ராமாயணத்தை நன்றாக புரிந்து படித்தவர்கள் எல்லாம் அமைதியாகவே இருந்தனர்.
ஏனெனில் ராமனை பற்றி மீண்டும் மீண்டும் படித்து, அன்பு, பொறுமை, நிதானம், வாழ்விமல் அரசியல் அதிகாரம், பதவி, பட்டம், எல்லாம் நிலையற்றதே என்பதை நன்கு புரிந்து கொண்டு.ஆர்பாட்டமில்லாத அமைதியான வாழ்வை கடைபிடிக்க தொடங்கினர்.
எந்தவொரு மனிதனும் உதவிக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை என்று அமைதியின் உருவகமாக வாழ்ந்த ராமன்.
தன்னிடம் உதவி கேட்டு வந்த குரங்குகளுக்கு நன்மை செய்தான்.
தனது கூட்டத்தின் அறியாமையை நினைத்து, அவர்களும் நல்ல நிலைய அடைய வழி காட்டுமாறு அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வன், குரங்கு கூட்டத்தின் சார்பாக ராமனின் திருவடி பணிந்தான்.
கருணையே வடிவான தசரத மைந்தன், தனக்கென எதுவுமே கேட்காமல் தனது கூட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்ட உயரிய சிந்தனையில் வாழ்ந்த அனுமனின் கோரிக்கையை ஏற்றான்.
ஐந்து அறிவு கொண்ட அற்ப மிருகங்கள், என்றே எல்லாரும் நள்ளி நகையாடிய வானர கூட்டத்தை வழி நடத்தினான்.
வானரக்கூட்டமாகவே இருந்தாலும் சரியான வழிகாட்டி அமைந்தால் கடற்பரப்பில் மீதே அணையை கட்டும் வல்லமை, வானரங்களுக்கும் உண்டு என உலகறிய செய்தான்.
ராமனை நினைத்தாலும் துதித்தாலும், அப்படி என்ன நன்மை கிடைத்து விடும் என்ற நினைக்கும் நண்பர்களே.
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிய ஓர் அரசியல் கட்சி, பல மேடைகளில் ராமாயணத்தை விமர்சனம் செய்து தான் அரசு கட்டில் ஏறியது என்பதே வரலாறு.
அவர்களுக்கு ராமாயணத்தை முழுவதும் படிக்க நேரமும் இல்லை, மனமும் இல்லை.
மேடைதோறும் ராமனை இகழ்ந்து பேசியே, தங்களை முன்னிலையில்படுத்தினர்...
ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்தி சென்றான். சீதையோ ராமனின் நினைவாகவே இருந்தாள், அப்படிப்பட்ட உத்தமியான சீதையை ராமன் தீ குளிக்க சொன்னது நியாயமா என்றே மேடை தோறும் வீர வசனம் பேசி தங்கள் கட்சியை வளர்க்க அந்த ராமாயணதை பற்றி தான் பேசினார்கள்
ராமாயணத்தை முழுவதும் படிக்காதது, அவர்களின் குற்றமா.. அல்லது அவர்கள் தாங்கள் தெய்வமாக வணங்கும் ராமனை இகழ்ந்து பேசுவதை கேட்டு வாய் மூடி இருந்த மக்களின் குற்றமா தெரியவில்லை...
ராவணன் சீதையை கடத்தவேவில்லை, சீதையின் உருவத்தில் இருந்த இன்னொருவளே இலங்கையின் அசோக வனத்தில் இருந்தாள்.
வடமொழியின் மீது கொண்ட வெறுப்பு உணர்வால், அவர்கள் எல்லாம் வால்மீகி ராமாயணத்தை படிக்க மாட்டோம் என்றனர்.
இவர்கள் தான் தமிழ் மீது தணியாத காதல் கொண்ட தமிழ் காவலர்கள் ஆயிற்றே. குறைந்த பட்சம் கம்பராமாயணத்தை படித்து இருந்தால் கூட இந்த உண்மை தெரிந்திருக்கும்
ராமனை எதிர்த்து எத்தனை கோஷம் வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளுங்கள். அப்படியாவது உங்களின் வாயில் இருந்து ராம்..ராம்..என்று வருகிறதே..
அரசன் ஆண்டியாவதும், ஆண்டிகள் அரசனாக மாறி அரசாள்வதும் தான் சானாதனத்தை அடிப்டையாக கொண்ட பல கதைகளின் சாராம்சம்.
பல்லாண்டுகளாக உலகளவில் நடக்கும் அரசியலை வால்மீகி கதையாக சொல்லி மக்களுக்கு புரிய வைத்தார்
எனவே அரசனாக இருக்கும் போது ஆடுவதும், அரசபதவியை இழந்து விட்டால் கூப்பாடு போட்டு அழுவதும் அல்ல இந்த சனாதன கதைகள்.
உண்மையை சொன்னால் சனாதனம் என்பது மதம் அல்ல.அது ஓர் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வியல்.
அரசனாகவே இருந்தாலும் அரச சுகபோக வாழ்வு நிலையற்றது.
அரியணையில் அமர்ந்து அரசனாக முடி சூட்டிக் கொண்டால் மட்டுமே தான் மக்களுக்கு நன்மை செய்வேன் என்று நினைப்பது அல்ல சனாதன வாழ்வியல்.
ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும், பணம் பதவி பட்டம் புகழ் என எந்த நிலையில் உச்சத்தை அடைந்தாலும் என்னை விடவும் திறமையான பலர் இருக்கின்றனர் என்றே மனிதன் தன் வாழ்நாளில் அமைதியாக வாழ வழி காட்டுவதே சனாதனம்.
இந்தியா என்ற சொல்லாடல் வருவதற்கு முன்னரே பரத கண்டத்தில் தொடங்கிய இலக்கியங்கள் ஆயிரம். அவையெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்வது ஓன்றே ஓன்று தான் அரசனாக இருப்பவனை, அவன் கூட இருக்கும் புல்லுருவிகள் தான் கீழே விழ வைப்பார்கள். அவனின் எதிராளிகள் அல்ல..
பல ஆண்டுகள் அரசனாக வாழ்ந்த பலரை ஓரே நாள் ஆண்டியாக மாறும் போதும், அந்த அரசர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் கொடுப்பதே .
நீங்கள் எள்ளி நகையாடும் சானாதன ராமாயணமும் மகாபாரதமும் தரும் தன்னம்பிக்கை அளப்பரியது
ராமாயணத்தை முழுவதுமாக உணர்வு பூர்வமாக படித்து பாருங்கள்.
ராவணன் சீதை ராமன் அனுமன் என்பது எல்லாம் வெறும் கற்பனையா அல்லது அரச நிலையில் இருந்தவர்.எதுமற்ற ஆண்டியாகும் நிலை வந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் தைரியத்துடன் வாழ வழி சொல்லும் வாழ்வியலா என்பதை அறிவீர்கள்
No comments:
Post a Comment