இரவு கொள்ளை

 கணவனும்

மனைவியும்

ஆசையாய்

பேசிக்கொள்ள கூட

நேரமின்றி

பறந்து பறந்து

சம்பாதித்த பணம்

நகையாய் பணமாய்

வீட்டின் பீரோவில்

வைக்கப்பட்டது..

வயதான இரண்டு ஜீவன்

அப்பாவும் அம்மாவும்

முதியோர் இல்லத்தில்...

தன் வீட்டிற்கு எதிரே நின்று

திருடன் 

பத்துநாள் நோட்டமிட்ட 

தகவல் கூட 

போலீஸ் சொல்லித்தான்

தெரிந்து கொண்டாராம்...

கேட்டால் கவனிக்கவில்லை

என பதில் சொல்கிறார்

பல ஆயிரம் சம்பளம்

வாங்கும் அந்த அதிகாரி...

பல வருட உழைப்பு 

கொண்டு சென்றான்

ஓர் நாள் இரவு கொள்ளை




No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...