எங்கோ இருந்து கொண்டு, எங்கே எல்லாம் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமோ, அங்கே எல்லாம் தன் கருணையை பொழிந்தவர்.
பல லட்சங்கள் கடன் வாங்கி விட்டு, கட்ட முடியாமல் தவித்தவரும் கூட இன்று பல கோடிகளுக்கு அதிபதி.
அன்று பணத்தை தேடி ஓடியவர், இன்று பரதேசிகளையும் சன்னியாசியாக நாடோடி வாழ்க்கை வாழும் சிவனடியார்களை தேடி அலைகிறார்..
ஆம், யோகி ராம் சூரத் குமார் தனது பக்தரின் மனதில் ஏற்படுத்திய சலனம், மிகவும் ஆழமானது.ஆடம்பரமும் எகத்தாளமும், ஆரவாரமும் கடந்து மனதில் நிலை கொண்டது, அவரின் அமைதி தவழும் முகம்.
இன்றும் கூட அவர் நிகழ்த்தும் அதிசயங்கள் ஆயிரம், இதை சொன்னால் பைத்தியம் என்பார்கள்.
பல வருடங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்.இவரை தரிசித்து விட்டு போன பிறகு, அவர்களுக்கு பிறந்தது குழந்தைகள் இரண்டு ( இரட்டை பிறவிகள்).
சிலருக்கு கல்யாணம் ஆனதாம், சிலருக்கு நோயின் தீவிரம் குறைந்து நலம் பெற்றனர்.
தொழில் நொடிப்பு சரியாகிப் போனதால் வருடம் ஓர் முறை ஆசிரமம் வரும் அன்பர் அவர்.
ஓவ்வொரு கதைகள் சொல்லும் பக்தர்கள்.
ஆயினும் எதுவும் பேசாமல், தன் குருவின் புகழை கூட பாடாமல், மாதம் ஓர் முறை திருவண்ணாமலை வந்து மலை சுற்றி விட்டு, அவரின் சிலை எதிராக சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து கொண்டு இருந்தார் ஓருவர்.
அப்போது அவரின் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம், கண்களில் தான் எத்தனை மினுமினுப்பு.
எதுவுமே என் செயல் இல்லை, அனைத்தும் நீயே என்னும் தைரியம் அவரிடம்.
குருவே உன்னிடம் விதவிதமான கோரிக்கை வைக்கும் மனிதர் போல் அல்லாமல், உன் கண்ணீர் மல்க வேண்டி வணங்குண்கிறேன்.வரம் கொடு.....
சரியாக பேசக்கூட தெரியாமல் தவித்தவன் நான்.ஏதோ ஒருவன் தியானம் கற்றுக் கொடுத்த காரணத்தால், அபரிமிதமான ஆர்வக்கோளாறில் பல கோவில்களில் தியானம் செய்வதாக நினைத்தே அமர்ந்து கொண்டு சிறு பிள்ளை போல் அலைந்தவனை கை பிடித்து தூங்கிய குருவே.
உன்னை இன்று போல் என்றும் தொழும் பாக்கியம் கொடு.இதை விட உலகில் பெரிய இன்பம் ஏதும் உண்டோ...
அதிசயங்களை நொடியில் நிகழ்த்தி காட்டிய நீ, உன்னை பிச்சைக்காரன் என்று கேலி செய்து கொண்டாய்...
நீ என்னுள் ஏற்படுத்திய ஓர் சிறு அதிர்வே, எனது எழுத்துக்கள்...
இன்றே உனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.தனது 60-வது வயதில்.12 வயதேயான என் கைகளை பிடித்துக் கொண்டு சொன்னார்.. திருவண்ணாமலையில் ஓர் சாமியார் இருக்காரூ அவர் கையில் கொட்டங்குச்சியும் விசிறியும் தான் இருக்கும்..உனக்கோ படிப்பு சுட்டுப் போட்டாலும் மண்டையில் ஏறவே மாட்டேங்குது.
நீ பத்தாம் கிளாஸ் பாஸானா கூட எனக்கு நீ ஏதோ கலெக்டர் ஆன சந்தோஷம் கிடைக்கும் தெரியுமா.. அந்த சாமியாரை பத்தி நீ ஓர் நாள் தெரிஞ்சுக்குவே..
அவர் யாரிடமும் எதுவுமே வாங்க மாட்டார்..
தமிழ் அவ்வளவா பேச தெரியாது.ஹிந்தி இங்கிலிஷ் தான் புரியும் எப்படித்தான் திருவண்ணாமலை வந்தாரோ எனக்கு தெரியாது
அவரிடம் போயி யாராவது ஏதாவது கேட்டா.. My father will bless you அப்படின்னு வானத்தை கைகாட்டி சொல்லுவாராம்..
ஓர் வேளை நீ நல்ல படியாக படிச்சு காலேஜ் போகும் போது நான் உயிரோடு இல்லாம போனா..இந்த வசனத்தை மட்டும் நினைவு வைச்சுக்கோ..
My father is blessing you from heaven
ஆணவம் தலைக்கு ஏறும் முன்னரே உனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்...குருவே உனது அருளை விட பெரிய இன்பமும் சுகமும் உலகில் இல்லை.கோடிக்கணக்கான சொத்துகளை சேர்த்து வைத்து விட்டு கோவில் கோவிலா சென்று நிம்மதி தேடுவதை விட உனது காலடியில் இருப்பதே நலம்..
உன்னை அதிகமாக நேசிப்பவரை நீ தள்ளி வைத்து அழகு பார்ப்பாய் என்பதையும்..உனது நாமத்தை சொல்லும் இடத்தில் நீ இருப்பதாகவும் சொல்லும் வார்த்தைகளை முழுவதுமாக நம்புகிறேன்.
பேச தெரியாதவன் என்று பகடி செய்து மனிதர்கள், சிரித்த போது ஓர் காவி வேட்டி கட்டியவர் சொல்லி விட்டு போனார்.தம்பி உனக்கு எழுத்து வசப்படுது நீ அதில் முயற்சி செய் என்று.
ஏதோ நேரம் போகாமல் என்னை பாதித்த விஷயங்களை சிறு சிறு துண்டுகளாக எழுதி வைப்பதை தவிர் எனக்கு எதுவும் பெரிதாக அறிவில்லையே
உன்னை இன்றே சரணடைகிறேன்.. ஓர் வேளை எனது எழுத்துக்கள் வருங்காலத்தில் புகழ்பெற்றாலும்.அது உனது செயலே அன்றி எனது திறமை கிடையாது.
வானில் பறக்கும் பட்டத்தை இயக்கும் கயிறு நீயே யோகி ராம் சுரத் குமார்
.. யோகி ராம் சுரத் குமார்..யோகி ராம் சுரத் குமார்...ஜெய குரு ராயா....
குருவின் அருளே என் வாழ்வு....
No comments:
Post a Comment