வயதான அந்த நல்ல மனிதர்
ஆடி ஓடி ஓய்ந்து
பணத்தையெல்லாம் நகையாக
பாண்டு பத்திரமாக மூட்டைகட்டி
பேங்க் லாக்கரில் வைத்து விட்டு
தனது வயதான காலத்தில் வீட்டின்
ஓய்வறையில் இருக்கும் போதே
பணத்தை விட பாசம் தான்
பெரியதென்ற உண்மையை
உணர்ந்த படியே யோசிக்கிறார்.......
அவருக்கே அறுபது வயதுக்கு மேல்
புரிந்த உலகில் நடைமுறை விஷயங்கள்
தனது குழந்தைகளுக்கு
எந்த வயதில் புரியும் என்ற
கவலையில்..... தொலைகாட்சி
பெட்டியில் கூட அரசியல் விவாதம்
அனல் பறக்கிறது சரவெடி போலவே
தமிழகத்தின் அடுத்த முதல்வர்...என்றே..
No comments:
Post a Comment