720 - அப்பாவின் அப்பாவி காதல்

 தன் மீது அளவுகடந்த அன்பும் பாசமுமாய் வாழ்ந்த அப்பாவிடம் அவள்தான் அந்த கேள்வியை கேட்டாள்.

அப்பா எத்தனையோ நாள் நான் உன்னிடம் கேட்க நினைத்த கேள்விதான் ஆனால் உன்னோட மனசு கஷ்டப்படுமே என்று கேட்காமலே இருந்து விட்டேன்.. இப்போ நீ நோய் பட்டு படுத்த படுக்கையில் இருப்பதால்... உன் அதிகமாக மரியாதை வைத்து இருக்கும் சொந்த பந்தமும் நட்பும் கூட உன்னை போல் வாழ முடியலையே என்று ஏக்கத்துடன் சொல்வதுண்டு.


உங்க அப்பா தான் எங்களுக்கு எல்லாம் ஓர் வழிகாட்டி என்று அதனால் தான் கேட்கிறேன்..நீ என்கிட்ட உன் மனசுலே தோணும் பதிலை எனக்கு சொல்லுவாயா அப்பா.. தளர்ந்து போன உடல், தள்ளாடிய படி இருக்கும் அவரின் உடல்.. மெதுவாக அவருக்கு வலித்து விடாத படி அப்பாவின் கன்னத்தோடு தனது கன்னத்தை உரசிய படி கேட்டாள்.அப்போது அவளின் கண்ணில் வந்து உஷ்ணமான நீர் அவரின் நெற்றியில் பட்டது.

என் அன்பான மகள் நீ எந்த ஒரு விஷயத்துக்கு அழக்கூடாது என்று தானே உனக்கு சொல்லி வளர்த்தேன்.. ஏன் இன்னிக்கு இப்படி என்றார்.

என்னை மன்னிச்சிடு அப்பா , என்னோட மனசுல இருந்து நம்பிக்கை குறையுது அதனால் தான்..


கவலைபடாதே மகளே எனக்கு இப்போ 72 வயசு தான் ஆகுது.. இன்னும் 21 வருஷத்துக்கு என்னோட ஆயுசு இருக்கு..நீ கவலைபடாதே.

அப்பா அவளின் கண்ணீர் பெருகியது.. இருந்தாலும் நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லியே தீரணும்.

நான் எவ்வளவு நல்லவனா இருந்தாலும் என்னோட சின்ன வயசுல யாருமே என்னை நல்லவனா நினைக்கவும் இல்லை அங்கீகாரம் செய்யவும் இல்லை.

அதனால் நான் உங்க அம்மாவ கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு ஓர் தடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணினேன்..உனக்கு தான் தெரியும் முருகன் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று.


அதனால் சாகுறதுன்னு முடிவு எடுத்தாச்சு, நமக்கு பிடிச்ச முருகனை கடைசியா ஓர் தடவை கோவிலில் போய் கும்பிட்டு விட்டு சாகலாம் என்று பத்து கிலோமீட்டர் தள்ளி இருந்த அந்த மலை கோவிலுக்கு நடந்தே போனேன் .

கோவில் உள்ளே போகும் வரை எப்படியும் செத்தே போகணும் என்று நினைச்ச எனக்கு .. அங்கே அந்த கோவிலுக்கு போன உடனே மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை உணர்ந்தேன்.

யாரும் அதிகமா இல்லாத அந்த கோவிலில் பூசாரி இருப்பா..சில நேரங்களில் அந்த கோவிலில் ஓர் சாமியார் இருப்பார். 

அவர் குளிச்சே பல வருஷமா இருக்கும், பெரிய தாடி சடாமுடி அழுக்கேறிய உடை இப்படி தான் இருப்பார். நான் கடவுளை தான் கூப்பிடுவேன்.. இவர் சாதாரண மனுஷன் தானே இவனுக்கு எல்லாம் வணக்கம் சொல்லணும் என்ற வாலிப திமிரில் அலைந்த கால கட்டத்தில் அவரை நான் மதிச்சதே கிடையாது.


ஆனால்அந்த மனிதன் எப்போதும் 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...