புத்திர பாசம்


வரத்தை 

கொடுத்து விட்டு

மனைவியின்

காலடியில் விழுந்து

புரண்டார் தசரதன்

அரசியல் காரணம் 

புத்திர பாசம்....

சபையின் நடுவே

பாஞ்சாலியின்

சேலை உருவப்பட்டது

பேசாமல் மெளனமாய்

இருந்து விட்ட மன்னன்

திருதராஷ்டிரன் அதுவும்

அரசியல் காரணம்

புத்திர பாசம்...

இன்றும் கூட

தொடருகிறது 

விளையாட்டு 

மாய விளையாட்டு

புத்திர பாசம்....

பேசாமல் இருக்கிறார்கள்

கலியுக பீஷ்மரின்

புத்திர பாசம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...