வயதான காலத்தில்
தனது வயதுக்கும்
அதிகமாக பாரத்தை
தள்ளிய படி நேற்று வரையில்
சைக்கிள்களில் சென்றவரை
யாருமே கண்டு கொள்ளவில்லை
ஆனால் இன்றோ கதையே வேறு...
அந்த சைக்கிள் தாத்தா
எப்போ வருவார் என்றே
தெருவில் இருக்கும் அனைவருமே..
சற்று தூரத்தில் தள்ளாடும் வயதிலும்
உழைக்க தயங்காமல் உரக்க
சத்தமிட்டவாறே...விறகு வாங்கலையோ விறகு...விறகு...
"என்னங்க என்ன விலை சொன்னாலும் வாங்கிப் போடுங்க"...
சமையல் கேஸ் இல்லைன்னா..
இந்த மாதிரி பண்ணித்தான்
விலைவாசியை சமாளிக்க முடியும்
புரிஞ்சுக்கோங்க..
அவனின் காதில் முணுமுணுக்கும்
குடும்ப தலைவி...
No comments:
Post a Comment