களிமண்ணா...கடவுளா...


களிமண்ணால் செய்த கடவுளின் உருவத்தை கடலில் கரைத்து விட்டோம் என்பதற்காக நாங்கள் அவரை மறந்து விட்டோம் என்று அர்த்தமில்லை.
கணபதி என்பது களிமண் பொம்மை அல்ல அது எங்களின் உணர்வில் கலந்ந ஓர் உன்னத கடவுள்.
நீங்கள் எத்தனை முறை ஊரெல்லாம் கூவி கூவி சொன்னாலும் நாங்கள் கடவுள் இருக்கிறார் என்பதை முழுவதுமாக நம்புகிறோம்..கடவுளே இல்லை என்று சொல்லும் உங்களால் நோய்களே இல்லை என்றோ மனிதனுக்கு மரணம் இல்லை என்றோ சொல்ல இயலுமா..
மரணத்திற்கு பிறகு மனிதனின் நிலை என்னவென்பதை சொல்வதே மதம்.
எல்லா மதங்களும் மக்களை நல்வழிபடுத்தவே தோன்றியது.
காசு வாங்காமல் சொல்வதோ செய்வதோ தான் பக்தி.
நீ எவ்வளவு நெல் விதைக்கிறாயோ அவ்வளவு நெல்மணி தான் கடவுள் தருவார்.. நீங்க எவ்வளவு காணிக்கை கொடுக்குறீங்களோ... அதற்கு தகுந்த மாதிரி தான் கடவுள் உங்களை ஆசிர்வதிக்க முடியும் என சொல்லும் கார்ப்பரேட் கடவுளின் தூதர் அல்ல எங்களின் விநாயகர்.
வினை தீர்த்து வல்வினே போக்கும் விநாயகன்... எங்களிடம் கோடி கோடியாக பணத்தை லாங்கி விட்டு கடவுளின் பெயரால் நாடகம் நடத்தும் நபர் அல்ல இந்த விநாயகர்.
சின்னஞ்சிறு அருகம் புல் போதும் என்றே எங்களின் உண்மையான எளிமையான வழிபாட்டை ஏற்று ஏற்றம் தரும் வாழ்வை எங்களுக்கு வழங்கும் வள்ளல் இந்த வல்வினை போக்கும் விநாயகர்.

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...