தினமும் தங்கத்தின்
விலை ஏறுகிறது
என்றே கூச்சலிட்டே
தங்கள் பத்திரிகை
வியாபாரத்தை தக்கவைக்கும்
தந்திரம் அறியா மக்கள்
ஏனோ..என்றோ வாங்கும்போகும்
தங்கத்தின் விலை நித்தமும்
தேடிப் பிடித்து படித்தே
வாழ்கின்றனர்.. ஆனால்
குழந்தைகளோ தங்கத்தை
பற்றிய கவலைகளை விடுத்து
வருங்காலத்தில் வரலாறு
படைக்க படிக்கின்றனர்
ஆவணத்தின் விலைய விடவும்
தங்கத்தை விடவும்
மதிப்பு மிக்கது கல்வியே
No comments:
Post a Comment