சுதந்திர பறவை

ஆகாயத்தில் பறக்கும் 

பறவைகள் எத்தனை எத்தனையோ 

அத்தனையும் என்னை 

நோக்கியே வருகிறதென்றே 

உலகியல் யதார்த்தம் புரியாத 

சிறு குழந்தைகள் சிரித்தபடியே

நினைப்பதுண்டு.. ஆனால் அந்த பறவைகள் 

தங்களின் பாதையில் 

தினமும் நேர்கோட்டில் 

பறந்து செல்கின்றன...

அவைகளுக்கு என்று தனிபட்ட 

ஆசை அபிலாஷைகளை

ஆண்டவன் கொடுக்கவில்லை 

இறைவன் தேடி அவை அலைவதில்லை

ஏனெனில் இரை தேடி அலைந்தே வாழ்நாளில் பாதியை காற்றில் 

கரைத்து விடும் காக்கா 

கூட்டத்தை விட உயரம் பறக்கும் சுதந்திர பறவைகள் அவை...

இரையை இல்லாத நாட்களில் கூட 

இறைவனை மருந்துக்கு கூட 

கூப்பிட தெரியாத இயற்கை 

வாழ்விலை அதற்கு அமைத்தது 

கருணைவடிவான கடவுள் தானே

ஆர்பரிக்கும் அலை கடல் மீதும் 

சில நேரங்களில் பறப்பதுண்டு  

இரையை தேடியே.... ஏனெனில் 

அவைகள் யாருக்கும் கட்டுப்பாடாத

கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கை வாழும் காட்டுப்பறவை 

பிறரின் சுதந்திரத்தையும் அவைகள் 

பறித்ததில்லை...தங்களை 

சுதந்திரத்தை பிறர் 

பறிப்பதையும் அவைகள் விரும்புவதில்லை 

எனவே கண்ணுக்கெட்டாத

உயரத்தில் மனிதரின் கண்ணில் 

குடுகை விட மெல்லிய அளவாக 

பறக்கிறது .. ஏகாந்த தனிமையில் 

சுதந்திர பறவை 




 


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...