs மருமகள் சம்பளப் பயனாளர்கள்

 இனிமேல் யாரும் மாப்பிள்ளை வீட்டில் வரதட்சணை வாங்கிட்டாங்க என்று சொல்லாதீங்க ஏன்னா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இவ்வளவு வரதட்சணை வாங்கினாங்க அவ்வளவு வரதட்சணை வாங்கிட்டாங்க என்று சொன்னா பாவம் அந்த பையனை பெத்த அப்பா அம்மா மனசு எவ்வளவு கஷ்டப்படும் எனவே இனிமேல் அவங்களை வரதட்சணை பயனாளர்கள் அல்லது வரதட்சணை பிரியர்கள் என்று தான் சொல்லணும் புரியுதா...அதே மாதிரி வயசான மாமியார் பென்ஷன் இல்லாம வேலைக்கு போற மருமகள் சம்பளத்தில் குடும்ப நடத்துபவர்களை... மாமியார் சம்பளத்தை பிடிங்கிட்டா என்று சொல்லி அவங்க மனசை கஷ்டப்படுத்த கூடாது மாறாக மருமகள் சம்பளப் பயனாளி அல்லது மருமகள் சம்பளப் பிரியர் என்றோ தான் சொல்லணும்...🤣😇🤣😇😇😇


ஹலோ சார் இந்த எழுத்துக்களை படித்து விட்டு நீங்க கோபப்பட்டு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க..

திருக்குறளை தமிழ் நாட்டில் பாடப்புத்தகத்தில் இடம் பெறச்செய்து திருக்குறளை எனக்கு வாசிக்க ஆர்வத்தை ஏற்படுத்தி கலைஞர் அவர்கள்..

வழியில் திருக்குறள் என்னால் முடிந்த வரையில் படித்து தெரிந்து கொண்ட சில திருக்குறள்  இதே அதில் சில..


ஓருவர் மீது கோபம் கொள்ளும் போது, அந்த கோபம் அவருக்கு துன்பம் தருவதற்கு முன்பே அதை கொண்டவருக்கு தான் மிகுதியான துன்பத்தைப் தருமாம் 

அந்த குறளை இது வரையில் நீங்க படிக்காம இருந்தா படிச்சு பாருங்க..


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.


குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.

திருக்குறள் - 302 

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. 


வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை. 


சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.


சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்


சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.


நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...