தீபாவளி துப்பாக்கி

 


நிஜமான துப்பாக்கியோ 

அதன் தோட்டோ கண்டு 

சற்றும் அஞ்சியதில்லை..

தினமும் தொட்டு விளையாடிய

 ராணுவகாரனுக்கு அதன் மீது பயமல்ல

பாசமே அதிகம்.ஆனால் அன்பு மகளின் 

தீபாவளி துப்பாக்கியை கண்டே 

அஞ்சுவது போன்றே நடிக்கிறேன்... 

ஒழுங்கா இருந்தா இல்லாட்டி 

இந்த துப்பாக்கி பேசும் என்பவளின் 

மழலை மொழியில் மயங்குகிறேன்.. 

சுவற்றில் இருக்கும் ராணுவ உடையில் 

துப்பாக்கி எந்திய போட்டோவ 

மறைத்தே சிரிக்கிறேன்.. 

இனிமேல் இந்த வீட்டில் பாப்பாவுக்கு தான்

எல்லோரும் பயப்படணும் 

என்றே சிங்கமாக கர்ஜிக்கிறாள்.. 

செல்வத்தில் பிறந்த செல்வமகள் 

எல்லோருமே அஞ்சுவது போலவே 

நடுங்குகிறோம் ஏனெனில் பஞ்சு விரல்களில் 

தீபாவளி துப்பாக்கி 

For more writings visit https://dhenaliraman.blogspot.com

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...