தாய் அன்பு

 பெரிய மணுஷியாக

மாறிவிட்ட கல்லூரி

பயிலும் அக்கா...

அவளின் துப்பட்டாவை

எடுத்து முகம் துடைத்து

அதை அவளின் முகத்தில்

வீசி எறிந்தான்...

ஆயினும் அவளின்

முகத்தில் பாசம் ததும்பியது

அருகில் அவனை இழுத்து

அவனின் தோளில் தலைசாய்ந்தவள்

கேள்விகளால் துளைத்தெடுத்தாள்

டேய் பஸ் எப்போடா வரும்

எனக்கு கால் ரொம்ப வலிக்குதுடா

என்கென்ன ஜோசியமா தெரியும்

என்றே அலுத்து கொண்டவன்

மீண்டும் மீண்டும் அவனை

கேள்விகளால் சீண்டினால்.

ஏய் லூசூ வாயை மூடிக்கிட்டு கிட

சத்தமான பேச்சு சுற்றுபுறத்தில்

அதிர்வலைகளை உண்டாக்கியது

அவளோ யாரை பற்றியும் கவலை படாமல் அவனின் கன்னத்தில்

ஓப்பனை செய்தாள்.

ஏண்டா இரண்டு வருஷத்துல 

காலேஜ் போகாணும் 

இன்னும் பவுடர் கூட போட தெரியலை 

அங்கலாயத்து கொண்டவள்..

சீப்பை எடுத தலைவாரி விட்டாள்

பேருந்து நிலையத்தில்

சுற்றி இருப்பவர்கள்

பற்றிய கவலைகள் இன்றி

அம்மாவை பற்றியே குறை

சொன்னான்.அதுக்கென்னடா

அதான் உனக்கு நானிருக்கேன்..

கல்யாணத்துக்கு பிறகும் என்மேல பாசமா இருப்பீயா... ஏக்கத்துடன் கேட்ட கேள்விக்கு பதிலுயைத்தாள்

நீ என்னோட 

பாசக்கார அருமை தம்பிடா...

சாலையை கடக்கும்

அனைவரும் வாய்குள்ளே

முணுமுணுத்தனர்....

காதல் படுத்தும் பாடு....

உலகம் எதைத்தான்

சரியாக புரிந்து கொண்டது

சகோதர சகோதரிகளின்

காதலில் என்றுமே

தலையீடு செய்யாத

காமம்....

விரகதாபத்தில்

துடிப்பவர்களுக்கு...

புரிய இயலாது

இந்த தாய் அன்பு

பேருந்து நிறுத்தத்தில்

ஒரமாக இருந்த கிழவி

கண்களை துடைத்து

ஆகாயத்தை பார்த்து

வேண்டிக்கொண்டாள்..

ஆண்டவா இந்த அக்கா தங்கச்சி உறவையாவது கடைசி காலம் வரை

பிரிவில்லாமல் ஓண்ணா வாழ வை

எதிர் சுவற்றில் சிரித்தபடி பாசமலர்

சிவாஜியின் பட விளம்பரம் 




No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...