721 - செல்ல மகள்

அன்பே உருவான எனதருமை மஞ்சள் நிற தேவதையே உனது மனதில் இருந்த காயங்கள் எல்லாம் சரியாகி விட்டதா என்றே வாஞ்சையுடன் அவளின் முன்னால் கெஞ்சலுடன் கேட்டேன்..அவளோ தனது மழலை மொழியில் வார்த்தைகளை தட்டு தடுமாறி தேடிப் பிடித்து யோசித்து யோசித்து சொன்னாள்.   என்மேல் இருந்து பயம் குறைச்சு போச்சுன்னு நினைக்கிறேன்.. உனக்கு ரொம்ப தான் கொழும்பு கூடிப் போச்சு.. ஏய் சமையல்காரி உன் புருஷன் என்கிட்ட என்னமோ சொல்லுறான்.. என்னன்னு கேட்டு சொல்லுடீ.. நான் கேட்டத்தை வாங்கிட்டு வந்தால் தான் இந்த செல்லம் அந்த ஆள்கிட்ட பேசும்..தோசை கரண்டியோடு எரிச்சலுடன் வெளிப்பட்டாள்..அவளை பெற்ற மகராசி..

ஏன்டீ நாலு வயசு கூட முழுசா முடியலை அதுக்குள்ளே என்னையவே அதிகாரம் பண்ணுவீயா... அம்மாவின் அடிக்கு பயந்தே தோளில் வந்து சாய்ந்து கொண்டு சிணுங்கினாள் செல்வமகள்..யப்பா வர வர உன் பொண்டாட்டி ரொம்ப எரிச்சல் படுறா இவளை   நீ எப்படித்தான் சமாளிக்கிறீயோ...அலுத்துக் கொண்டாள் 

கள்ளமில்லாத சின்னஞ்சிறு தேவதையான அன்புமகள்..மனைவியோ கண்களால கவிதை சொன்னாள்..உங்க பொண்ணுக்கு உங்கள மாதிரி வாய் ஜாஸ்தி 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...