789 - பணக்காரன் யார்





தனது சொல்லை கேட்டு நடக்கும் குழந்தைகள் பெற்றவன் 


கணவன் வருமானத்திற்குள் செலவு செய்யும் மனைவியை பெற்றவன்.


தந்தையற்ற தன் மனைவிக்கு  உடன்பிறந்தவர்களின் 

திருமணத்திற்கு முன்னின்று உதவி செய்பவன் 

தனது பிள்ளைகளுக்காவே வாழும் தாய் தகப்பன் 

உடல்நலமற்ற தாய் தந்தையை போற்றி பாதுகாப்பவன்.

உடன் வேலை பார்க்கும் சகமனிதனுக்கு உதவி செய்பவன் 

தனக்கு சம்பளம்  முதலாளிக்கு உண்மையாக நடந்து கொள்பவன் 

ஓருவர் இல்லாத போது அவரை பற்றி புரணி பேசாதவன் 

கட்சியில் சேர்ந்த அடுத்த நாளே தலைவர் பதவிக்கு 

ஆசைபடாத உண்மை தொண்டன் 

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஓரே கட்சியில் 

இருக்கும் சாதாரண தொண்டன் 

எதிர்பாராத விதமாக ரோட்டில் கீழே 

விழுந்த வயதானவர்களுக்கு உதவி செய்பவன்.

தனது நண்பரின் குழந்தைகளோ சொந்தகார குழந்தைகளோ 

படிக்க பணமின்றி கஷ்டப் படும் போது 

தானாக சென்று அவர்களின் மேற்படிப்புக்கு உதவி செய்பவன் 

பிச்சை எடுக்க கூட தெரியாமல் தட்டுத்தடுமாறி 

சாலையில் ஓரத்தில் தள்ளாடிய படி நடந்து 

போகும் அந்த வயதானவர் உணவு வாங்கி 

கொடுத்து அவரின் பசியை போக்குபவன் 

தெருவில் கிடக்கும் உடைத்த பாட்டில் 

இன்னொருவரின் காலில் குத்திவிட்க்கூடாது என.. 

சுத்தம் செய்பவன் 

 கீழே விழுந்தது யாரோ வீட்டுக் குழந்தை தானே என்று 

நினையாமல் ஓடிச்சென்று அந்த கீழே விழுந்த 

குழந்தைக்கு உதவி செய்பவன்..


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...