சின்ன வயசுல ஓர் தடவை பீச்ல விளையாடிய நினைவு.. என்னை பீச்க்கு கூட்டிக்கிட்டு போவீங்களா.. பரிமளா கேசவ் இடம் கேட்டாள்... உங்க அம்மா அப்பாவிடம் கேட்க வேண்டியது தானே.. அவங்க ஆபிஸ்ல இருந்து 20 நாள் வடஇந்திய டூர் போய்விட்டாங்க... காலேஜ் படிக்கிற வயசு பொண்ணுகளை வீட்டில் விட்டு விட்டா.. ஆச்சரியமாக கேட்டான்.. ஏன் வயசான காலத்துல Honeymoon போறது தப்பா.. எதையும் வெட்கப்பட்டு பேசும் பரிமளாவா இது விக்கித்து போனான்.... மெளனமாக இருந்தவரிடன் மீண்டும் கேட்டாள்.. ..என்ன பதிலையே காணும்... பதில் சொல்ல முடியாமல் இந்த முறை கேசவ் வெட்கப்பட்டான்..
அப்போ நீ மட்டும் தனியாவா வீட்டில் இருக்க கவலையும் பதட்டமும் இணைந்த குரலில் கேட்டான்..
அம்மா வயித்துல கூட தனியா தானே இருந்தேன்.சில நிமிட கவலை தோய்த்த முகத்தில் புன்னகையை வரவழைக்க கஷ்டப்பட்டான்...
நாளைக்கு மதியம் சாப்பாடு வந்திடுங்க.. உங்களுக்கு பிடிச்ச மோர் குழம்பும், கத்திரிக்காய் பொரியலும் செய்து வைக்கிறேன்...
கேசவ் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்றான்...
உனக்கு எப்படி இது தெரியும் என்றவனிடம்... அதான் டீக்கடையில் போஸ்டர் அடிச்சு ஓட்டாத குறையாக சொன்னீங்களே....
ஓண்ணு புரியாமல் விழித்தான்.. நேத்து நீங்க இல்லாத நேரத்தில் உங்களை மோர் குழம்பு அப்படின்னு கேலி பேசிட்டு இருந்தாங்க..புரியுதா
இரவு எல்லாம் தூக்கம் வராமல் தவித்தான்.ச்சே பெத்தவங்க ஊருக்கு போயாச்சு.. தங்கச்சியோ பரீட்சை எழுத சென்னை போயிருக்கா.... பாவம் பரிமளாவின் நிலையை நினைத்த படியே தூங்கி போனான்... சீக்கிரமா, வீட்டிற்கு போனாள் அவளுக்கு ஏதாவது உதவி செய்யலாம்..11.00 மணியளவில் பரிமளா வீட்டிற்கு சென்றான்... வாசலில் இருந்த காலிங் பெல்லை அழுத்தினான்... ஏண்டி உன் ஆளூ சீக்கிரமா வந்துட்டான் போல யாரோ கேலி பேசும் சத்தம் கேட்டது...அட அவரு சரியான மெஷின் சரியான மதிய சாப்பாட்டுக்கு தாண்டி வருவாருன்னு பெருசா பீத்திக்கிட்டு இருந்தே.....
கதவு திறந்தது, மார்டன் டிரஸில் பரிமளா.
வந்து நின்றாள்...
ஏண்டி உன் ஆளூ வந்துட்டாரா....கேட்ட படி வாசல் அருகே வந்த மீனா..
இருவரின் முகத்திலும் வெட்கம் படர்ந்தது...சரி, சரி புது பொண்ணு வெட்கப்பட்டது போது.போய் ட்ரஸ் சேச் பண்ணிட்டு வா... அதுவரை நான் பார்த்துக்கிறேன் என்றவளை பரிமளா முறைத்து பார்த்து...செல்வியோ கண்ணை சிமிட்டி சிரித்தாள்...
கேசவன் நடுஹாலில் சென்று அமர்ந்தான். வீடு சிறிதாக இருந்தாலும் மிகவும் சுத்தமாக இருந்தது...வீட்டை ரொம்ப சுத்தமாக வைச்சீருக்கீங்க...என்ற கேசவ்... எல்லாம் உங்க ஆளூ வேலைதான்.. என்றவள் சுதாரித்து கொண்டு அதாவது உங்க ப்ரெண்ட்.. என்றாள்...பட்டுசேலை உடுத்தி புதுப்பெண் போல வந்த பரிமளா... ஏண்டி அந்த கல் நெக்லஸ் போட்டுக் வேண்டிதானே....
நீ உன் வாயை மூடிக்கிட்டு இரு மெதுவாக மீனா...
கொஞ்ச நேரம் டி.வி பார்த்துகிட்டு இருங்க.. நான் சமையல் பண்ணி முடிச்சிட்டுவேன்... ஒண்ணும் அவசியமில்லை என்றவனின் பேச்சை இடைமறித்து அப்போ ராத்திரி சாப்பாடு தான் கிடைக்கும் பரவாயில்லையா துடுக்காக கேட்ட மீனா..
கேசவ் அசடு வழிந்தான்... நீங்க தனியா இருப்பதா சொன்னதால் தான் நான் சீக்கிரம் வந்தேன்.. நான் வேணும்னா ஏதாவது காய்வாங்கிட்டு வரட்டுமா அக்கறையுடன் விசாரித்தான்...
என்னமோ வஜ்ஜிர மீன் வாங்கு மாதிரி பேசுறீங்க... சாதாரண வெண்டைக்காய், கத்திரிக்காய் தானே.. மீண்டும் சீண்டிய மீனா.. கேசவ் எரிச்சலாக உணர்ந்தான்.. அவனின் முகமாறுதல் கண்டு கவலையுற்ற பரிமளா...
No comments:
Post a Comment