கேஸ் விலை ஏற்றம்

லட்ச லட்சமாக 
சம்பளம் வாங்கும் 
மனிதர்கள் கூட 
சங்கடத்தில் 
நெளிகின்றனர்..
சிலிண்டர் விலை 
அறுபது ரூ கூடுதாம்...
பார்த்து பக்குவமா
சமையல் பண்ணு...
ஏனோ நிலையற்ற 
தினக்கூலிக்கு வேலை
செய்யும் அவன் தனருமை 
மனைவியிடம் சொன்னான்..
கேஸ் தட்டுப்பாடு.. ஆஸ்பத்திரி செலவு..
தங்கச்சீட்டு பணம் கட்டுவது...
விலைவாசியை பத்தியெல்லாம் 
நீ கவலையே படாத புள்ள 
காசு பணம் எவ்வளவு ஆனாலும் 
பரவாயில்லை உழைச்சு போட 
நானிருக்கேன்... வயசான 
அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் 
எந்த குறையுமில்லாம 
நீ சமைச்சு போடு...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...