அவர் பெரிய பக்திமான்

பணத்தை தேடி 

இயந்திரமாக ஓடும் 

இயந்திர மனிதர்களின் 

வெற்றுகூச்சல்களை 

புறந்தள்ளி விட்டு யாரை பற்றியும் 

புறங்கூறவும் நினையாமல் 

கடவுள் படைத்த அன்பே உருவான 

இதயத்தை தன்னுள்ளே தாங்கி

அன்பு கருணை இரக்கம்..

ஈகை என்றபடி நல்ல மனிதர்களையே

தனது தேடலாக தேடி உலகில் 

உண்மையான பாசத்தை 

தேடும் முதல் மனிதன் போன்றே 

கடவுள் இருப்பதாக சொல்லப்படும் 

இடங்களில் எல்லாம் ஓர் நல்ல 

மனிதனை தேடும் அவன் ...

எல்லையற்ற அன்பை காதலாக மனதில் 

சுமந்து கொண்டு கோவில் வாசலில் 

உலகம் அவனை கேலி செய்கிறது ..

"அவர் பெரிய பக்திமான்"



(கவிதை முழுக்க முழுக்க கற்பனையே)

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...